இலங்கையில் புத்துணர்ச்சியுடன் விருந்தோம்பல் துறையை வளப்படுத்தி புதிய திறன்களை சேர்ப்பிக்கும் ஒரு முயற்சியாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற வெளிநாட்டு மது வகைகள் இலங்கையில் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்ற International Distillers Limited (IDL) ஆனது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற National Bartenders Competition 2024 என்ற தேசிய போட்டி நிகழ்வை நடாத்துவதற்கு இலங்கை விருந்தோம்பல் பட்டதாரிகள் சங்கத்துடன் (Sri Lanka Hospitality Graduates Association – SLHGA) கைகோர்த்துள்ளது.
உள்நாட்டில் திறமைசாலிகளை வளர்க்கும் அதேசமயம் வாடிக்கையாளர் சேவையில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டும் நோக்குடன் இலங்கையில் மதுபானங்களை கலந்து பரிமாறுகின்ற (Mixology) கலையில் முக்கியமான ஒரு நிகழ்வாக இந்த புதுமையான ஒத்துழைப்பு முயற்சி மாறியுள்ளது.
2024 மே 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற விசேட பத்திரிகையாளர் மாநாட்டில் இப்போட்டி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் IDL மற்றும் SLHGA ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இப்போட்டி தொடர்பான தமது பகிரப்பட்ட இலக்கினை வெளிப்படுத்தியதுடன் இலங்கையை ஒரு உல்லாசப் பயணிகளுக்கான தலைசிறந்த பான வகை மற்றும் விருந்தோம்பல் அனுபவங்களுக்காகப் பெயர்பெற்ற நாடாக சர்வதேச அரங்கில் நிலைநிறுத்துவதில் இதன் வகிபாகத்தையும் வலியுறுத்தினர். அந்த வகையில் National Bartenders Competition 2024 நிகழ்வின் மாபெரும் இறுதிப்போட்டி ஜுன் 16 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.