DFCC ஜுனியர் கணக்குதாரர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விசேட ஊக்குவிப்பொன்றை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. தனித்துவமான இந்த சலுகையின் ஒரு அங்கமாக, ரூபா 7,500 அல்லது அதற்கு மேற்பட்ட தொகை கொண்ட ஒவ்வொரு வைப்புக்கும் டிஜிட்டல் ஸ்மார்ட் LED கடிகாரமொன்றை கணக்குதாரர்கள் இலவசமாகப் பெற்றுக்கொண்டனர். மேலும், இத்திட்டத்தின் பல்வேறு தொகைகள் மற்றும் அதற்குரிய பரிசுகளின் அடிப்படையில் மேலும் பல அன்பளிப்புக்களை சிறுவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
நிலைபேண்தகமை, கல்வி மற்றும் வாழ்க்கையின் இலட்சியங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்ற விழுமியங்களுக்கு இணங்க, தனது கணக்குதாரர்களுக்காக அவர்களின் ஈடுபாட்டை வளர்க்கும் செயல்பாடுகளை DFCC ஜுனியர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது. ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது கிளை வலையமைப்பின் மத்தியில் பல்வேறு தொடர் நிகழ்வுகளை வங்கி ஏற்பாடு செய்திருந்தது. சித்திரம் வரைதல் மற்றும் கட்டுரைப் போட்டிகள், மரநடுகை முயற்சிகள், விளையாட்டு மற்றும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் போட்டிகள், சுகாதார மற்றும் மருத்துவ முகாம்கள், அறிவுபூர்வமான செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் பல நிகழ்வுகள் ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.
ஒட்டுமொத்தத்தில் இந்த முயற்சிகள் அனைத்தும் சேமிப்பை ஊக்குவிக்கும் விழுமியங்களை பிரதானமாக ஊக்குவித்து, எதிர்காலம் தொடர்பில் பொறுப்புணர்வு மற்றும் தம்மை தயார்படுத்திக் கொள்வதை வளர்க்கும் நோக்குடையவை. அர்த்தமுள்ள மற்றும் நற்பயன்களை விளைவிக்கும் முயற்சிகளினூடாக இளம் கணக்குதாரர்களை வளர்க்கும் முயற்சிகளில் DFCC வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.