போசாக்கு நிறைந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் Candil Products Pvt Ltd நிறுவனம் மேல் மாகாண தொழில்முயற்சியாளர் விருது விழாவில் உற்பத்தி மற்றும் கைத்தொழில் பிரிவில் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான விருதை இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கடுவளை பிரதேசத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் Candil Products Pvt Ltd எனும் பெயரில் கம்பனியாக பதிவு செய்யப்பட்டது. செயற்கை வர்ணமூட்டிகள், நீண்ட காலமாக பதப்படுத்தி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் இதர இரசாயனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படாது உள்நாட்டு மூலப்பொருட்களை மாத்திரம் கொண்டு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் மேற்படி நிறுவனம் மிகக் குறுகிய காலப்பகுதியில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. Candil Products உற்பத்திகளில் போசாக்கு நிறைந்த இடியப்ப மா பிரதானமாகும். முருங்கை, சங்குப்பூ, பூசணிக்காய், பீட்ரூட், குரக்கன் போன்றவற்றால் உற்பத்திச் செய்யப்பட்ட இடியாப்ப மா 500 கிறாம் பக்கட்டுகளாகவும் 600 கிறாம் சாடிகளாகவும் இப்பொழுது கொள்வனவு செய்ய முடியும். ஐந்து வர்ணங்களிலும் ஐந்து வகை குண நலங்களுடனும் கூடிய இடியப்ப மா வகைகளை கொண்ட Five-In-One பொதியொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்திய உலகின் முதலாவது மற்றும் ஒரே நிறுவனமான Candil Products சங்குப்பூ மற்றும் முருங்கை மாவாகவும் தேயிலை பையாகவும் சந்தைக்கு விநியோகிக்கின்றது. இவர்களின் இதர உற்பத்திகளில் பூசணிக்காய், இராசவள்ளிக் கிழங்கு, கரட், பீட்ரூட், பால் மாவுக்கு பதிலாக 15 தானியங்களிலான விஷேட உற்பத்தி உள்ளிட்ட இயற்கை கஞ்சி வகைகள், முருங்கை மற்றும் காளான் சூப், பூசணிக்காய் சூப், 300 ஆண்டுகள் பழமையான மருத்துவ கலவையொன்றின் பிரகாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற அவித்த சொதி, Spicy Soup அடங்குகின்றன.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் இந்த உற்பத்திகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் மாக்கெட்டுகள் மற்றும் இயற்கை உற்பத்தி பொருள் விற்பனை நிலையங்களில் மேற்படி உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும். மறைமுகமாக சர்வதேச சந்தைக்கும் தமது உற்பத்திகளை அனுப்பும் இந் நிறுவனம் வலுவானதொரு விநியோக வலையமைப்பொன்றை உருவாக்கவும், விஷேட சங்குப்பூ செய்கைத் திட்டமொன்றை மேற்கொள்வதன் மூலம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், மூலப்பொருட்கள் உற்பத்திக்கு உள்ளூர்வாசிகளை ஆற்றுப்படுத்துவதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான விருதையும், 2023 ஆம் ஆண்டில் நிலைபேறான அபிவிருத்திக்கான வர்த்தக கண்காட்சியில் உணவுகள் பிரிவில் முதலாமிடத்தையும், 2022 ஆம் ஆண்டில் உலக குடியிருப்பு தின கண்காட்சியின் போது முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களிடமிருந்து உணவுப் பிரிவில் இரண்டாவது இடத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி தொடர்பாக நிறுவனம் தமது பணியாளர்களுக்கும், முகவர்களுக்கும், வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் மேலும் தம் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.