DFCC வங்கி, WCIC Prathibhabhisheka Awards 2023 நிகழ்வுக்கு வைர அனுசரணையை வழங்கி பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டியுள்ளது

28

நிதியியல் உள்ளடக்கத்தின் மூலமாக பெண்களுக்கு வலுவூட்டுவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிதி நிறுவனமான DFCC வங்கி, அண்மையில் இடம்பெற்ற மதிப்பிற்குரிய WCIC Prathibhabhisheka Women Entrepreneur Awards 2023 நிகழ்வுக்கு வைர அனுசரணையாளராகவும், வங்கிக் கூட்டாளராகவும் இணைந்து, பெருமையுடன் ஆதரவளித்துள்ளது. தொழில்முயற்சியாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை வளர்ப்பதில், குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத் துறையில் பெண்களின் வகிபாகத்தை ஆதரிப்பதில் DFCC வங்கி கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. விருதுகள் வழங்கும் வைபவம் அண்மையில் மிகவும் விமரிசையாகவும், ஆடம்பரமாகவும் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் சார்க் பிராந்தியத்தில் அடுத்தவர்களுக்கு உத்வேகமளிப்பதில் முன்மாதிரியான பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இம்மேடையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.            

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான மகளிர் சம்மேளனம் (Women’s Chamber of Industry and Commerce – WCIC) என்பது இலங்கையில் பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் பெண்களுக்கு ஆதரவளித்து, அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு உச்ச அமைப்பாகும். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான மகளிர் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற WCIC Prathibasheka Awards என்ற விருதுகள் நிகழ்வானது இலங்கையில் மிகச் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களின் சாதனைகளை அங்கீகரித்து, கொண்டாடும் நோக்குடன் இடம்பெற்று வருகின்றது. DFCC வங்கியின் ஆலோக இந்த நிகழ்வின் வங்கிச்சேவை கூட்டாளராக இணைந்துள்ளமை இந்நிகழ்வின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துவதுடன், விருதுகளுக்காக பெயரிடப்பட்டவர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க ஆதரவையும் வழங்கியுள்ளது. நிகழ்வுக்கு DFCC வங்கி வழங்கியுள்ள ஆதரவானது நிதியியல் ஆதரவுக்கும் அப்பால், விருதுகளுக்காக பெயரிடப்பட்டவர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு அறிவைப் பகிர்ந்து, தொழில்சார் ஆலோசனையைப் பெற்று, பிரத்தியேகமான நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பிற்கும் இடமளித்துள்ளது. நிலைபேணத்தகு வளர்ச்சிக்கு உகந்ததொரு உள்ளடக்கமான வணிக கட்டமைப்பினை வளர்ப்பதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்தவர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளுதல், எதிர்காலத்தில் ஒத்துழைப்புக்கள் மற்றும் வணிக கூட்டு முயற்சிகளுக்கான பெறுமதிமிக்க வாய்ப்புக்களைத் தோற்றுவித்தல் ஆகியவற்றுக்கான ஒரு வலுவான மேடையாகவும் இந்நிகழ்வு மாறியுள்ளதுடன், இலங்கையில் நிலைபேணத்தகு அபிவிருத்தி மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகியவற்றில் வங்கியின் அர்ப்பணிப்பை மீளவும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.                

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில், “WCIC Prathibhabhisheka Awards நிகழ்வுடனான எமது கூட்டாண்மையானது இலங்கையில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதில் ஆழமாக வேரூன்றியுள்ள எமது அர்ப்பணிப்பின் அடையாளமாக காணப்படுகின்றது. இந்த மேடையில் போற்றத்தக்க பெண்களுக்கு அங்கீகாரமளித்துள்ளமை நாம் கொண்டாடுகின்ற இந்த வேளையில், எமது பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பெண்கள் ஆற்றுகின்ற முக்கியமான பங்கினை நாம் நினைவுபடுத்தியுள்ளோம். இத்தகைய முயற்சிகளுக்கு நாம் வழங்குகின்ற ஆதரவு, ஒவ்வொரு பெண்ணும் தனது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு, மிகவும் உள்ளடக்கமான, நிலைபேணத்தகு எதிர்காலத்தின் தேவை மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது. பெண்கள் மத்தியில் நிதியியல் சுதந்திரம் மற்றும் சுபீட்சத்திற்கு அனுசரணையளிப்பதில் எமது சேவை முன்மொழிவுகள் மற்றும் பரந்த முயற்சிகளும் இத்தேவையை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன. WCIC Prathibhabhisheka Awards வெற்றியாளர்கள் அனைவருக்கும் DFCC வங்கியின் சார்பில் வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதுடன், உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக உழைக்கின்ற அனைத்துப் பெண்களையும் போற்றுகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.   

WCIC Prathibhabhisheka Awards நிகழ்வுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதன் மூலமாக, பல்வேறு துறைகளில் பெண் தொழில்முயற்சியாளர்களின் மிகச் சிறப்பான திறமைகளையும், சாதனைகளையும் DFCC வங்கி கொண்டாடியுள்ளதுடன், பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண்கள் மத்தியில் நிதிசார் அறிவு மற்றும் உள்ளடக்கத்தை தொடர்ந்தும் ஊக்குவிப்பதில் DFCC ஆலோக என்ற பெண்களை மையமாகக் கொண்ட முன்மொழிவு, DFCC வங்கியின் வலுவூட்டும் முயற்சிகளை மேலும் பிரதிபலித்துள்ளது. பெண்களின் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் தனித்துவமான தேவைகளை ஈடுசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள DFCC ஆலோக, நிதியியல் சுதந்திரம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிய ஒவ்வொரு பெண்ணின் பயணத்திற்கும் மிகவும் உகந்த தீர்வாகும்.        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here