DFCC வங்கியானது அடுத்த தலைமுறையின் வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக Pinnacle Junior ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

33

DFCC வங்கி தனது செல்வந்த வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்திய வங்கிச்சேவை முன்மொழிவான DFCC Pinnacle, தற்போது DFCC Pinnacle Junior ஐ அறிமுகப்படுத்தி அதனை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. Pinnacle வாடிக்கையாளர்களின் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புத்தாக்கம்மிக்க வங்கிச்சேவை முன்மொழிவானது இளம் சேமிப்பாளர்களுக்கு தங்குதடையற்ற நிதியியல் பயணத்தை உறுதிசெய்து, வியப்பூட்டும் மற்றும் பிரத்தியேகமான சலுகைகளுக்கு உத்தரவாதமளிக்கின்றது.

DFCC வங்கியின் உப தலைவரும், Pinnacle/கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் அவர்கள் இதன் மூலமாகக் கிடைக்கும் வாய்ப்புக்கள் குறித்து கருத்து வெளியிடுகையில், “DFCC Pinnacle Junior ஐ நாம் அறிமுகப்படுத்துகின்ற இத்தருணமானது, முன்னரை விடவும் மேம்பட்ட வகையில் நிகரற்ற வங்கிச்சேவை அனுபவங்களை வழங்கவேண்டும் என்ற எமது அர்ப்பணிப்பை உரத்து எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது. இப்பிரத்தியேகத் திட்டமானது வங்கிச்சேவை என்பதற்கும் அப்பால், அடுத்த தலைமுறையின் நிதியியல் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வளர்ப்பதற்கு நம்பிக்கையூட்டுகின்றது. DFCC Pinnacle Junior என்பது சிறுவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகக் காணப்படுவதுடன், இளம் தலைமுறையினருக்கு மகத்தான வங்கிச்சேவையை வழங்கி, புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதில் DFCC வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பிற்கு சான்று பகருகின்றது,” என்று குறிப்பிட்டார்.

படைப்பாற்றலை மேம்படுத்தி, தொடர்ந்தும் கற்பதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து, இளம் தலைமுறையினருக்கு வலுவான அத்திவாரமொன்றை வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தை DFCC Pinnacle Junior தெளிவாக இனங்கண்டுள்ளது. வெற்றி, புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றைக் குறிக்கும் எதிர்காலத்தை நோக்கி இளம் சிந்தனைகளை வழிகாட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேகமான மேடையாக DFCC Pinnacle Junior காணப்படுகின்றது.

இளம் தலைமுறையை விருத்தி செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ள DFCC வங்கி அதனையிட்டு பெருமை கொள்வதுடன், இத்திட்டத்தினூடாக எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக எமது DFCC Junior வாடிக்கையாளர்களை வலுவூட்டி, தலைமைத்துவப் பண்பினை வளர்ப்பதே எமது நோக்கம்.

Pinnacle Junior Plus சேமிப்புக் கணக்கு ஆண்டுக்கு 10% என்ற வியத்தகு, கவர்ச்சியான வட்டி வீதத்தை வழங்குவதுடன், சேமிப்புக்களை பெருக்கிக் கொள்வதற்கு வலுவான அத்திவாரத்தை வழங்குகின்றது. முதலீடுகள் மீது கண்வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 12.5% என்ற கவர்ச்சியான வட்டி வீதத்தை வழங்கும் Pinnacle Junior Investment Planner கணக்கு, சுபீட்சமான நிதியியல் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுகிறது.

ஒரு முழுமையான அனுபவத்தை உறுதி செய்து, Pinnacle Junior அங்கத்தவர்கள் Pinnacle Junior Club க்கு அணுகலைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பிரத்தியேகமான அணுகல் அவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் தாராளமான செயற்பாடுகளுக்கு இடமளிப்பதுடன், இளம் அங்கத்தவர்களுக்கு விருத்தி மற்றும் ஈடுபாட்டுடன் சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக மாறுவதற்கு வழிகோலுகின்றது. இளம் வயதுப் பிரிவினருக்கு பிரத்தியேகமான Pinnacle Junior Recognition Card என்ற அட்டையையும், 13-18 வயது கட்டிளம்பருவத்தினருக்கு Teen Debit Card என்ற அட்டையையும் Pinnacle Junior வழங்குகின்றது. இந்த அட்டைகள் தெரிவு செய்யப்பட்ட வணிகர்கள், கோப்பி கடைகள், உணவகங்கள், ஆடையணி விற்பனை மையங்கள், இணையத்தள கொள்வனவுகள் மற்றும் பலவற்றில் வரப்பிரசாதங்களுக்கு வழிகோலுவதுடன், சிறுவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைமுறை தேவைகளுக்கு இது உதவும்.  

தனிப்பட்ட அனுபவத்தை மேம்படுத்தும் முகமாக, பிரத்தியேகமான உறவுமுறை முகாமையாளரின் வழிகாட்டலுடனான நன்மையையும் Pinnacle Junior வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள முடியும். தொழில் நிபுணத்துவமும், அனுபவமும் கொண்ட இந்த உறவுமுறை முகாமையாளர்கள் Pinnacle வாடிக்கையாளர்களின் தனித்துவமான நிதியியல் தேவைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை உறுதி செய்வார்கள். 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமது பரிவர்த்தனைகளை கண்காணித்து, அவற்றை நிர்வகிக்கும் திறனை வளர்ப்பதற்கு DFCC இணைய வங்கிச்சேவைக்கான அணுகலுடன், அவர்களுடைய Pinnacle Junior திட்டமானது டிஜிட்டல் வங்கிச்சேவைகளுடன் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கப்படும்.      

வாழ்க்கையில் விசேட சாதனைகளைக் கொண்டாடுவதற்கு, Pinnacle Junior வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு முக்கிய மைல்கல்லுக்கும் வியப்பூட்டும் பரிசுகள் காத்திருப்பதுடன், Pinnacle ஆலோசனை சேவைகளின் கூடுதல் நன்மையும் உண்டு. எமது இளம் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை வளப்படுத்தும் வகையில் விளையாட்டு, கல்வி, இசை, சித்திரம், அரங்கக் கலை மற்றும் புகைப்படக் கலை ஆகியவற்றின் ஆலோசனை சேவைகளுக்கும் வங்கி அனுசரணையளிக்கும்.

நடைமுறை அனுபவத்தை வழங்கும் ஒரு மூலோபாய நகர்வாக, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரபலமான நிறுவனங்களின் உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பினையும் Pinnacle Junior வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வர். இளம் கணக்கு வாடிக்கையாளர்கள் பெறுமதிமிக்க நுண்ணறிவுகளையும், அனுபவங்களையும் பெற்று, வாழ்வில் அவர்கள் வெற்றி பெறத் தேவையான அனுபவங்களை அவர்கள் பெறுவதற்கு வழிகோலுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.Pinnacle Junior மூலமாக நிகரற்ற வங்கிச்சேவை அனுபவங்களை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள DFCC வங்கி, தனது பிரத்தியேகமான சலுகைகளை அடுத்த தலைமுறையினருக்கும் வழங்கி, வெற்றிக்குத் தேவையான கருவிகளுடன் அவர்களுக்கு வலுவூட்டுகின்றது. DFCC Pinnacle பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், இதன் மூலமாகக் கிடைக்கும் வாய்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கும், https://www.dfcc.lk/products/dfcc-pinnacle-junior/ என்ற எமது இணையத்தளத்திற்கு வருகை தாருங்கள் அல்லது எந்தவொரு DFCC வங்கிக் கிளைக்கும் வருகை தாருங்கள் அல்லது +94112680003 என்ற எமது Pinnacle துரித சேவை அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here