அலியான்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் யூனியன் பிளேஸிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது

34

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவும் மற்றும் உலகளாவிய Allianz SE குழுமத்தின் உறுப்பு நிறுவனமுமான அலியான்ஸ் லங்கா, அண்மையில் தனது அதிநவீன வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தை பொரளையில் இருந்து யூனியன் பிளேஸிற்கு இடமாற்றம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட அணுகல் வசதி மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட உலகத் தரம் வாய்ந்த காப்புறுதி தீர்வுகளை வழங்குவதற்கான அலியான்ஸ் லங்காவின் அர்ப்பணிப்பில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான சாதனை இலக்கினைக் குறிக்கிறது. புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட அலியான்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு மையம், இல. 323, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 என்ற முகவரியில் வசதியான இடத்தில் அமைந்துள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு, தங்குதடையற்ற மற்றும் சௌகரியமான அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், விசாலமான வாகன தரிப்பிடம் உட்பட இலகுவான அணுகலை வழங்கும் அலியான்ஸ் லங்காவின் நோக்கத்துடன் ஒத்திசைகிறது.

2023 ஆகஸ்ட் 15 அன்று யூனியன் பிளேஸிற்கு புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட அலியான்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தின் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் விசேட வைபமொன்று நடைபெற்றது. இதில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கைக்கான முகாமையாளருமான அலன் ஸ்மி, அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜெயலால் ஹேவாவசம், ஏனைய சிரேஷ்ட தலைமைத்துவ அணியுடன், முக்கிய அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்த உயர்மட்ட அதிகாரிகளின் பிரசன்னம், தலைசிறந்த வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் சேவை தரங்களை பேணுவதில் அலியான்ஸ் லங்காவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட அலியான்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் இப்போது புதிய தொழில்துறை வரையறைகளை பிரதிபலிக்கும் சமகால கட்டிடக்கலை வடிவமைப்பைக் காண்பிக்கிறது. இது நவீன வசதிகள் மற்றும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சூழலை வளர்க்கும் அதே வேளையில், உலகளாவிய தரத்தைப் பேணுவதற்கான அலியான்ஸ் லங்காவின் ஓயாத அர்ப்பணிப்புடன் மிகவும் கச்சிதமாக இணைந்துள்ளது.

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கைக்கான முகாமையாளருமான அலன் ஸ்மி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “அணுகல் வசதி, சௌகரியம் மற்றும் மேன்மை ஆகியவற்றின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வகையில், புதுப்பிக்கப்பட்ட எமது வாடிக்கையாளர் மையத்தை திறந்து வைப்பவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு உலகத்தரம் வாய்ந்த காப்புறுதித் தீர்வுகளை வழங்குவம் அதே நேரத்தில், உண்மையாகவே தங்குதடையற்ற, சிரமங்களின்றிய அனுபவத்தை உறுதி செய்வதே எமது நோக்கமாகும்,” என்று குறிப்பிட்டார். 

அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜெயலால் ஹேவாவசம் அவர்கள் அதே உணர்வை எதிரொலிக்கும் வகையில் கருத்து வெளியிடுகையில், “இந்த இடமாற்றம் வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதில் எமது ஓயாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எமது வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், அவர்கள் சிறந்த சேவையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், பரிணாம மாற்றம் கண்டுவரும் காப்புறுதித் தீர்வுகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்,” என்று குறிப்பிட்டார். 

இந்த நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டதன் மூலம் காப்புறுதித் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை அலியான்ஸ் லங்கா உறுதிப்படுத்துகிறது. நிறுவனம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவற்றைப் பாதுகாப்பதில் தன்னை ஒரு உண்மையான கூட்டாளராக தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

அலியான்ஸ் லங்கா என்ற நாமத்துடன் பொதுவாக அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன,  ஜேர்மனியின் மூனிச் மாநகரில் தலைமையகத்தைக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகங்களில் முதன்மையான சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையைக் கொண்ட துணை நிறுவனங்களாகும். அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமாக்கல், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவற்றுடன் இணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக உள்ளன.மேன்மையின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்புடன், அலியான்ஸ் லங்கா தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை வளர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here