இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி இணைந்து உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பான இல்லம் எனும் நூலை, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு செயலக அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் தெளிவூட்டுதல் நிகழ்ச்சிஅண்மையில் இடம்பெற்றது

24

இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி இணைந்து உருவாக்கிய, குழந்தைகளுக்கான பாதுகாப்பான இல்லம் எனும் நூலை, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு செயலக அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் தெளிவூட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது.

இலங்கையின் முன்னணியில் உள்ள மற்றும் மிகவும் பிரபலமான குழந்தைகளுக்கான வர்த்தக நாமமான பேபி செரமி, குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. இதன் தொடர்ச்சியான பணியில் மேலும் ஒரு படியை முன்னோக்கியதாக, பாதுகாப்பான உலகத்தை கட்டியெழுப்புவதற்காக, சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு செயலக அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சியை, இலங்கை சிறுவர் நலன் மருத்துவக் கல்லூரி மற்றும் பேபி செரமி இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. செத்சிறிபாய நகர அபிவிருத்தி அதிகாரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பேபி செரமி மற்றும் இலங்கை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரி இணைந்து, வீட்டில் குழந்தைகளுக்கு இடம்பெறும் விபத்துகளைத் தடுப்பது குறித்து வெளியிட்ட வழிகாட்டல் நூல் வெளியிடப்பட்டது.

விசேட மருத்துவ நிபுணர் கல்யாணி குருகேவினால் எழுதப்பட்ட, ‘எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்’ எனும் தலைப்பில் அமைந்த, பெற்றோர் வழிகாட்டல் கையேடானது, குழந்தைகளுக்கு வீடுகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கும், பாதுகாப்பான குழந்தை நட்புறவான சூழலை குழந்தைகளுக்கு உருவாக்குவதற்குமான சிறந்த நடைமுறைகளைப் பற்றி பெற்றோருக்கு தெளிவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய சிறுவர் செயலகம், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நூலானது, குழந்தைகளின் மனதைக் கவரும் வகையிலான கவர்ச்சிகரமான மொழி நடையில் எழுதப்பட்டுள்ளதோடு, பல முக்கியமான தகவல்களைக் கொண்ட இது, பாடல்கள் மற்றும் சித்திரங்கள் போன்ற பல சுவாரஸ்யமான விடயங்களையும் கொண்டுள்ளது. இலங்கை சமூக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், இதற்கான வள வழங்குனராக இணைந்து கொண்டதுடன், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதி, இலங்கை சமூக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் சமூக வைத்திய நிபுணர் இனோகா விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதோடு, ‘குழந்தைகள் தொடர்பான விபத்துகள் என்பது யாது?, இலங்கையில் சிறுவர் விபத்துக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகின்றன?, பல்வேறு சிறுவர் விபத்துக்கள் மற்றும் அவை எவ்வாறு ஏற்படுகின்றன?, சிறுவர் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகள் மற்றும் சிறுவர் விபத்துகளைத் தடுத்தல்’ உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, அவர் தனது அறிவு மற்றும் தொழில்முறை அனுபவத்தின் மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இது பற்றி விளக்கமளித்தார்.

இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி, நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டத்திற்கு தலைமை தாங்கிய வைத்தியர் ருவந்தி பெரேரா, வீட்டில் ஏற்படும் விபத்துக்களால் 15 வயதுக்குட்பட்ட 12,931 சிறுவர்கள் அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும், இதில் இறப்பு விகிதம் 3.9% என பதிவாவதாகவும் தெரிவித்தார். வீடு மற்றும் பாடசாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து, தங்களுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் தெளிவூட்டுவுமாறு, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை வழங்கிய வைத்தியர் ருவந்தி பெரேரா, “வீட்டில் ஏற்படும் விபத்துகளின் போது, பெற்றோர்கள் அச்சமடையாமல் உரிய முதலுதவியை வழங்குவதும், விபத்தின் நிலைமையை உணர்ந்து, தேவையேற்படும் போது உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடுவதும் குழந்தையின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாகும். குழந்தை கீழே விழுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம், குழந்தை மீது கவனம் செலுத்தியவாறு இருப்பது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் பொறுப்பாகும். நீர் நிரம்பிய கொள்கலன்களை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும். பாதுகாப்பற்ற மின்சார பிளக்குகளை சரி செய்தல் மற்றும் மின்சாதனப் பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைப்பதன் மூலம் குழந்தைகள் மின்சாரம் தாக்காமல் தடுக்கலாம். தீக்காயங்களை ஏற்படுத்தக் கூடிய எரிவாயு மற்றும் நெருப்பு, சூடான உணவு மற்றும் பானங்கள், பெரியவர்களின் மருந்துகள், குழந்தைகளின் முதலுதவி பொருட்கள், உடையக்கூடிய பொம்மைகள், பாத்திரங்கள், கோப்பைகள் மற்றும் மருந்துகள், மண்ணெண்ணெய், இரசாயனங்கள், உரங்கள் போன்றவற்றை குழந்தைகள் அடைய முடியாத வகையில் கவனமாக மூடி வைக்க வேண்டும். விலங்குகள் கடித்தல், விஷம் உடலுக்கு செல்லுதல், பல்வேறு பொருட்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ளுதல், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் மற்றும் பாரமான உபகரணங்கள் உடலின் மீது வீழ்தல் போன்ற பல விபத்துகளைத் தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் சரியான முறையில் கவனம் செலுத்துவதோடு, கடுமையாக அவர்களை கண்காணிப்பது அவசியமாகும். மேலும், கதவு, ஜன்னல் துணிகளில் தொங்கி விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் கழுத்தில் அவை சிக்குதல், பொலித்தீன், பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி சுவாசிப்பதில் பிரச்சினை உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவற்றை உரிய முறையில் வைக்க வேண்டும்.” என தெரிவித்து, பெற்றோர்கள் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் உன்னத இலக்கை அடைவதனை முன்னுரிமையாகக் கொண்டு, தனது பொறுப்பை நிறைவேற்றும் ஒரு வர்த்தகநாமம் என  பேபி செரமியை குறிப்பிடலாம். இலங்கையில் உள்ள வீடுகளில் ஏற்படும் சிறுவர் விபத்துகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் வகையில் பெற்றோருக்கு தெளிவூட்டும் விடயத்திற்காக நிபுணர்களின் உதவியையும் பேபி செரமி பெறுகின்றது. இதில், இலங்கை சமூக விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம், இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரி, ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் போன்ற அரச நிறுவனங்களுடன் பேபி செரமி கைகோர்த்துள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையில் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்த பேபி செரமி முன்னெடுத்து வந்துள்ள பணிகள் விலைமதிப்பிட முடியாதவையாகும்.

பேபி செரமியினால் முன்னெடுக்கப்பட்ட  திட்டங்களில், சிறுவர்களின் ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாடு தொடர்பில் பெற்றோருக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சிகள், தகவல்கள் அடங்கிய பெற்றோர் வழிகாட்டல் நூல்களின் விநியோகம், நிபுணர்களின் பங்களிப்புடனான டிஜிட்டல் ஊடக தளங்கள் மூலமான கேள்வி பதில் தெளிவூட்டல் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய செயற்பாடுகள் மூலம், பெற்றோர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும், குழந்தைகளை விபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கு அத்தியாவசியமான அறிவை பேபி செரமி வழங்குவதோடு, குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தை அடையும் நோக்கத்துடன், குழந்தை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை உறுதி செய்கிறது.

நமது நாட்டின் குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்க, பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களை வலுவூட்டும் வகையிலான அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வதன் மூலம், குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகம் எனும் நிகழ்ச்சித் திட்டங்களை பேபி செரமி தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here