DFCC வங்கி, 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேவையை வழங்கியுள்ள பணியாற்றும் அன்னையரைக் கௌரவிப்பதற்கு விசேட பாராட்டு வைபவத்தை நடாத்தியுள்ளது

36

சர்வதேச அன்னையர் தினத்தையொட்டியதாக, தனது பணியாளர்கள் மத்தியிலுள்ள அனைத்து அன்னையரையும் போற்றிக் கொண்டாடி, கௌரவிக்கும் வகையில் DFCC வங்கி பல முயற்சிகளை அண்மையில் முன்னெடுத்துள்ளது. அலுவலகத்தினையும், தனிப்பட்ட பொறுப்புக்களையும் சமாளிக்கும் வகையில் இரண்டையும் சமமாக முன்னெடுப்பதற்கு அயராது உழைக்கின்ற பெண்கள், தொழில்ரீதியாகவும், அன்னையர் என்ற வகையிலும் தமது பொறுப்புக்களை சிறப்பாக முன்னெடுப்பதை உறுதி செய்கின்றனர். வங்கியின் அன்னையர் தினக் கொண்டாட்டங்களின் உச்சமாக, 25 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்துள்ள பணியாற்றும் அன்னையருக்கான விசேட பாராட்டு வைபவமொன்று இடம்பெற்றது.  

மகத்தான வகையில் தமது விடாமுயற்சியுடன், எந்த சூழ்நிலையையும் தாங்கும் சக்தி படைத்த பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்துள்ள அதேசமயம், போற்றிப் பாராட்டுதல் மற்றும் விசுவாசம் கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் வழிவகுத்துள்ளது. பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீது அர்ப்பணிப்புடன் உள்ள DFCC வங்கி, ஒவ்வொருவரும் தாம் போற்றப்படும் உணர்வைக் கொண்டிருக்கும் வகையிலான ஆதரவு கொண்ட மற்றும் அரவணைக்கின்ற பணிச்சூழலை வளர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அன்னையர் தினக் கொண்டாட்டங்களின் கீழான பல்வேறு நிகழ்வுகள், வங்கியின் மத்தியில் நேர்மறை எதிரொலிப்புக்களை தோற்றுவித்துள்ளதுடன், சமூகத்தில் பெண்களின் முக்கிய வகிபாகங்களில் ஒன்றாக தாய்மை என்பதற்கு மதிப்பளிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளன.     

DFCC வங்கியின் பிரதம மனிதவள அதிகாரியான பதுமா சுபசிங்க அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “அன்னையர் தினத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாது, எம்முடன் 25 ஆண்டுகளுக்கும் மேல் இணைந்துள்ள எமது பணியாளர்களான வியக்கவைக்கும் அன்னையரைக் கொண்டாடுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். தமது தொழில்ரீதியான மற்றும் தனிப்பட்ட வாழ்வை சமமாக முன்னெடுத்துச் செல்வதற்கான அர்ப்பணிப்புடன், எந்த சூழ்நிலைகளையும் தாங்கும் வகையில் முகங்கொடுக்கக்கூடிய ஆற்றல் என்றால் என்ன என்பதையும் உண்மையாக காண்பித்துள்ளனர். இது இலகுவான விடயமல்ல, எமது பணியாளர்களுக்கு ஆதரவளிக்க முடிந்துள்ளதையிட்டு ஒரு நிறுவனம் என்ற ரீதியில் நாம் கௌரவம் அடைகின்றோம். நீண்ட காலமாக சேவையிலுள்ள எத்தனையோ அன்னையர் பணியாற்றும் ஒரு நிறுவனமாகத் திகழும் DFCC வங்கி, அவர்களுக்கு தேவையான ஆதரவு முறைமைகளைத் தோற்றுவித்து, அரவணைக்கும் மற்றும் கருணை கொண்ட சூழலை நாம் வளர்த்துள்ளமைக்கு சிறந்ததொரு சான்றாகும். அனைத்து அன்னையரையும் போற்றிக் கொண்டாடும் இத்தருணத்தில், பெண்களுக்கு வலுவூட்டி, வாழ்க்கையின் பல்வேறுபட்ட கட்டங்களில் அவர்களின் வகிபாகத்திற்கு உதவுவதில் தரஒப்பீட்டு நியமங்களை DFCC வங்கி தொடர்ந்தும் நிலைநாட்டுவதை உறுதி செய்வதில் எமது அர்ப்பணிப்பை நாம் மீளவும் உறுதி செய்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

இப்பாராட்டு வைபவத்தின் விசேட அம்சமாக குழுநிலை கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது. கல்வியியல் உளவியல் நிபுணரும், விசேட கல்வித் தேவைகளுக்கான நிபுணரும், நைன்வெல்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணருமான நிலு பெரேரா, புகழ்பெற்ற பெண் தொழில்முயற்சியாளரும், அழகுக்கலையில் வணிக தலைவியுமான ரமணி பெர்னாண்டோ, DFCC வங்கியின் பிரதம மனிதவள அதிகாரியான பதுமா சுபசிங்க மற்றும் உளவளத்துணை ஆலோசகரான ரொமெய்ன் வீரசிங்க ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர்.    

பெற்றோர் மீதான அழுத்தம், ஆரம்ப பிள்ளைப்பராய அபிவிருத்தியை நிர்வகித்தல், ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், சீர்ப்படுத்தல் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள், பணி-குடும்ப ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தி DFCC வங்கியில் பெற்றோருக்கு ஆதரவான பணிச்சூழலைத் தோற்றுவித்தல், அழுத்தத்தை நிர்வகித்தல், பணியாற்றும் அன்னையருக்கு வலுவூட்டுவதன் முக்கியத்துவம், நிறுவனங்கள் மத்தியில் கருணையும், அரவணைப்பும் கொண்ட கலாச்சாரமொன்றை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் இக்கலந்துரையாடலில் அடங்கியிருந்தன. பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் இந்த தலைப்பில் விடயங்களை கலந்தாலோசித்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஆர்வமூட்டும் கேள்வி-பதில் அமர்வும் இடம்பெற்றது. உளவளத்துணை ஆலோசனை மற்றும் தேவைப்படும் ஏனைய உதவிகளுடன் பணியாளர்களுக்கு உதவுகின்ற ஒரு புதிய முயற்சியான கல்யாண (Kalyana) உதவிசேவை அழைப்பு மையமும் DFCC குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான சவால்களை திறன்மிக்க வழியில் நிர்வகிப்பதற்கு அவர்களுக்கு உதவும் வகையில் அந்தரங்கமான உதவி மற்றும் வழிகாட்டலை வழங்குவதே இந்த உதவி மையத்தின் நோக்கமாகும்.       

நிகழ்வில் உரையாற்றிய DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் வங்கிக்கு தமது பங்களிப்பை வழங்கும் அனைத்து பணியாளர்களையும் போற்றிப் பாராட்டியதுடன், பணி-குடும்ப சமநிலையை மேம்படுத்தி, விசேட கோரிக்கைகளை முன்வைக்கும் பணியாளர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு வழிகளை வங்கி ஆராய்ந்து, அவற்றை முன்னெடுத்து வருவதை சுட்டிக்காட்டினார். தொழில்ரீதியான வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட நலன் ஆகியவற்றை வளர்க்கின்ற சூழலைத் தோற்றுவிப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பையும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு நிறுவனம் என்று தன்னை மட்டுப்படுத்திவிடாமல், பெண் தொழில்முயற்சியாண்மை மீது கவனம் செலுத்தி, தனது வணிக மற்றும் கடன் செயல்பாடுகள் மூலமாக பெண்கள் மற்றும் அன்னையருக்கு உதவும் செயற்பாடுகளை DFCC வங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், பெண்களை மையமாகக் கொண்ட வங்கித் தீர்வான DFCC ஆலோக ஆனது பல்வகைப்பட்ட தேவைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட, அனைத்து வருமான மட்டங்கள் மற்றும் பிரிவுகளையும் சார்ந்த பெண்களுக்கு முழுமையான நிதியியல் தீர்வை வழங்கி வருகின்றது. அன்னையர், மாணவர்கள், தொழில்புரிபவர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் அடங்கலாக, பெண்கள் முகங்கொடுக்கின்ற தனித்துவமான சவால்களுக்கு தீர்வாக, பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு உதவி, பல்வகைப்பட்ட வாழ்க்கைமுறை தேவைப்பாடுகளை உள்ளடக்கும் வகையில் பிரத்தியேகமான தயாரிப்புக்களையும், தீர்வுகளையும் DFCC ஆலூக அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதியியல் ஆதரவுக்கு புறம்பாக, பெண்கள் மத்தியில் நிதியியல் அறிவை ஊக்குவித்து, அறிவுபூர்வமான நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தேவையான அறிவையும், திறன்களையும் அவர்களுக்கு வழங்குவதற்காக, பல்வேறுபட்ட முயற்சிகளை DFCC வங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. வலுவூட்டப்படுவதற்கான வலுவான ஆயுதமாக தகவல் அணுகல் காணப்படுவதை ஏற்றுக்கொண்டு, பெண்கள் தமது நிதியை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் பேணி, தமது அபிலாஷைகள் அனைத்தையும் அடையப்பெறுவதற்கான வளங்களை வழங்குவதில் DFCC வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here