அலியான்ஸ் லங்கா நிறுவனம் Great Manager Awards 2023 நிகழ்வில் பிரகாசித்துள்ளது

22
இடமிருந்து வலப்புறமாக: திரு. றிஷான் ஜுமாத் - கிளஸ்டர் ஹெட் - நிறுவன விற்பனைகள், மதுரிகா அத்திடிய - உதவிப் பொது முகாமையாளர் - சட்டம், திரு. நவீன் ஜெயசேகர - ஆக்சுவேரியல் துறை முகாமையாளர், கோகிலா தனுஷ்கி விஜேசூரிய - முகாமையாளர், சொத்து பொறியியல் துறை, திரு. லிஷான் குணதுங்க - நிதி முகாமையாளர், சமிலா அமுனுகம - ஏஜென்சி அமைப்பின் முகாமையாளர், திரு. மலிக் பீரிஸ் - சிரேஷ்ட கிளஸ்டர் முகாமையாளர், விதுமினி கௌஷல்யா பெரேரா - துணை முகாமையாளர், வணிக மாற்றம், திரு. கவிந்து கயான் கருணாநாயக்க - உதவி முகாமையாளர் - வணிக தீர்வு உருவாக்குனர்

இலங்கையின் முதன்மையான காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றும், உலகளாவிய Allianz SE குழுமத்தின் உறுப்பு நிறுவனமுமான அலியான்ஸ் லங்கா, அண்மையில் இடம்பெற்ற Great Manager Awards 2023 நிகழ்வில் பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக அலியான்ஸ் லங்கா அணியின் 9 அங்கத்தவர்கள் இவ்வாண்டில் விருதுகளை வென்றுள்ளதுடன், கடந்தகாலங்களில் 37 அங்கத்தவர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நிலையில், அலியான்ஸ் லங்கா தொடர்ந்து 6வது ஆண்டாகவும் “Company with Great Managers” என்ற அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Great Managers என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் பணியாளர்களில் 37% ஆனோர் பெண்கள் என்பதை விசேடமாக குறிப்பிட வேண்டியுள்ளதுடன், பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.          

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, தனது நேர்மறை எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட அலியான்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம விநியோக அதிகாரி ரங்க டயஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எமது முகாமைத்துவ அணியின் மத்தியில் தலைசிறந்த மகத்துவத்தை இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன. இவ்வாண்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 9 வலுவான மற்றும் தூரநோக்குடனான நபர்களையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். காப்புறுதி தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய இரண்டிலும் மகத்துவத்தை வழங்குவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது முகாமையாளர்களும் அவர்களுடைய அணிகளுமே இதனைச் சாத்தியமாக்கி வருகின்றனர். ஆகவே, எமது பணியாளர்கள் மத்தியில் தலைமைத்துவத்தை விருத்தி செய்யும் அதேசமயம், அவர்கள் தமது உச்சபட்ச திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஏதுவாக ஏனைய திறமைகளை; வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுவதிலும் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.    

Great Manager Awards 2023 நிகழ்வில் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகிய இரு நிறுவனங்களிலிருந்தும் பலர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில், நவீன் ஜெயசேகர, விதுமினி கௌஷல்யா பெரேரா, மற்றும் சமிலா அமுனுகம  ஆகியோர் வினைதிறன் மற்றும் ஒத்துழைப்பு அணிக்காகவும் (Team Effectiveness & Collaboration), லிஷான் குணதுங்க, மதுரிகா அத்திடிய மற்றும் கோகிலா தனுஷ்கி ஆகியோர் நிறுவனத்தின் குறிக்கோளுடனான ஒன்றிப்பிற்காகவும் (Aligning Organizational Vision), றிஷான் ஜுமாத் அவர்கள் பெறுபேற்றை முன்னெடுத்து மற்றும் மகத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் (Driving Result & Execution Excellence), மற்றும் கவிந்து கயான் கருணாநாயக்க மற்றும் மலிக் பீரிஸ் ஆகியோர் மகத்துவம்மிக்க மில்லேனியல் முகாமையாளர்களாவும் (Great Millennial Managers) மேற்குறிப்பிட்ட Great Manager விருதுகளை வென்றுள்ளனர்.             

அலியான்ஸ் லங்கா என்ற பொதுவான பெயரில் அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மூனிச் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும். அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் வலுவான மூலதனமயம், உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் வணிக ஆற்றல் ஆகியன ஒன்றிணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான வலுவான சூத்திரமாகக் காணப்படுகின்றன. மகத்துவத்தின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாப்பான மற்றும் சுபீட்சத்துடனான எதிர்காலத்தை வளர்த்து, தனது வாடிக்கையாளர்களின் பரந்துபட்ட தேவைகளை அலியான்ஸ் லங்கா நிறைவேற்றி வருகின்றது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here