பழைய தங்கத்தை புதிதாக மாற்றிக்கொள்ளும் சலுகை / வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களுக்கு செய்கூலி இலவசம் / இதன் மூலமாக ஈட்டப்படும் தொகையின் பாகமானது மகளிர் அபிவிருத்தி மையத்திற்கு உதவியாக வழங்கப்படவுள்ளது
இந்த ஆண்டின் நாட்காட்டியும் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், உங்களுடன் எப்போதும் நீடித்து நிலைத்திருக்கும் விசேட பரிசுகளுடன் உங்களுடைய விசேட தருணங்களைக் கொண்டாடி மகிழ்வதற்கு உதவும் வகையில் வியப்பூட்டும் சலுகைகளை வோக் ஜுவல்லர்ஸ் முன்னெடுக்கின்றது. நலிவுற்ற சமூகங்கள் மற்றும் மாற்றுத்திறன்களைக் கொண்டவர்கள் எவருக்கும் சுமையாக இருக்காது, நிதியியல்ரீதியாக தமது சொந்தக்காலில் நிற்பதற்கு பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக, மகளிர் அபிவிருத்தி மையத்துடன் கூட்டாண்மையொன்றை வோக் ஜுவல்லர்ஸ் ஏற்படுத்தியுள்ளது.
வோக் ஜுவல்லர்ஸ் வழங்கும் இந்த வியப்பூட்டும் சலுகைகளில், கணிசமான சேமிப்புக்களை அனுபவித்து மகிழ்வதற்கான பெறுமதிமிக்கதொரு வாய்ப்பாக, மார்ச் 4 முதல் 10 வரை வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களுக்கான அனைத்து செய்கூலிகளுக்கும் முழுமையான தள்ளுபடியை வோக் ஜுவல்லர்ஸ் வழங்கியது. அத்துடன் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க, பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய தங்கம் (Old Gold – OG) என்ற பிரபலமான ஊக்குவிப்பு சலுகை மீண்டும் மார்ச் 18 முதல் 30 வரை இடம்பெறவுள்ளது. ஒப்பற்ற பெறுமதி மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புடன் மிகவும் விசேட விலையில் உங்களுடைய பழைய தங்கத்தை ஒப்படைத்து, புதிய நகைகளை பெற்றுக்கொள்ள இது உங்களுக்கு இடமளிக்கின்றது.
இதற்கிடையில், மார்ச் 31 வரையில் வோக் ஜுவல்லர்ஸ் காட்சியறைகளில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துக் கொள்வனவுகளினதும் குறிப்பிட்டதொரு வீதம், மகளிர் அபிவிருத்தி மையத்திற்கு உதவிகளை வழங்குவதற்காக ஒப்படைக்கப்படும். மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு கொள்வனவும் ஒரு உயிரைப் பிரகாசிக்கச் செய்வதுடன், நலிவுற்ற மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு அதிகாரம் அளிக்கின்றது. இந்த நிதியானது வாழ்வாதார மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அனுசரணையளிக்கவும், நலிவுற்ற பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் தொடக்க வணிக முயற்சிகளுக்கு நிதியை வழங்கவும், தையல் இயந்திரங்கள், மெழுகுதிரி தயாரிக்கும் அச்சுகள், பாதணிகளை தயாரிக்கும் கருவிகள் மற்றும் பல போன்ற பொதுவான பாவனைக்கு தயாரிப்பு உபகரண ஆற்றலை மேம்படுத்தவும் உதவும். இந்த மையத்தின் பணிகள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள: www.womendev.org.