A2Z Drop-Shipping தனியார் நிறுவனம் சிறந்த வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்முயற்சியாக விருது வழங்கி கௌரவிப்பு

4

இலங்கையின் முன்னணி Drop-Shipping நிறுவனமான A2Z Drop-Shipping தனியார் நிறுவனம் Peoples Excellency விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்முயற்சி எனும் விருதை வென்றுள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு அயூப் காதர் மேற்படி விருதை பெற்றுக்கொண்டார். 2023 ஆம் ஆண்டில் திரு அயூப் காதர் அவர்களால் தொடங்கப்பட்ட இந் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்தையில் தனி முத்திரை பதித்து பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. மிக இலகுவாக கையாளக்கூடிய தளமொன்றின் மூலம் இணைய வழி தொழில்முயற்சிகளை தொடங்குவதற்கும், தொடங்கப்பட்டுள்ள தொழில்முயற்சிகளை வளர்த்தெடுப்பதற்கும் மேற்படி நிறுவனம் தொழில்முயற்சி வாயப்புகளை வழங்குகிறது. 10,000 இற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களை கொண்ட மேற்படி நிறுவனம் 200,000 இற்கும் மேற்பட்ட கட்டளைகளை (ஆடர்களை) பூர்த்தி செய்துள்ளது. இவர்கள் மொத்த விற்பனை முகாமைத்துவம் மற்றும் கட்டளைகள் (ஆடர்கள்) விநியோகம் உள்ளிட்ட வழங்கல் நடவடிக்கைகள் தொடர்பான பொறுப்பை ஏற்பதால் விற்பனையாளர்களுக்கு தமது வர்த்தக நாமங்களை கட்டியெழுப்புவதில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும்.

சந்தை நிலைமைகளுக்கேற்றவாறு தொடர்ச்சியாக தம்மை இற்றைப்படுத்திக் கொள்ளும் அதிக கிராக்கியை கொண்டுள்ள 5,000 இற்கும் மேற்பட்ட உற்பத்திகள் A2Z தளத்திடம் உள்ளது. பதிவு செய்வதற்கான எளிய செயன்முறை, வாராந்தம் செலுத்தப்படும் தரகுத் தொகை மற்றும் மொத்த கட்டளைகளுக்கு (ஆடர்கள்) வழங்கப்படும் விஷேட கழிவுகள் போன்ற அனுகூலங்கள் காரணமாக அனுபவ ரீதியாக எந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாளர்களுக்கு இந் நிறுவனத்துடன் இணைந்து தமது விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இணைய வழி விற்பனை நிலையங்களின் உருவாக்கத்திலிருந்து விற்பனை மூலங்களை மேம்படுத்துவது வரையான சகல நடவடிக்கைளின் போதும் நிறுவனத்தின் பணியாளர்கள் விற்பனையாளர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். A2Z நிறுவனம் ஏராளமான சர்வதேச வழங்குநர்களுடன் கூட்டிணைந்து இயங்குவதால் போட்டிச் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கும், சர்வதேச சந்தையுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதற்கும் விற்பனையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. “இந்த விருதின் மூலம் புத்தாக்கம், தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி தொடர்பாக நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவதன் மூலம் e-commerce துறையின் வளர்ச்சி மற்றும் புதிய தர நியமங்களை உருவாக்குவதே எமது நோக்கம்” என திரு அயூப் காதர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here