DFCC வங்கியானது ‘இலங்கையில் மிகவும் போற்றப்படும் நிறுவனங்கள் 2022 தரப்படுத்தலில்’ பெயர் கௌரவிக்கப்பட்ட முதல் 5 நிறுவனங்களில் ஒன்றாக மதிப்புமிக்க அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது

36
DFCC வங்கி விருதை ஏற்றுக்கொண்ட காட்சி. இடமிருந்து வலமாக - நிஸ்தார் காசிம், பிரதம ஆசிரியர்- Daily FT; மாண்புமிகு கட்சுகி கோட்டாரோ, இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் துணைத் தலைவர்; சிந்திகா அமரசேகர, பிரதம நிதி அதிகாரி - DFCC; அசங்க உடுவெல, பிரதம செயற்பாட்டு அதிகாரி - DFCC; ஷனில் பெர்னாண்டோ, தலைவர் ICC Sri Lanka; ஸஹாரா அன்சாரி FCMA(UK), CGMA, இலங்கைக்கான தலைமை அதிகாரி, AICPA மற்றும் CIMA.

அபிவிருத்தி மற்றும் வர்த்தக வங்கிச்சேவை ஆகிய இரண்டிலும் 68 வருட கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான DFCC வங்கி, பெருமதிப்பிற்குரிய CIMA-ICCSL-Daily FT இன் ‘இலங்கையில் மிகவும் போற்றப்படும் முதல் 5 நிறுவனங்கள்’ (Most Admired Companies of Sri Lanka 2022) விருதுகள் மற்றும் தரப்படுத்தலில் “பெயர் கௌரவிக்கப்பட்ட முதல் 5 நிறுவனங்களில்” (Top 5 Honourable Mentions) ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டு, மற்றுமொரு மகத்தான சாதனை இலக்கினை எட்டியுள்ளது. இந்த அங்கீகாரமானது மேன்மை மற்றும் புத்தாக்கத்திற்கான DFCC வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பு மற்றும் அது சேவைகளை வழங்குகின்ற சமூகங்களில் அது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கத்தை நிரூபிக்கிறது.

‘இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்கள்’ (Most Admired Companies of Sri Lanka) முயற்சியானது சமூகம் மற்றும் வணிகத்தின் மீதான அவற்றின் முழுமையான தாக்கத்தை பிரதிபலிக்கும் பல்வேறு குணாதிசயங்களில் நிறுவனங்களின் மீதான தீவிரமான மதிப்பீடு மற்றும் கணிப்பீட்டை உள்ளடக்கியுள்ளமையால், மிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. CIMA அங்கத்தவர்கள் அணி (CGMAs) முன்னெடுத்த முதற்கட்ட நிதியியல் மதிப்பாய்வுக்குப் பின்னர், KPMG நிறுவனத்தைச் சேர்ந்த அணியொன்று, மதிப்பீட்டுப் புள்ளிகளை தீவிரமாக ஆராய்ந்து, சரிபார்த்து, அடுத்த சுற்றுக்கு முதல் 20 நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கிறது. இதற்கு அடுத்த கட்டத்தில், நிறுவனங்கள் தமது சாதனைகள் மற்றும் நடைமுறைகளை நடுவர் குழுவொன்றிடம் முன்வைக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த இடைத்தொடர்பாடும் விளக்கக்காட்சி முறைமையானது முறையே அந்த நிறுவனங்களின் சிரேஷ்ட நிர்வாக முகாமைத்துவ அணிகளின் நேரடியான பங்கேற்புடன் முன்னெடுக்கப்படுவதுடன், இது போட்டிக்கு ஒரு அற்புதமான பரிமாணத்தைச் சேர்ப்பிக்கிறது. திறமைசாலிகளை ஈர்த்தல் மற்றும் தக்கவைத்தல், தயாரிப்பு மற்றும் சேவையின் தரம், புத்தாக்கத்திறன், சமூகத்துடனான ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிறுவன ஆட்சி நிர்வாகக் கோட்பாடுகள் போன்ற கூறுகளை ஆராய்ந்து, சிரேஷ்ட நிர்வாக முகாமைத்துவ அணிகளின் விளக்கக்காட்சிகளை நடுவர் குழு சுயாதீனமாக மதிப்பீடு செய்கிறது. இந்த நிறுவனங்களின் நேர்மை தவறாமை தொடர்பான வரலாறு மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும் முக்கியமான காரணிகளாகும்.

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான மிகவும் போற்றப்படும் நிறுவனங்களின் தரவரிசையில் பெயர் கௌரவிக்கப்பட்ட முதல் 5 நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். DFCC வங்கி அதன் நிதியியல் பெறுபேற்றுத்திறன் மற்றும் மிகவும் வலுவான நிறுவனங்களைக் கூட சோதனைக்கு உட்படுத்திய ஒரு ஆண்டில், எம்முடன் தொடர்புபட்ட தரப்பினர், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பரந்த சமூகத்தினருக்கு நாம் வழங்கியுள்ள மிகுந்த பெறுமதிக்காக தனித்துவமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த அங்கீகாரம் முழுமையான முன்னேற்றத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பையும், சவால்களுக்கு மத்தியில் தளைத்தோங்கும் திறனையும் குறிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கியின் இந்தச் சாதனையை நோக்கிய பயணமானது, சந்தையில் அதன் ஸ்திரமான நிலை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களின் அங்கீகாரம் ஆகியவற்றால் சிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கத்திற்கான அர்ப்பணிப்புடன், DFCC வங்கியானது “அனைவருக்கும் ஏற்ற வங்கியாக” திகழ முயற்சிக்கிறது. அத்துடன், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளை பரந்துபட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிரொலிக்கச் செய்கிறது.

இலங்கையில் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களுக்கான பெருமதிப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதேவேளை, இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கட்சுகி கோட்டாரோ அவர்கள் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார். இலங்கையில் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களை அங்கீகரித்து மதிப்பீடு செய்வதில் அவர்களின் பங்களிப்பினை அங்கீகரித்து, புகழ்பெற்ற நடுவர்கள் அணியும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது. 

இலங்கையின் சமூக கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு வங்கி என்ற வகையில், DFCC வங்கியின் “பெயர் கௌரவிக்கப்பட்ட முதல் 5 நிறுவனங்களில்” ஒன்று என்ற அங்கீகாரம், நிலைபேண்தகு நடைமுறைகளை மேம்படுத்துதல், புத்தாக்கதை வளர்த்தல் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதில் அதன் அர்ப்பணிப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் சாதனையானது DFCC வங்கியின் போற்றத்தக்க பாராட்டுக்களுக்கு மற்றுமொரு புகழாரமாக அமைந்துள்ளதுடன், அதன் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களிலும் மேன்மையை நிலைநாட்டி, நிதித்துறையில் உண்மையான முன்னோடி என்ற அதன் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here