Castrol இன் 125ஆவது ஆண்டு நிறைவில் அதனை கௌரவித்த Associated Motorways

57

இலங்கையில் Castrol லுப்ரிகன்ட்களின் ஒரே விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited, (AMW) லுப்ரிகன்ட்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமும் BP குழுமத்தின் ஒரு அங்கத்தவரான Castrol இன் 125ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான தருணமானது, Castrol இன் செழுமையான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் லுப்ரிகன்ட் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

அது மாத்திரமன்றி, AMW மற்றும் Castrol ஆகியன 25 வருடங்களைக் கொண்ட மிக முக்கியமான அதன் கூட்டாண்மைக்கான மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த மைல்கல் ஆனது, இந்த கூட்டாண்மையின் வலிமையையும் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உயர்தர லுப்ரிகன்ட் தீர்வுகளை வழங்குவதற்கான பகிரப்பட்ட தூர நோக்கிற்கான ஒரு சான்றும் ஆகும்.

Castrol தனது 125ஆவது ஆண்டை ‘Onward, Upward, Forward’ (நேராக, மேல்நோக்கி, முன்னோக்கி) எனும் தலைப்பிலான ஒரு உறுதியான புதிய மூலோபாய தூரநோக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் கொண்டாடுகின்றது. இந்த முன்னோக்குச் சிந்தனை அணுகுமுறையானது, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்தவாறு 2024 முழுவதும் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் அனுசரணைகளில் இடம்பெறும் வகையில் விசேட 125 வருட நினைவுச் சின்னமும் வெளியிடப்பட்டுள்ளது.

Castrol இன் மூலோபாயமானது, மூன்று தூண்களில் கவனம் செலுத்துகிறது. மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட Castrol ON EV Fluids இனை ‘Onward’ அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில், உள்ளக combustion மற்றும் hybrid வாகனங்களுக்கும் அதன் தேவையை ஒத்துக்கொள்கிறது. அந்த வகையில், செயற்றிறன் மற்றும் புத்தாக்கத்திற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, அனைத்து வாகன வகைகளுக்கும் விரிவடைகிறது. ‘Upward’ இன் கீழ், வாகனங்கள், ரோபோக்கள், காற்று இயக்கம் போன்ற துறைகளில் உள்ள தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு Castrol ஆதரவளிப்பதோடு, செயற்றிறனை மேம்படுத்தவும், சுற்றோட்டத்தை திறனாக மேற்கொள்ளவும் SKF உடன் ‘Oil as a Service’ போன்ற சேவைகளை வழங்குகிறது. மூன்றாவதாக, ‘Forward’ முன்முயற்சிகள், வெப்ப முகாமைத்துவம் மற்றும் தரவு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் தீர்வுகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளன. இது எதிர்கால வெற்றிக்கான செயற்றிறனையும் நிலைபேறான தன்மையையும் வலியுறுத்துகிறது.

இந்த நீடித்த கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட, Associated Motorways (Private) Limited குழும முகாமைத்துவ பணிப்பாளர் Andre Bonthuys, “Castrol இன் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். Castrol உடனான எமது 25 ஆண்டுகால கூட்டுப் பயணமானது, புத்தாக்கம் மற்றும் வெற்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டுகளிலும் இந்தக் கூட்டாண்மையைத் தொடர நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Castrol தனது புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையின் அடுத்த அத்தியாயத்தைத் ஆரம்பிக்கும் நிலையில், இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Castrol இன் தொலைநோக்குப் பார்வையை கொண்டு சேர்ப்பதற்கான ஆதரவை வழங்கவும் சிறந்த உற்பத்தியை வழங்குவதற்கும் தனது உறுதிப்பாட்டை AMW மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here