ஒக்டேவ் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுகளில் சிறந்து விளங்குவதற்கான மூலோபாய கூட்டாண்மையை நிறுவுகின்றன.

21

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு சிறப்பு மையமான ஒக்டேவ், இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் தனது சமீபத்திய மூலோபாய கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்ற சிறப்பைப் பெற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்துடன் இந்த கூட்டுமுயற்சி உயர்மட்ட கல்வி நிறுவனங்களுடன், குறிப்பாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க படியாகும். 

இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஒக்டேவ், தரவுப் பகுப்பாய்வு தொடர்பான பாடத்திட்டத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் குறிப்பாக தரவு அறிவியல், இயந்திர கற்றல் மற்றும் தரவுப் பொறியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி நெருக்கமாகப் பணியாற்றும். தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகளை இணைப்பதன் மூலம், மாணவர்கள் சமீபத்திய அறிவைப் பெற்றிருப்பதை உறுதிசெய்ய இந்த கூட்டுமுயற்சி உதவும் மற்றும் ஒக்டேவ்  இன் அனுபவமிக்க வல்லுநர்கள் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் இறுதி ஆண்டு ஒப்படைப்புகளுக்கு மேற்பார்வையாளர்களாக பணியாற்றுவார்கள் மற்றும் நுண்ணறிவு, அனுபவங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் விருந்தினர் விரிவுரையாளர்களாகவும் செயல்படுவார்கள்.  

ஒக்டேவ் ஆனது திறமையான மற்றும் ஆர்வமுள்ள இளங்கலை பட்டதாரிகளுக்கு பல்கலைக்கழக உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்கும். இந்த நடைமுறை ஈடுபாடு, அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் ஒத்துழைக்க, தரவு அறிவியல், இயந்திர கற்றல் பொறியியல், தரவு பொறியியல், வணிக அறிவாண்மை பொறியியல் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு பயன்பாட்டு நிகழ்வுகளை வழங்குதல் ஆகியவற்றில் விலைமதிப்பற்ற நடைமுறை வெளிப்பாட்டைப் பெறுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும். அதேசமயம், ஒக்டேவ் ஆனது, தொழில் கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம் பல்கலைக்கழகத்துடன் தீவிரமாக ஈடுபடும், தரவு பகுப்பாய்வு மற்றும் அது வழங்கும் தொழில் வாய்ப்புகளின் இயக்க ஆற்றல் மிகுந்த துறையினை     மாணவர்களுக்கு வழங்கும்.

இந்த கூட்டாண்மையின் நோக்கம் பல்கலைக்கழகத்திற்கும் ஒக்டேவ்  க்கும் இடையே அறிவுப் பகிர்வை எளிதாக்குவது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரையும் அதிநவீன ஆராய்ச்சியைக் குறித்து அறியப்பட செய்வது மற்றும் தொடர்ச்சியான கற்றல் கலாச்சாரத்தை மேம்படுத்துவது ஆகும். பரஸ்பரம் நன்மை பயக்கும் இடங்களில், ஒக்டேவ்  ஆனது கூட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடும். இது புத்தாக்கங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் இலங்கையில் தரவு பகுப்பாய்வுகளின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.

ஒக்டேவ்  இன் தலைவரும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் மூத்த துணைத் தலைவருமான யொலான் சீமன், கூறியதாவது “மேம்பட்ட பகுப்பாய்வுத் துறை மிகவும் நுட்பமானதாக வளர்ந்து வரும் நிலையில், இந்த களத்தில் செழிக்க தேவையான திறன்களுடன் வரவிருக்கும் தலைமுறையை நாம் தயார்படுத்துவது இன்றியமையாதது. பேராதனைப் பல்கலைக்கழகத்துடனான எங்களது கூட்டாண்மை, இலங்கையில் வலுவான மேம்பட்ட பகுப்பாய்வுத் திறனை வளர்ப்பதற்கான எங்கள் இலக்கை ஆதரிக்கும் வகையில், பல்கலைக்கழக வலையமைப்பிற்குள் உள்ள துடிப்பான திறமைசாலிகளுடன் ஆழமான கூட்டாண்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒக்டேவ்  இன் நடைமுறைத் துறை நுண்ணறிவு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு மாணவரும் உயர் மட்டத்தில் கற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம், இந்த மாணவர்களுக்கு வலுவூட்டல், திறமைகளை வளர்ப்பது மற்றும் இத்துறையில் மேலும் புதுமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்”.

இந்த ஒத்துழைப்பு ஒக்டேவ்  இன் அடுத்த தலைமுறை தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு நிபுணர்களை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றும் இலங்கையில் செழித்து வரும் தரவு பகுப்பாய்வு சூழலை வளர்ப்பதற்கும் உள்ள உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டபிள்யூ.எம்.டி. மதுஜித் கூறும்போது, “150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு உள்ளூர் அமைப்பான ஜேகேஎச் உடன் இந்த கூட்டாண்மையை ஆரம்பித்ததில் பேராதனைப் பல்கலைக்கழகம் உற்சாகமாக உள்ளது. தேசிய வளர்ச்சிக்காக எங்கள் மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த கூட்டாண்மையைப் பயன்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான  பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின்  ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச்,  ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here