DFCC ஆலோக, கண்டி சிறுவர் மற்றும் மகளிர் பணியக பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போற்றிக் கௌரவிக்கும் நிகழ்வை நடாத்தியுள்ளது

22

தனது சர்வதேச மகளிர் தின செயல்பாடுகளின் தொடர்ச்சியாக, பெண்களை மையமாகக் கொண்ட DFCC வங்கியின் வங்கித்தீர்வான DFCC ஆலோக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் விசேட நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கண்டி பொலிஸ் தலைமையலுவலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வகிபாகம் மற்றும் எமது சமூகங்களைப் பாதுகாப்பதில் அவர்களுடைய அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அங்கீகாரமளிக்கப்பட்டது.   

மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற இந்நிகழ்வில், குழுநிலை கலந்துரையாடல் அடங்கலாக பல்வேறு செயல்பாடுகள் அடங்கியிருந்ததுடன், பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பரிசோதகர் தெவிந்தி விக்கிரமசிங்க அவர்கள் இந்நிகழ்வு தொடர்பில் பாராட்டி, நன்றிதெரிவிக்கும் முகமாக DFCC வங்கியின் முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.        

DFCC வங்கியின் உப தலைவரும், Pinnacle திட்டமிடல் மற்றும் அமுலாக்கத்திற்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் உரையாற்றியதுடன், மென்திறன்களை மேம்படுத்துவதற்காக திறன்கள் மேம்பாட்டு செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் DFCC ஆலோகவின் ஆற்றலைச் சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் அறிவு, தலைமைத்துவ விருத்தி மற்றும் தொடர்பாடல் திறன்கள் போன்ற பல்வகைப்பட்ட விடயங்கள் இந்த நிகழ்வுகளில் உள்ளடங்கியுள்ளதுடன், DFCC ஆலோக மூலமாக அனைத்தும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆலோக வாடிக்கையாளர்களின் பல்வகைப்பட்ட நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முழுமையான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் DFCC ஆலோகவின் அர்ப்பணிப்பையும் அவர் வலியுறுத்தினார்.      

முழுமையான வங்கித்தீர்வான DFCC ஆலோக, அனைத்து வருமான மட்டங்களையும், வகுப்புக்களையும் சார்ந்த பெண்களுக்கு தீர்வுகளை வழங்குவதுடன், வேறுபட்ட தேவைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட பல்வகைப்பட்ட பெண்களையும் உள்ளடக்குவதை உறுதி செய்கின்றது. மாணவர்கள், தொழில் புரிகின்றவர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் என பெண்கள் முகங்கொடுக்கின்ற தனித்துவமான சவால்களுக்கு தீர்வாக, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு உதவி, பல்வகைப்பட்ட வாழ்க்கைமுறை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற தயாரிப்புக்களை DFCC ஆலோக அறிமுகப்படுத்தியுள்ளது.

DFCC வங்கி பற்றிய விபரங்கள்

DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான  நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ மற்றும் Euromoney இன் ‘Market Leader and Best in Service in Cash Management 2022 and 2023’ உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here