தொழில்முனைவான தேசத்தின் ஊடாக மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது.

44

மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கும் நோக்கில், இலங்கை அரசியல் வரலாற்றில் புதுமையின் முதல் அடையாளமாக விளங்கும் மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய தலைமையகம் இல. 11, பார்க் அவென்யூ, கொழும்பு 08 எனும் முகவரியில் கட்சியின் தலைவர் திரு.திலித் ஜயவீர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார மற்றும் ஏனைய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசியல் வெளியில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெற்றிடத்தை சாதகமாக நிரப்பும் நோக்கத்துடன் குறுகிய கால மற்றும் நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைத்தன்மையை அடைந்து இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதே மவ்பிம ஜனதா கட்சியின் நோக்கமாகும்.

மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திரு. திலித் ஜயவீர, கட்சியின் தலைமையகத்தை திறந்து வைத்து, தனது கட்சியின் எதிர்காலப் போக்கு மற்றும் வேலைத்திட்டம் குறித்து கருத்துரைத்தார். “இன்றைய தினம் விசேட தினமாகும், இலங்கை இளைஞர் சமூகம், இலங்கைப் பெண்கள் மற்றும் அனைத்து இலங்கை மக்களுக்கும் வலுவூட்டும் நோக்கத்தில், “மகிழ்ச்சியான ஒரு தொழில்முனைவோர் அரசை உருவாக்குவதற்கான நோக்கத்திற்காக மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய தலைமையகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நாடு தொழில்முனைவோருக்கு புகலிடமாக மாற வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுதந்திரத்திற்குப் பின்னர் எமது நாட்டில் தொடர்ந்தும் ஏற்பட்ட சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளுக்குப் பின்னால் இருந்த தேசிய மூலோபாய அணுகுமுறைகளின் பற்றாக்குறையை நிரப்பி உயர் அரசியல் கல்வியறிவு கொண்ட இலங்கை சமூகத்தை உருவாக்க வேண்டும். பங்களிப்பு கொண்ட அரசியல் வெளியை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்’ என தெரிவித்தார்.

எமது இலங்கைத் தேசிய நாகரீகத்தின் பொதுவான வரையறையின் ஊடாக, தற்போது பல்வேறு அரசியல் நலன்களுக்காக இன, மதக் கோடுகளாகப் பிரிந்து கிடக்கும் தாய்நாட்டின் அனைத்துப் பிரிவுகளையும் நாம் கடந்துசெல்ல வேண்டும். ஒரே நாட்டில் ஒரே இதயத்துடிப்பில் அனைவரும் ஒன்றாக நிற்கும் உணர்வை உணரக்கூடிய தேசிய சித்தாந்தம் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்த உணர்வின் ஊடாக, நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பரஸ்பர அவநம்பிக்கையைப் போக்குவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை மவ்பிம ஜனதா கட்சியின் மூலம் முன்னெடுக்கத் தயாராக உள்ளோம்’’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மேலும் கருத்து தெரிவித்த திரு.திலித் ஜயவீர, மவ்பிம ஜனதா கட்சியின் தொலைநோக்கினை பின்வருமாறு குறிப்பிட்டார். “குறிப்பாக குறுகிய காலத்தில், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் ஒரு நம்பிக்கையான திசையில் திருப்புவதற்கு விஞ்ஞானரீதியான பொருளாதார வேலைத்திட்டம் சமூகமயப்படுத்தப்பட வேண்டும். எனவே, தவறான கருத்துகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்குப் பதிலாக இன்னும் உகந்த தீர்வுகள் ; விவாதிக்கப்பட வேண்டும். குறிப்பாக இளைஞர் சமூகம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதன் மூலம் நட்புறவான தொழில்முனைவோரை ஊக்குவிப்பது மற்றும் அந்நியச் செலாவணியை உருவாக்குவது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்காக உழைக்க மவ்பிம ஜனதா கட்சி தயாராக உள்ளது” என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மவ்பிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் திரு.ஹேமகுமார நாணயக்காரவும் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் கட்சியின் நடைமுறைகள் குறித்து தெரிவித்தார். “இந்த தாய்நாட்டின் அரசியல் வெளியில் சகிப்புத்தன்மையின்மை கலாச்சாரத்திற்கு பதிலாக, திறந்த மனதுடன் அனைத்து ஜனநாயக கருத்துக்களையும் கேட்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதன் மூலம் உகந்த, நட்பு மற்றும் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம். எனவே, அரசியல் சமூகத்தை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், தற்போது சமூகத்தில் கடுமையான குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள், நேர்மையற்ற நோக்கங்களுடனும், சுயநலப் பிரமுகர்களுடனும் அரசியலில் ஈடுபடுவதில்லை மற்றும் அந்த செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here