DFCC ஆலோக, பெண் தொழில்முயற்சியாண்மையின் மகத்துவத்தைக் கொண்டாடியுள்ளது

46

பெண்களை மையமாகக் கொண்ட மொத்த வங்கிச்சேவை முன்மொழிவான DFCC ஆலோக, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் தொழில்முயற்சியாண்மையைக் கௌரவித்து, ஆதரிக்கும் பிரத்தியேக நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. “DFCC ஆலோகவின் பெண் தொழில்முயற்சியாண்மையின் மகத்துவத்தின் கொண்டாட்டம்” (DFCC Aloka Celebrates Women Entrepreneurial Excellence) என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வானது 2024 மார்ச் 26 அன்று DFCC வங்கியின் தலைமை அலுவலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. பல முன்னணி பெண் தொழில்முயற்சியாளர்கள், DFCC பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், DFCC வங்கியின் பணியாளர்கள், மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் (Women’s Chamber of Industry and Commerce -WCIC) தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களாகவுள்ள DFCC வாடிக்கையாளர்கள் என மதிப்பிற்குரிய விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மதிப்பிற்குரிய விருந்தினர்கள் மத்தியில், WCIC இன் தலைவர் அனோஜி டி சில்வா, சாதனைப் பெண் தொழில்முயற்சியாளர்களான ஒட்டாரா குணவர்த்தன, தானியா பொலொன்னொவிட்ட மற்றும் நயனா கருணாரட்ன, DFCC வங்கியின் தலைவர் ஜெகன் துரைரட்ணம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.           

இலங்கையில் பெண்களின் தலைமையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதன் தூரநோக்கு குறித்தும் தனது செய்தியை வழங்கிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங் அவர்கள் DFCC ஆலோக திட்டத்தின் வகிபாகம் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இலங்கையில் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களுடைய சமூகங்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு உதவுவதற்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகின்ற பல நிகழ்ச்சித்திட்டங்களில் இதுவும் ஒன்று என்பதைக் குறிப்பிட்டார். அவர் இது குறித்து வலியுறுத்துகையில், “முன்னர் ஒரு போதும் இடம்பெற்றிராத துறைகளில், அதாவது புதிய துறைகளில் பெண்கள் இடம்பெறும் போது, உங்களுக்கு அங்கு இடமில்லை என எவரும் கூறுவதற்கு இடமளிக்க வேண்டாம். கேள்வி எழுப்புங்கள், ஆபத்துக்களைக் கையிலெடுங்கள், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள், மற்றும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் செல்லும் இடமெங்கும் பிரகாசிப்பதற்கு ஆலோகவை எப்போதும் கொண்டிருங்கள். நாங்கள் முயற்சி செய்து, சவால்விடுத்து மற்றும் பாரிய கனவை முன்னெடுக்கும் போது மாத்திரமே உலகம் மாற்றமடையும். நாம் அண்ணாந்து பார்த்து, எமது தொடுவானத்தின் தூரத்தை எட்டினால் மாத்திரமே, எமக்காகவும், எமது மகள்மார் மற்றும் மகன்மாருக்காகவும் நாம் எட்டுகின்ற இடங்களை எம்மால் மாற்ற முடியும்,” என்று குறிப்பிட்டார்.    

கலகலப்பான குழுமட்ட கலந்துரையாடல் மற்றும் தொடர் உரைகள் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது, உத்வேகத்தை அளிக்கும் ஒன்றாக மாறியதுடன், பெண் தொழில்முயற்சியாளர்களின் மகத்தான சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவர்களின் நெகிழ்திறன், புத்தாக்கம் மற்றும் வணிகத்திற்கும், சமுதாயத்திற்கும் வழங்கியுள்ள விலைமதிப்பற்ற பங்களிப்புக்கள் ஆகியவையும் இந்நிகழ்வில் போற்றப்பட்டன. வணிகத்தில் பெண்கள் முகங்கொடுக்கின்ற சவால்கள் குறித்து குழுநிலை கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன், நிதியியல் வலுவூட்டல் குறித்த மூலோபாயங்களும் பகிரப்பட்டன. வழிகாட்டுதல் மற்றும் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஆலோக திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் சுட்டிக்காட்டுவதற்கு இந்த வாய்ப்பினை DFCC வங்கி பயன்படுத்திக்கொண்டதுடன், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதில் தனது அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்தியது. DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் DFCC ஆலோக மற்றும் இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை முன்னெடுப்பதில் பெண் தொழில்முயற்சியாளர்களின் முக்கிய வகிபாகத்தை வங்கி எவ்வாறு நோக்குகின்றது என்பது குறித்தும் பிரதான உரையொன்றையும் நிகழ்த்தினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here