INSEE Ecocycle மற்றும் இலங்கையில் மிகப் பாரிய மின்-வர்த்தக நிறுவனமான Daraz ஆகியன காலாவதியான அல்லது சேதமடைந்த பொருட்களுக்கு நிலைபேற்றியலுடனான கழிவு முகாமைத்துவத் தீர்வை வழங்க கைகோர்த்துள்ளன  

33

இலங்கையில் சுழற்சிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இரு தரப்பும் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, நிலைபேற்றியலுடனான கழிவு முகாமைத்துவத் தீர்வுகளை வழங்குவதற்காக INSEE Ecocycle மற்றும் மிகப் பாரிய மின்-வர்த்தக நிறுவனமான Daraz ஆகியன கைகோர்த்துள்ளன.

இந்த வகையில் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள இக்கூட்டாண்மையின் கீழ், Daraz இன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட புத்தாக்கமான, நிலைபேற்றியல் கொண்ட வள மீட்புத் தீர்வுகளை INSEE Ecocycle வழங்கும். பிரதானமாக காலாவதியான அல்லது சேதமடைந்த, விரைவாக விற்கப்படுகின்ற நுகர்வோர் பொருட்களை உள்ளடக்கும் வகையில், Daraz இன் களஞ்சியசாலையில் தோற்றுவிக்கப்படுகின்ற கழிவுகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

“இது INSEE Ecocycle நிறுவனத்தில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு தருணமாகும். Daraz உடன் முதன்முதலாக ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டாண்மையாக இது அமைந்துள்ளதுடன், மின்-வர்த்தக நிறுவனமொன்றும் ஒத்துழைக்கும் முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும்,” என்று சுஜித் குணவர்த்தன அவர்கள் குறிப்பிட்டார். “இச்செயல்திட்டத்தின் மத்திய மையமாக எமது அதிநவீன வள மீட்பு மையம் அமைந்துள்ளதுடன், இங்கே கழிவுகளை நாம் தரம் பிரித்து, செயலாக்க முன் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இத்தகைய செயல்திட்டங்களில், வர்த்தகநாம பாதுகாப்பு, ஒழுங்குமுறைகள் மற்றும் தரநியமங்களின் இணக்கம் ஆகியவற்றில் நாம் விசேட கவனம் செலுத்துகிறோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

கழிவுகளை தடுத்தல், குறைத்தல் மற்றும் வள மீட்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கின்ற நிலைபேற்றியல் கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த வள மீட்பு மையம் நிறுவனங்களுக்கு உதவுகின்றது.

“சூழல் மீது அக்கறை கொண்ட நடைமுறைகளை வழிநடாத்தி, எமது செயல்பாடுகளில் புத்தாக்கமான மீள்சுழற்சி முயற்சிகளை ஒருங்கிணைப்பதனூடாக, எமது நிலைபேற்றியல் இலக்குகள் மற்றும் தொழிற்பாட்டு மகத்துவத்தை நாம் மேம்படுத்துவது மட்டுமன்றி, அனைவருக்கும் பசுமையான உலகினை கட்டியெழுப்ப தீவிரமான பங்களிப்பையும் வழங்குகின்றோம். குறிப்பாக இக்கூட்டாண்மையானது, எமது அர்ப்பணிப்பிற்கு சான்று பகருவதுடன், சூழல்ரீதியாக பொறுப்புணர்வுடனான மற்றும் சமூகரீதியாக அக்கறை கொண்ட இணைய மார்க்க சந்தையைத் தோற்றுவிக்கும் எமது இலக்கில் நாம் முன்செல்ல எம்மை வழிநடாத்துகின்றது,” என்று Daraz Sri Lanka இன் முகாமைத்துவப் பணிப்பாளரான பார்ட் வான் டிஜ்க் அவர்கள் குறிப்பிட்டார்.

Siam City Cement (Lanka) Limited என்ற பெயரிலும் அறியப்படுகின்ற இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE Cement இன் கழிவு முகாமைத்துவப் பிரிவே INSEE Ecocycle ஆகும்.  INSEE Ecocycle மூலமாக INSEE வழங்கும் நிலைபேற்றியலுடனான கழிவு முகாமைத்துவத் தீர்வுகள் இலங்கையின் சுழற்சிப் பொருளாதார நிலப்பரப்பினை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகளை அடையப்பெறுவதில் வலிமையான கட்டமைப்பாகவும் திகழ்ந்து வருகின்றது.

சுழற்சி நடைமுறைகளை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக, பொறுப்புணர்வுடனான நுகர்வு மற்றும் உற்பத்தி முதல் புத்தாக்கம் மற்றும் கைத்தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது வரை பல்வேறுபட்ட நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகளை திறன்மிக்க வழியில் தீர்த்து வைக்க இலங்கையால் முடியும். மேலும், சுழற்சி சார்ந்த முயற்சிகள் மாசுபாட்டைக் குறைத்து, வளங்களைப் பாதுகாப்பதன் மூலமாக, காலநிலை நடவடிக்கை, தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார துப்புரவு போன்ற முக்கியமான இலக்குகளில் நேரடியாக நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here