DFCC இணைய வங்கிச்சேவையினூடாக நிலையான வைப்பொன்றை ஆரம்பித்து, 0.5% கூடுதல் வட்டியைப் பெற்றிடுங்கள்

19

இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவைப் புரட்சியில் முன்னோடியான DFCC வங்கி, DFCC இணைய வங்கிச்சேவையினூடாக ஆரம்பிக்கப்படுகின்ற அனைத்து நிலையான வைப்புக்களுக்கும் 0.5% கூடுதல் வட்டியை வழங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டுகின்றது. உங்களுடைய சௌகரியத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள, DFCC இணைய வங்கிச்சேவை உள்ளிட்ட எமது டிஜிட்டல் வழங்கல் வழிமுறைகள், எங்கேயும், எப்போதும் தங்குதடையின்றி, சௌகரியமாக நீங்கள் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்கின்றன. இந்த கவர்ச்சியான சலுகையானது டிஜிட்டல் வங்கிச்சேவையை கைக்கொள்வதற்கு உங்களை ஊக்குவித்து, அதிகபட்ச சௌகரியம், பாதுகாப்பு மற்றும் இலகுவான பரிவர்த்தனை ஆகியவற்றை வழங்குகின்றது. குறைந்தபட்ச தொகையாக ரூபா 10,000 ஐக் கொண்ட நிலையான வைப்புக்களுக்கு DFCC வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இவ்வசதி கிடைக்கின்றது.   

DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டவே நாம் விரும்புகிறோம், அதன் மூலமாக எமது டிஜிட்டல் வழங்கல் மார்க்கங்களின் சாத்தியங்களையும், சௌகரியத்தையும் அவர்கள் முற்றாக அறிந்து கொள்ள முடியும். ஆகவே, தங்குதடையின்றிய அனுபவத்துடன், 100% காகித படிவங்களற்ற செயல்முறையுடன், நிகழ்நேரத்தில் நிலையான வைப்பொன்றை ஆரம்பிக்குமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இம்முயற்சியானது எமது நிலைபேற்றியல் மற்றும் பசுமை சார்ந்த முயற்சிகளுடன் ஒன்றியுள்ளதுடன், இதன் மூலமாக காகித பாவனையில் நாம் தங்கியிருப்பதைக் குறைத்து, பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் கிளையொன்றுக்கு பிரயாணம் செய்ய வேண்டிய தேவையையும் போக்கியுள்ளோம். வட்டி வீதங்கள் வீழ்ச்சி கண்டு வருகின்றமைக்கு மத்தியிலும், இந்த கவர்ச்சியான வட்டி வீதத்தின் நன்மையை தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுவதுடன், தமது சேமிப்பிற்கு சிறந்த பிரதிபலனை அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.   

DFCC வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் வாடிக்கையாளர் உள்வாங்கல் முறைமையை உபயோகித்து, வங்கிக்கு வருகை தராது, 100% காகித படிவங்களற்ற செயல்முறையுடன் புதிய வாடிக்கையாளர்களும் இந்த அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உள்வாங்கல் நடைமுறை முற்றுப்பெற்றவுடன், புதிய வாடிக்கையாளர்களும் DFCC இணைய வங்கிச்சேவையைப் பயன்படுத்தி, நிலையான வைப்புக்களை ஆரம்பிக்கும் போது வெளியிடப்பட்டுள்ள வீதத்திற்கு மேலாக 0.5% வட்டி வீதத்துடனான இந்த விசேட சலுகையை அனுபவிக்க முடியும்.

நிலையான வைப்பினை இன்றே ஆரம்பிப்பதற்கு https://online.dfcc.lk/DFCCRetail/servletcontroller இற்குச் சென்று, DFCC இணைய வங்கிச்சேவைக்குள் உள்நுழையுங்கள் அல்லது புதிய வாடிக்கையாளராக DFCC வங்கியின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு https://applyonline.dfcc.lk/ இற்கு செல்லுங்கள். மேலதிக விபரங்கள் அல்லது உதவிக்கு 0112 350000 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள் அல்லது www.dfcc.lk இற்குச் செல்லுங்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here