DFCC ஆலோகவின் டயமன்ட் அனுசரணையுடன் இடம்பெறவுள்ள WCIC Prathibhabisheka, பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2023 நிகழ்வு

25

DFCC வங்கியின் பெண்களை மையமாகக் கொண்டு அவர்களுக்கு வலுவூட்டுகின்ற வங்கிச்சேவை முன்மொழிவான DFCC ஆலோகா, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட WCIC Prathibhabhisheka – பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2023 நிகழ்வுக்கான டயமன்ட் அனுசரணையாளராக முக்கிய ஸ்தானத்தை வகிக்கவுள்ளது. நிதியியல் வலுவூட்டல் மற்றும் அரவணைப்பு ஆகியவற்றில் வங்கியின் அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. வங்கிச்சேவையை வழங்குவதற்கும் அப்பால் சென்று, DFCC ஆலோக இலங்கையில் பெண்களுக்கு சாதகமான மாற்றத்திற்கான உந்துசக்தியாக திகழ்வதுடன், அணுகக்கூடிய மற்றும் புத்தாக்கமான நிதி மற்றும் நிதி அல்லாத தீர்வுகளை வழங்குகிறது. தொழில்முயற்சியாளர்களை ஆதரிப்பதில் இருந்து நிதியியல் அறிவை மேம்படுத்துதல் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட பிரத்தியேகமான வங்கித் தீர்வுகளை வழங்குதல் வரை, ஒவ்வொரு பெண்ணின் நிதியியல் சுதந்திரம் மற்றும் சுபீட்சத்திற்கான பயணத்தில் நம்பகமான கூட்டாளராக DFCC ஆலோக தன்னை அர்ப்பணித்துள்ளது.

பெண் தொழில்முயற்சியாளர்களின் முக்கிய வகிபாகத்தை அங்கீகரித்து, மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்துடன் (Women’s Chamber of Industry and Commerce – WCIC) தீவிரமான ஈடுபாட்டுடன் DFCC வங்கி செயல்பட்டு வருகின்றது. பெண்களுக்கு வலுவூட்டுவதில் வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பு WCIC ஆல் முன்வைக்கப்பட்ட நோக்கத்துடன் சிறப்பாக ஒத்திசைகின்றது. அதன்படி, பெண்களை வலுவூட்டுவதற்கு அழைப்பு விடுக்கும் அதன் நிலைபேண்தகமை மூலோபாயத்தால் முன்னெடுக்கப்பட்டு, நிலைபேணத்தகு மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு, DFCC வங்கியானது WCIC Prathibhabisheka – பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2023 நிகழ்வை சாத்தியமாக்குவதற்கு WCIC உடன் கூட்டு சேர்ந்துள்ளது. DFCC வங்கியானது ஏனைய சம்மேளனங்கள், சங்கங்கள், நிதி மற்றும் நிதி சாராத நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பெண்களுக்கான நிதியியல் மற்றும் சமூக வலுவூட்டலுக்கு ஆதரவளிக்கும் பிற தரப்பினருடன் ஒத்துழைக்கிறது. இந்த கூட்டு அணுகுமுறையானது DFCC வங்கியின் நிலைபேண்தகமை முயற்சிகள் மற்றும் பெண்களுக்கு வலுவூட்டும் திட்டங்களின் பரிமாணம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.

அதன்படி, பெண் தொழில்முயற்சியாண்மையின் மாபெரும் கொண்டாட்டமான WCIC Prathibhabhisheka – பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2023, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளதுடன், விருது வழங்கும் வைபவம் 2024 பெப்ரவரியில் நடாத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சார்க் பிராந்தியத்திலுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களின் மகத்தான சாதனைகளை அங்கீகரித்து, கௌரவிக்கும் நிகழ்வாக இது அமையும்.

DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “டயமன்ட் அனுசரணையாளராக DFCC ஆலோகவின் வகிபாகம் நிதியியல் வலுவூட்டல் மற்றும் அரவணைப்பை வளர்ப்பதில் எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. WCIC Prathibhabhisheka போன்ற முயற்சிகளை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது பெண் தொழில்முயற்சியாளர்களின் சாதனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதுடன், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கு அவர்களின் பங்களிப்புக்களையும் வெளிக்கொண்டு வருகின்றது. பெண்கள் செழித்து அவர்களின் முழுமையான திறனை அடையக்கூடிய சூழலை உருவாக்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

DFCC ஆலோகவின் தீர்வுகள் அனைத்து வருமான மட்டங்கள் மற்றும் பிரிவுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தனித்துவமான தேவைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட பலதரப்பட்ட பெண்களை அரவணைப்பதை உறுதி செய்கிறது. மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் உட்பட பெண்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பல்வேறு வாழ்க்கை முறை தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை DFCC ஆலோக அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதியியல் உதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மத்தியில் நிதியியல் அறிவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளில் DFCC ஆலோக தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், தகவலறிந்த நிதியியல் தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறது. தகவல்களைப் பெறுவதற்கான அணுகல் வலுவூட்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை உணர்ந்து, பெண்கள் தங்கள் நிதியைக் கட்டுப்படுத்தவும், தமது நோக்கங்களை நிறைவேற்றவும் தேவையான வளங்களை வழங்க DFCC ஆலோக உறுதிபூண்டுள்ளது.

WCIC இன் தலைவியான அனோஜி டி சில்வா அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “WCIC Prathibhabhisheka – பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2023 க்கு டயமன்ட் அனுசரணையாளராக DFCC ஆலோகவை கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண்களை வலுவூட்டுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு எங்கள் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களை அங்கீகரித்து, கொண்டாடுவதற்கு வெற்றிகரமான ஒத்துழைப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

DFCC ஆலோக மற்றும் WCIC Prathibhabisheka – பெண் தொழில்முற்சியாளர் விருதுகள் 2023 ஆகியன இணைந்து, WCIC, Doc990, ஏனைய பிராந்தியங்களில் உள்ள உள்ளூர் மகளிர் சம்மேளனங்கள், DFC, கூட்டாளர் சுப்பர்மார்க்கெட்டுக்கள், துணைநிற்கும் வெற்றிகரமான பெண் தொழில் முயற்சியாளர்கள், இலங்கை சார்க் அலகு, மற்றும் சித்தாலேப குழுமம் உட்பட இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்கு பங்களிக்கின்ற பல கூட்டாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றன. இந்த கூட்டு முயற்சியானது, இலங்கை மற்றும் சார்க் பிராந்தியத்தில் உள்ள பெண்களுக்கு மிகவும் அரவணைக்கும் மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க உதவுகிறது.

இடமிருந்து வலமாக: ஷேரா ஹசன் – துணைத் தலைவர் மற்றும் Pinnacle சேவை, கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் அமுலாக்கத்தின் தலைமை அதிகாரி, ஆசிரி இத்தமல்கொட – சிரேஷ்ட துணைத் தலைவர் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் பிரிவுக்கான தலைமை அதிகாரி – DFCC வங்கி, நில்மினி குணரத்ன- துணைத் தலைவர் – சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியலுக்கான தலைமை அதிகாரி – DFCC வங்கி, ருவினி வீரசிங்க – சிரேஷ்ட உறவு மேம்பாட்டு முகாமையாளர்- தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் பிரிவு, அனோஜி டி சில்வா- தலைவர், WCIC.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here