DFCC வங்கிக்கு, 2024 க்கான AICPA & CIMA 20 உச்ச தொழில்தருநர்கள் பட்டியலில் 4வது இடம்  

27
இடமிருந்து வலப்புறமாக - வெங்கட் ரமணன், FCMA (UK), CGMA பிராந்திய உப தலைவர், ஆசிய பசுபிக் AICPA & CIMA, சாரா கோஷ், FCMA (UK), CGMA தலைவர், முகாமைத்துவ பட்டயக் கணக்காளர்கள் கற்கைநிலையம், அசங்க உடுவெல்ல, பிரதம செயல்பாட்டு அதிகாரி, DFCC வங்கி, மற்றும் ஸஹாரா அன்சாரி, FCMA (UK), CGMA உள்நாட்டு முகாமையாளர் - இலங்கை மற்றும் மாலைதீவு AICPA & CIMA.

வேலைவாய்ப்பு நடைமுறைகளில் மகத்துவத்தை நிலைநாட்டுவதில் DFCC வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு கிடைத்த உரிய அங்கீகாரமாக, 2024 க்கான AICPA & CIMA 20 உச்ச தொழில்தருநர்கள் தர வரிசையில் மதிப்பிற்குரிய விருதைச் சம்பாதித்துள்ளது. AICPA மற்றும் CIMA அங்கத்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் தொழில்தருநர்கள் மத்தியில் 4வது ஸ்தானத்தைப் பெற்று பெருமையடைந்துள்ள DFCC வங்கியின் சாதனை, ஆதரவான மற்றும் சாதகமான பணிச்சூழலை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. DFCC வங்கியின் சார்பில் அதன் பிரதம செயல்பாட்டு அதிகாரி அசங்க உடுவெல அவர்கள் இவ்விருதை ஏற்றுக்கொண்டார். CIMA நிறுவனத்தின் தலைவர் ஏற்பாடு செய்த விருந்துபசாரத்தையொட்டியதாக இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் வைபவத்தில், CIMA நிறுவனத்தின் தலைவர் சாரா கோஷ் அவர்கள் நேரடியாக கலந்து சிறப்பித்துள்ளமை இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கின்றது. DFCC வங்கியின் பணிக்குழாமானது பன்மைத்துவம் மற்றும் தொழில்முறை அணுகுமுறையின் அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. பல்வேறு பின்னணிகளைச் சார்ந்தவர்களை அதன் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், CIMA தகைமை பெற்ற நிதியியல் தொழில்வல்லுனர்கள் பலரும் அதில் அடங்கியுள்ளனர்.           

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here