DFCC வங்கி, அதனது eKYC (electronic-know-your-customer – இலத்திரனியல் முறையில் உங்களது வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுதல்) தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தியமைக்காக, Global Banking and Finance Review இல் Best Banking Process என்ற மதிப்புமிக்க விருதை அண்மையில் சம்பாதித்துள்ளது. இந்த விருதானது, குறிப்பாக eKYC இல் டிஜிட்டல் புத்தாக்கம், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது. இந்த முறைமையானது தங்குதடையின்றியும், பாதுகாப்பாகவும் 100% டிஜிட்டல்ரீதியாக வாடிக்கையாளர்களை புதிதாக உள்வாங்கும் வசதிக்கு வழிகோலியுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் கணக்கினை ஆரம்பிப்பதற்கு கிளைக்கு வருகை தர வேண்டிய சிரமங்களையும் போக்குகின்றது. இது தலைசிறந்த டிஜிட்டல் வழி சேவை மற்றும் வழங்கலுக்கு வித்திட்டுள்ளது.
புதிய வாடிக்கையாளர்களை உள்வாங்கும் போதும், ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்களின் விபரங்களை சரிபார்க்கும் போதும் அவர்களின் தகவல் விபரங்களை விரைவாகவும், தங்குதடையின்றியும் மற்றும் துல்லியமாகவும் டிஜிட்டல்ரீதியாக சரிபார்ப்பதற்கு மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை DFCC வங்கி கைக்கொண்டுள்ளமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த மதிப்பிற்குரிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை தராதரங்கள் தொடர்பான இணக்கப்பாட்டைப் பேணும் அதேசமயம், தனது வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையின்றிய மற்றும் தலைசிறந்த வகையில் சௌகரியமாக வங்கியில் இணைந்துகொள்ளும் அனுபவத்தை வழங்குவதில் வங்கியின் சாதனையை இது புலப்படுத்துவதுடன், டிஜிட்டல் யுகத்தில் புத்தாக்கமான, பாதுகாப்பான, நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்கும் DFCC வங்கிக்கு இடமளிக்கின்றது.
குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கின்ற மற்றும் பணிபுரிகின்ற இலங்கையர்களின் இன்றியமையாத சௌகரியத்தின் முக்கியத்துவத்தை இனங்கண்டு, DFCC வங்கியானது புதுமையான eKYC (electronic-know-your-customer) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Global Banking and Finance Review இல் வங்கி அண்மையில் சம்பாதித்துள்ள Best Banking Process விருதானது டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறன் மீதான அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. வங்கிக்கு நேரடியாக வருகை தர வேண்டிய தேவையைப் போக்கி, தங்குதடையின்றி, பாதுகாப்பான வழியில் 100% டிஜிட்டல் வழியில் வாடிக்கையாளர்களை உள்வாங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்பை இவ்விருது அங்கீகரித்துள்ளது. உலகளாவிலுள்ள இலங்கைச் சமூகத்தின் தேவைகளை இச்சேவை நிறைவேற்றுவதுடன், எவ்விதமான சிரமங்களுமின்றி இலங்கையில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு இடமளிக்கின்றது. இச்சாதனை குறித்து பெருமையுடன் கருத்து வெளியிட்ட DFCC வங்கி பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள், “தொழில்நுட்பத்தால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற டிஜிட்டல் சேவை வழங்கல் மற்றும் நிதியியல்ரீதியாக அனைவரையும் அரவணைத்தல் ஆகியவற்றில் எமது மட்டற்ற முயற்சிகளை இவ்விருது அங்கீகரிக்கின்றது. எமது நடைமுறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அப்பால், eKYC போன்ற முயற்சிகள் மற்றும் ஏனைய முயற்சிகள் டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர் சௌகரியத்தின் போக்கிற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றன. இந்த வகையில், புத்தாக்கத்தில் முன்னிலை வகித்து, எமது வாடிக்கையாளர்கள் தமது சமகால தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் பிரத்தியேகமான வங்கிச்சேவை அனுபவத்தைப் பெற்று மகிழ்வதை உறுதி செய்வதில் நாம் பெருமை கொள்கின்றோம். நீங்கள் உலகின் எப்பகுதியிலிருந்தாலும், எவராயினும் உங்களுக்கு வேண்டிய நேரத்தில் மிகவும் சௌகரியமான வழியில் DFCC வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முன்வருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக மாற்றம் கண்டு வருகின்ற தொழில்நுட்பவியல் நிலப்பரப்பு மற்றும் டிஜிட்டல் அறிவுமிக்க தலைமுறையின் விருப்பங்கள் ஆகியவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு eKYC வசதியை DFCC வங்கி மூலோபாயரீதியாக கைக்கொண்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டி, அவர்கள் எங்கிருந்தும், எப்போதும் வங்கிச்சேவைகளை முன்னெடுக்கச் செய்ய வேண்டும் என்ற வங்கியின் பேராவல் இதற்கு உந்துசக்தியளித்துள்ளது. eKYC முறையை கைக்கொள்வதனூடாக எவரும் கிளையொன்றுக்கு நேரடியாக வருகை தர வேண்டிய சிரமத்தைப் போக்கி, பருவ வயதினர் அடங்கலாக அனைவரும் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை அல்லது இலத்திரனியல் அடையாள அட்டையை உபயோகித்து, இப்புரட்சிகரமான தொழில்நுட்பத்தின் உதவியுடன், எவ்விதமான சிரமங்களுமின்றி கணக்கினை ஆரம்பிக்க முடியும்.
இத்தொழில்நுட்பமானது DFCC வங்கியின் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கும், அதிகரித்துச் செல்கின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற புலம்பெயர்ந்தோர் தளத்திற்கும் ரூபாவிலும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களிலும் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு வியத்தகு வகையில் வங்கிச்சேவைக்கு வழிகோலியுள்ளது. காகித படிவங்களின்றிய போக்கினைப் பின்பற்றும் பண்பினை ஒட்டுமொத்த நடைமுறையும் பிரதிபலிப்பதுடன், நேரலை முகவரின் உதவி மூலமாக வாடிக்கையாளர்களுக்கான நன்மையானது சீரான மற்றும் பாதுகாப்பான வழியில் கணக்கை ஆரம்பிக்கும் அனுபவத்தையும் உறுதி செய்கின்றது.
DFCC வங்கியில் eKYC தொழில்நுட்பமானது OTP முறை சரிபார்ப்பு குறியீட்டை சேமித்து பின்னர் உபயோகிக்கும் முறைமை, நேரலை கண்டறிதலுடன் வீடியோ வழியில் சரிபார்ப்பு மற்றும் AML இணக்கப்பாட்டு கணக்கு அங்கீகார நடைமுறை ஆகியன உள்ளிட்ட பல்வகைப்பட்ட பயன்மிக்க பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இது பூர்த்தி செய்யப்பட்டவுடன், இந்த முழுமையான டிஜிட்டல் மாற்றம் வாடிக்கையாளர்களை உள்வாங்கும் செயல்பாட்டை சீர்படுத்தி, டிஜிட்டல் வங்கிச்சேவையை உடனடியாகவே செயல்படுத்திக்கொள்ள இடமளித்து, டெபிட் அட்டைகள் போன்ற இதனுடன் தொடர்புபட்ட ஏனைய சேவைகளையும் பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றது.
இந்த வகையில், முக்கியமான நடைமுறைகள் மத்தியில் புதுமையான தொழில்நுட்பத்தை உட்புகுத்துவது, வாடிக்கையாளர்களை உள்வாங்குவதில் உள்ள சவால்களைப் போக்கி, வங்கியின் நிலைபேற்றில் மூலோபாயத்துடன் ஒத்திசையும் வகையில், DFCC வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தில் புதிய யுகமொன்றுக்கு வித்திட்டுள்ளது. eKYC இன் பயனாக, கிளைகளுக்கு நேரடியாக வருகை தர வேண்டிய அசௌகரியங்களைப் போக்கி, பெறுமதியான நேரத்தை மீதப்படுத்தி, கூடுதலான அளவில் நிலைபேணத்தகு மற்றும் சூழல்நேய வங்கிச்சேவை அனுபவத்திற்கு பங்களிக்கின்றது. நடைமுறைரீதியான பயன்களுக்கு அப்பால், இம்முயற்சியானது டிஜிட்டல் வசதிகளுக்கு இடமளித்தல் மற்றும் நவீன வங்கிச்சேவைத் துறையில் உள்ள தேவைகளை தங்குதடையின்றி ஒருங்கிணைத்து, நிதியியல் சேவைகளை வழங்குவதில் DFCC வங்கியின் ஸ்தானத்தை மேலும் உறுதியாக்கியுள்ளது.