DFCC வங்கி புனித செபஸ்தியன் கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான பிரத்தியேக நன்மைகளுடன் பிரத்தியேக நாமம் பொறிக்கப்பட்ட கடனட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது

24

புனித செபஸ்தியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (OBA) உறுப்பினர்களுக்கான நிதியியல் சௌகரியம் மற்றும் பிரத்தியேகமான சலுகைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சியாக, DFCC வங்கியானது OBA உடன் இணைந்து DFCC புனித செபஸ்தியன் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரத்தியேக நாமம் பொறிக்கப்பட்ட கடனட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, மற்றொரு புகழ்பெற்ற ஸ்தாபனத்திற்கு ஏற்புடைய நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை விரிவுபடுத்துவதால், இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினைக் குறிக்கிறது.

DFCC புனித செபஸ்தியன் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரத்தியேக நாமம் பொறிக்கப்பட்ட கடனட்டை பிரத்தியேக சலுகைகள் மற்றும் தங்குதடையற்ற பரிவர்த்தனைகளின் தொகுப்பை உள்ளடக்கியது. மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இந்த அட்டை, கடனட்டைகள் பாரம்பரியமாக வழங்கும் சலுகைகளுக்கு அப்பாற்பட்ட பல நன்மைகளை உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர்கள் தங்கள் ஷொப்பிங் அனுபவங்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர் வணிக விற்பனை நிலையங்களில் ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறுகின்ற தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை உண்மையில் பாராட்டுவார்கள். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபா 100/- தொகைக்கும் எந்தவொரு DFCC வங்கிக் கணக்கிற்கும் 1% CashBack சலுகையை அனுபவிப்பார்கள். அத்துடன், மன நிம்மதிக்கு வழிவகுக்கும் வகையில், பாரிய தொகை கொண்ட கொள்வனவுகளுக்கு கட்டுப்படியான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளுடன், 60-மாத இலகுத் தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களையும் அனுபவிக்க முடியும். இக்கூட்டாண்மையானது பழைய மாணவர் சங்கம் தனது உறுப்பினர்கள் அட்டை மூலமாக மேற்கொள்ளும் செலவு மற்றும் வருடாந்த சந்தாக் கட்டணங்களில் இருந்து ஒரு சதவீதத்தைப் பெறுவதை உறுதிசெய்வதுடன், இது சங்கத்தின் முயற்சிகளுக்கு நிதிரீதியாக உதவுகிறது.

DFCC வங்கியின் அட்டை மையத்தின் துணைத் தலைவர் டென்வர் லூயிஸ் அவர்கள், ஒத்துழைப்பு குறித்து உற்சாகத்துடன் கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்களின் வாழ்வை வளப்படுத்தும் நிதித் தீர்வுகளை உருவாக்குவதில் DFCC வங்கி உறுதிபூண்டுள்ளது. புனித செபஸ்தியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துடனான எமது கூட்டாண்மை இந்த அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தங்குதடையற்ற பரிவர்த்தனைகளுக்கு இடமளிக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கான பிரத்தியேக நன்மைகளின் உலகத்திற்கான நுழைவாயிலை திறக்கும் இந்த கடனட்டையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

நிதியியல் சேவை புத்தாக்கங்களில் முன்னோடியான DFCC வங்கி, அதன் பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான மாஸ்டர்கார்ட் மற்றும் வீசா கடன் அட்டைகளையும் வழங்குகிறது. ஒவ்வொரு அட்டையும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறுபட்ட வாடிக்கையாளர் பிரிவுகளின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகமான அம்சங்களையும், நன்மைகளையும் வழங்குகிறது. தங்குதடையற்ற நிதியியல் அனுபவங்களை வழங்கும் நோக்குடன், அனைத்து DFCC அட்டைதாரர்களும் ஒவ்வொரு முறை செலவு செய்யும் போதும் தாராளமான CashBack அனுபவிப்பதால், ஒவ்வொரு கொள்வனவும் அவர்களுக்குப் பலனளிக்கும் பிரதிபலனையும் அட்டை அங்கத்துவத்தைப் பொறுத்து பல்வேறுபட்ட நன்மைகளையும் வழங்குவதை உறுதிசெய்கிறது. மேலும் DFCC வங்கி மிகவும் போட்டித்திறன் கொண்ட அட்டை நிலுவை மாற்றத் தெரிவுகள், குறைந்த செயலாக்க கட்டணம் மற்றும் விரைவான மற்றும் எளிதான அட்டை மீதான கடன் வசதிகளை வழங்குகிறது.

இந்த ஒத்துழைப்பு பிரத்தியேக நன்மைகளை வழங்குவதுடன், DFCC வங்கி மற்றும் புனித செபஸ்தியன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பையும் வலுப்படுத்துகிறது. உறுப்பினர்கள் தமது நிதித் தேவைகளுக்காக இந்த அட்டையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது, அவர்கள் இரு ஸ்தாபனங்களின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேசமயம், மேன்மையுடன் விளங்குவதிலும், வளமான எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட இலக்கிலும் ஒன்றுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here