DFCC ஆலோக, DOC990  உடன் இணைந்து நாடளாவியரீதியில் மகளிருக்கான மருத்துவ சிகிச்சை முகாம்களை ஆரம்பிக்கிறது

30

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வலுவூட்டல் கொண்ட டிஜிட்டல் சுகாதார சேவை தீர்வான Doc990 உடனான தனது கூட்டாண்மையை மகளிருக்கான தொடர் மருத்துவ சிகிச்சை முகாம்களுடன் பெருமையுடன் மேம்படுத்தியுள்ளது. DFCC வங்கியின் அனுராதபுரம் கிளையில் ஆகஸ்ட் 16 ஆம் திகதி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அங்குரார்ப்பண ஆலோக மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றதுடன், DFCC ஆலோகவுடன் மகளிர் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தை இது குறித்து நிற்கின்றது.

இலங்கை முழுவதிலும் உள்ள மகளிரை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நிதி மற்றும் வாழ்க்கை முறை தீர்வான DFCC ஆலோக, முதியவர்களானாலும் சரி அல்லது சிறுவர்களானாலும் சரி, மகளிர் தம்மைப் பராமரிப்பில் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. எனவே, Doc990 உடனான கூட்டாண்மை மூலம், DFCC ஆலோக இப்போது பல்வேறு டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகளை வழங்குவதுடன், அவற்றை வீட்டிலிருந்தே மிகவும் சௌகரியமான 24 மணி நேரமும் அணுகலாம்.

அதன்படி, DFCC ஆலோக கணக்கு வாடிக்கையாளர்கள், தமது குடும்பத்தின் மூன்று அங்கத்தவர்கள் வரை, துறைசார் தகமைவாய்ந்த வைத்தியர்களுடன் வீடியோ வழியில் மருத்துவ ஆலோசனைகளை தங்குதடையின்றி பெற்றுக்கொள்ள முடியும். வைத்தியசாலை மருத்துவரைச் சந்திப்பதற்கான கட்டணம் மற்றும் முற்பதிவுக் கட்டண தள்ளுபடிகள் அடங்கலாக, நடமாடும் ஆய்வுகூட வசதி மற்றும் பல சுகாதார சேவை வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். சுகாதார மற்றும் வீட்டு அடிப்படையிலான தீர்வுகளின் இந்த ஒருங்கிணைப்பு, DFCC ஆலோக கணக்கு வாடிக்கையாளர்கள் தமக்கு தேவைப்படும் போது அவர்களுக்குத் தேவையான சுகாதார கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது. மகளிர் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை அங்கீகரித்து, DFCC ஆலோக கணக்கு வாடிக்கையாளர்கள் இப்போது ஆதரவளிக்கப்படும் சமூகத்தினூடாகப் பயனடையலாம் என்பதுடன், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான வரப்பிரசாதங்கள் மற்றும் நன்மைகளை அணுகலாம்.

DFCC வங்கியின் அனுராதபுரம் கிளையில் நடைபெற்ற ஆலோக மருத்துவ சிகிச்சை முகாம் மகளிர் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மீதான வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. 100 க்கும் மேற்பட்ட ஆலோக கணக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த மகளிர் கலந்துகொண்டனர். அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற தனியார் சுகாதார சேவை நிலையமான கனோலா மருத்துவமனையால் நடத்தப்பட்ட இலவச சுகாதார பரிசோதனைகளை அவர்கள் பெற்றனர். இந்த சிகிச்சை ஆய்வுகளில் விரிவான சுகாதார மதிப்பீடுகள், கண்பார்வை சோதனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இலவச மருத்துவ ஆலோசனைகள் ஆகியவையும் அடங்கியிருந்தன.

கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் அமுலாக்கத்தின் துணைத் தலைவர் ஷேரா ஹசன் அவர்கள் கூறுகையில், “DFCC ஆலோகவைப் பொறுத்தவரையில் இது ஒரு பாரிய சாதனை இலக்கு என்பதுடன், எமது ஆலோக மருத்துவ சிகிச்சை முகாமுக்கு கனோலா மருத்துவமனையின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் அதே வேளையில் எங்கள் கூட்டாளராக இருக்கும் Doc990 க்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம். DFCC இல், மகளிர் தமது கனவுகள் மற்றும் இலக்குகளை நனவாக்குவதற்கு வலுவூட்டுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதற்கு முக்கிய தேவை சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வே. அதனாலேயே இந்த முயற்சியை நாங்கள் தொடங்கியுள்ளதுடன், இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற ஒரு திட்டமாக அமையும்,” என்று குறிப்பிட்டார்.

“இந்த முயற்சிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், Doc990 இன் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியான ஜனித் பீரிஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், ‘புத்தாக்கமான மற்றும் சௌகரியமான சுகாதாரத் தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் வகையில், Doc990 ஆனது, நிதி மற்றும் வாழ்க்கைமுறை சேவைகளில் முன்னோடியான DFCC ஆலோகாவுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளது. ஒன்றாக இணைந்து, இலங்கையில் உள்ள மகளிருக்கு தொடர்ச்சியான, பயனர்நேய டிஜிட்டல் சுகாதார சேவைகளை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அதிநவீன டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் மகளிருக்கு வலுவூட்டுவதில் Doc990 மகிழ்ச்சியடைவதுடன், சுகாதாரம் தொடர்பான எந்தவொரு நிலைமையையும் திறன்மிக்க வழியில் சௌகரியத்துடன் நிர்வகிக்கும் நம்பிக்கையை இது அவர்களுக்கு ஏற்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி மற்றும் DOC990 இன் பல உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். DFCC ஆலோக மற்றும் Doc990 ஆகியவற்றுக்கு இடையேயான இந்த கூட்டு முயற்சியானது, நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு சேவை செய்ய அர்த்தமுள்ள, தொடர் மருத்துவ சிகிச்சை முகாம்களின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. மகளிருக்கு வலுவூட்டுவதற்கும், உயர்தர நிதிச் சேவைகள் மற்றும் பிற நன்மைகள் மற்றும் சலுகைகளை DFCC அலோகா மூலம் அவர்களுக்கு வழங்குவதற்கும் DFCC வங்கியின் உறுதிப்பாட்டை இக்கூட்டாண்மை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here