ஹட்ச் மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி ஆகியன தொலைதொடர்பாடல் விநியோகத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த, மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளன  

29
இடமிருந்து வலப்புறமாக - அரோஷ லியனாராச்சி - நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவர் - வர்த்தக வங்கிச்சேவை, செனால் செனவிரட்ண - நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவர், நிறுவன வங்கிச் சேவை, லலித் பெர்னாண்டோ - பிரதம நிதி அதிகாரி - ஹட்ச் ஸ்ரீலங்கா மற்றும் ஷாகில விஜேசிங்க - பொது முகாமையாளர், வணிகத் திட்டமிடல், ஹட்ச் ஸ்ரீலங்கா.

இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முன்னணி வகித்து வருகின்ற ஹட்ச் நிறுவனம், புத்தாக்கமான கடன் தீர்வுகள் மூலமாக ஹட்ச் விநியோகக் கூட்டாளர் வலையமைப்பிற்கு வலுவூட்டுவதற்காக, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியுடன் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. இலங்கையில் தொலைதொடர்பாடல்கள் துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு நடவடிக்கையை இக்கூட்டாண்மை குறித்து நிற்கின்றது.  

ஹட்ச் முகவர் வலையமைப்பிற்கு வங்கி வழங்குகின்ற கடன் தீர்வுகள், விற்பனையை விரிவுபடுத்தி, தனிநபர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் இலக்குடன் வழங்கப்படுகின்றன. இக்கூட்டாண்மையானது ஹட்ச் முகவர் வலையமைப்பிற்கு தமது பணப்புழக்கத்தை நிர்வகிப்பதற்கான கூடுதல் நெகிழ்வுப்போக்கினை வழங்குவதுடன், எப்போதும் மாற்றம் கண்டு வருகின்ற சந்தையின் தேவைகளை சுறுசுறுப்பு மற்றும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச்செல்லவும் இடமளிக்கின்றது.  

ஹட்ச் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி லலித் பெர்னாண்டோ அவர்கள் இம்முயற்சி தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியுடனான எமது மூலோபாய இணைவானது வெறும் கூட்டாண்மை என்பதற்கும் அப்பாற்பட்டது. மிகவும் முக்கியமான வழங்கல் சங்கிலியில், பெறுமதிமிக்க ஹட்ச் வணிக கூட்டாளர் வலையமைப்பை மேம்படுத்தி, புதிய நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு அர்ப்பணிப்பாக இது காணப்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.    

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் நிறுவன வங்கிச்சேவைகளுக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவர் செனால் செனவிரட்ண அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எமது கூட்டாண்மையானது ஹட்ச் மற்றும் அதன் முகவர்கள் என இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கும். நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி வழங்குகின்ற நிதித் தீர்வுகள், ஹட்ச் முகவர் வலையமைப்பினை விரிவுபடுத்துவதை வலுப்படுத்துவது மட்டுமல்லாது, கணிசமான சந்தை வளர்ச்சிக்கும் பங்களிக்கும்,” என்று குறிப்பிட்டார்.    

நேரடியாகவும், டிஜிட்டல் வழிமுறையிலும் பல்வகைப்பட்ட மார்க்கங்களில் வாடிக்கையாளர்களை எட்டும் வழிகள் ஊடாக, தனிநபர், வர்த்தக மற்றும் நிறுவனப் பிரிவுகள் மத்தியில் பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பிஎல்சி தனது சேவைகளை வழங்கி வருகின்றது. அதிநவீன டிஜிட்டல் வங்கிச்சேவை தொழில்நுட்பங்கள் மற்றும் இலங்கையின் முன்னணி டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவமான FriMi ஊடாக டிஜிட்டல் வலுவூட்டல் முயற்சிகளில் வங்கி கவனம் செலுத்தியுள்ளது. உயர் வகுப்புப் பிரிவுகளில் சந்தை தலைமைத்துவ ஸ்தானத்துடன், இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளின் ஏகபோக வழங்குனராகவும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பிஎல்சி செயற்பட்டு வருகின்றது.       

Fortune Global 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான, பல்தேசிய கூட்டு நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings Limited இன் உறுப்பு நிறுவனமே HUTCH Sri Lanka ஆகும். CK Hutchison Holdings இன் தொலைதொடர்பாடல்கள் சேவை அங்கமானது சர்வதேசரீதியாக பெருநிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன், ஐரோப்பா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா மத்தியில் 11 நாடுகளில் தொழிற்பாடுகளுடன், 175 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் மீதான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக, இக்குழுமம், 5G சேவைகளை ஏற்கனவே 7 நாடுகளில் ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here