2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழிப் புலமைப்பரிசில் திட்டம் (ஜேகேஈஎல்எஸ்பி) இலங்கை முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் அதன் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஜேகேஎஃப் இன் கல்வி மையத்தின் கீழ் இந்த முதன்மையான முன்முயற்சியானது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ள பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் திறன்களுடன் அவர்களின் உயர் கல்வி மற்றும் இன்றைய போட்டிமிகு உலகில் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய முன்னுரிமைகளுடன் இணங்கி, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் திட்டத்தின் கீழ் முன்முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கேட்வே லாங்குவேஜ் சென்டருடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ஜேகேஈஎல்எஸ்பி, அதன் பயனாளிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு கல்விப் பாதைகளை அறிமுகப்படுத்தி, குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு 2 வருட எட்எக்ஸ்எல் டிப்ளோமாவுடன் ஆரம்பித்து, பாடசாலை மாணவர்களுக்கான அடிப்படை மட்டநிலை, முன் மற்றும் பின் மேம்பட்ட நிலை திட்டங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அமிழ்வு பாசறைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வேலை செய்யும் பெரியவர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் போன்ற பல கற்றல்களை உள்ளடக்கியதாக திட்டம் நகர்த்தப்பட்டது.
ஜேகேஈஎல்எஸ்பி, இன் மையத்தில், “இளம் வயதினருக்கான ஆங்கிலம்”, அதன் முதன்மையான முன்முயற்சியில் உள்ளது, இது 12-14 வயதுடைய இடைநிலை அரசாங்கப் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 800 க்கும் மேற்பட்ட உதவித்தொகைகளை வழங்குகிறது. பாடநெறி-முடிவுத் தேர்வு மற்றும் ஆங்கில தின நிகழ்வுகள் இரண்டிலும் கற்றல் முடிவுகள் தரப்படுத்தப்படுகின்றன. உயர் செயல்திறன் கொண்ட மாணவர்கள் மேம்பட்ட நிலைகளுக்கு இயற்கையான முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது.
ஜேகேஈஎல்எஸ்பி, இன் மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு தலைவர் கார்மலின் ஜெயசூரிய, “நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20,931 நபர்களின் வாழ்க்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜேகேஈஎல்எஸ்பி மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகக் கல்வி மற்றும்/அல்லது விருப்பமான தொழில்களை நம்பிக்கையுடன் தொடர இந்தத் திட்டம் எவ்வாறு ஒரு பாதையாக மாறியுள்ளது என்பதைப் பார்ப்பதில் அதிக திருப்தி உள்ளது.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டதாரிகளுக்கான மொத்த அமிழ்வு பாசறையின் புலமைப்பரிசில் பெற்ற நிரோத் டி சில்வா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் “நான் பொதுவில் ஆங்கிலத்தில் பேசப் பயந்த ஒரு பிள்ளை. ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில் திட்டத்தில் இணைந்த பின்னர், எனது பயத்தைப் போக்க முடிந்தது. இப்போது நான் நம்பிக்கையான பொதுப் பேச்சாளராக இருக்கிறேன். எனது சமூகத் திறன்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கையாளும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் எனக்கு ஒரு நம்பமுடியாத வாய்ப்பாக அமைந்தது. ஆசிரியர்களும் ஜோன் கீல்ஸ் ஃபவுன்டேஷனும் நான் குழுக்களில் பணியாற்ற வேண்டிய பல வாய்ப்புகளை வழங்கியது, மேலும் அது என்னை சிறப்பானவனாக மாற உதவியது.”
‘இங்கிலிஷ் பஃர் டீன்ஸ்’ தவிர, ஜேகேஈஎல்எஸ்பி, பல ஆண்டுகளாக, வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குத் தொடர்ந்து மாற்றியமைத்துள்ளது. ‘ஸ்கில்ஸ் இன் டு புரோகிரஸ்’ (ஸ்கிப்) குழுவின் வணிகங்களின் விநியோக மேலாண்மை முயற்சிகளை ஆதரிப்பதற்காகவும் அவர்களின் சேவைத் தரம் மற்றும் கோவிட் 19 பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காகவும் 2019 இல் தொடங்கப்பட்டது. விருந்தோம்பல் சேவைகளுடன் தொடர்புடைய நடைமுறைப் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு மதிப்புமிக்க திறன்களுடன் பங்கேற்பாளர்களை ஆயத்தப்படுத்துவதற்காகவும் “சினமன் யூத் எம்பவர்மன்ட்” திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழிப் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் ‘நாளைக்கான தேசத்தை வலுப்படுத்துதல்’ என்ற இரண்டு தசாப்தங்களை ஜேகேஎஃப் கொண்டாடும் வேளையில், மேம்படுத்தப்பட்ட தொழில் திறன்கள் மூலம் இலங்கை இளைஞர்களுக்கு வலுவூட்டவும் அதன் மூலம் அதன் பயனாளிகளுக்கும் நாட்டிற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கான அதன் அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது.
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தும் ஆறு பகுதிகளில் ஆரோக்கியமும் ஒன்றாகும் – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.