AESL ~ $3 பில்லியன் மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றது;

9

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திட்ட வெற்றி

Editor’s Synopsis

  • இந்த திட்டம் 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியேற்றும்
  • AESL இன் orderbook இப்போது ~$6.5 பில்லியனாக உள்ளது
  • AESL இந்த திட்டத்தை 4.5 ஆண்டுகளில் BOOT (Build, Own, Operate and Transfer) அடிப்படையில் செயற்படுத்தும்.
  • AESL இப்போது 25,778 ckm பரிமாற்ற இணைப்புகளையும் 84,186 MVA மின்மாற்றுத் திறனையும் கொண்டிருக்கும்.

Ahmedabad, 21 January 2025: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின்பரிமாற்ற மற்றும் விநியோக நிறுவனமும், உலகளவில் பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் ஒரு பகுதியுமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (AESL), இன்று HVDC (உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டம்) அமைப்பு அடிப்படையிலான மெகா ~3 பில்லியன் டொலர் மதிப்பிலான மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இற்றை வரை AESL பெற்றுக்கொண்ட மிகப்பெரிய திட்ட வெற்றி இதுவாகும். இது அதன் செயற்படுத்தல் order bookஐ ~$6.5 பில்லியனாகவும், பரிமாற்ற வலையமைப்பை 25,778 ckm (மின்சுற்று கிலோமீட்டர்) ஆகவும் மின்மாற்று திறனை 84,186 MVA ஆகவும் உயர்த்தியுள்ளது.

கட்டண அடிப்படையிலான போட்டி ஏல (Tariff Based Competitive Bidding) பொறிமுறையின் கீழ் AESL இந்த திட்டத்தை வென்றது.

இந்தத் திட்டம் 6GW HVDC அமைப்பு, ~2400 ckm மின்பரிமாற்ற இணைப்புகள் மற்றும் 7500 MVA மின்பரிமாற்றத் திறன் ஆகியவவற்றின் நிறுவலை உள்ளடக்கும். இந்த திட்டம் இந்தியாவின் மேற்கில் உள்ள பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களிலிருந்து 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை  வெளியேற்றி வடக்கில் உள்ள தேவை மையங்களுடன் இணைக்க உதவும். இந்த திட்டத்தை AESL, 4.5 ஆண்டுகளில் வழங்கும்.

“நாட்டில் வாழ உகந்ததற்ற சில பகுதிகளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை திறம்பட வெளியேற்றி, அவற்றை தேசிய மின்கட்டமைப்போடு இணைப்பதன் மூலம் இந்தியாவின் கார்பன் நீக்க (decarbonization) பயணத்தில் AESL முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த திட்டத்தை குறித்த நேரத்தில் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடன் வழங்க சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளை நாங்கள் பயன்படுத்துவோம்.” என AESLஇன் தலைமை நிர்வாக அதிகாரி கந்தார்ப் படேல் தெரிவித்தார்.

நீண்ட தூர மற்றும் பாரிய அளவிலான மின்பரிமாற்றத்திற்கான விருப்பமான பரிமாற்ற அமைப்பான இது,  AESLஇன் மூன்றாவது HVDC சொத்தாகும். AESL ஏற்கனவே ஒரு திட்டத்தை வழங்கியுள்ளதுடன் மற்றொரு திட்டம் முற்றுப் பெறும் நிலையில் உள்ளது. மேலும் HVDC வலையமைப்பை உருவாக்கியுள்ள ஒரே தனியார் துறை நிறுவனம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here