DFCC வங்கி புத்தாக்கம், உள்ளடக்கம் மற்றும் வாடிக்கையாளர் சௌகரியத்தைக் கொண்டாடும் பல்வேறு அங்கீகாரங்களுடன் தொடர்ந்து பிரகாசிக்கிறது

30

இலங்கையில் அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, டிஜிட்டல் புத்தாக்கம், உள்ளடக்கம் மற்றும் தலைசிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களுக்கான அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சமீபத்தில் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. இந்த விருதுகளில் அதன் கலப்பு மொபைல் வங்கிச்சேவை செயலியான DFCC Virtual Wallet க்கான FITIS Digital Excellence Award என்ற விருது, DFCC Aloka அறிமுக விளம்பர பிரச்சாரத்திற்கான Effie Merit Award என்ற சிறப்புத் தகுதி விருது மற்றும் LankaPay Technnovation Award விருதுகளில் இரண்டு விருதுகள் ஆகியவை அடங்கும்.

DFCC வங்கியின் டிஜிட்டல் மூலோபாயத்தின் துணைத் தலைவரான தினேஷ் ஜெபமணி அவர்கள் இந்த பாராட்டு அங்கீகாரங்களின் முக்கியத்துவம் தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மற்றும் திறனுள்ள வங்கிச்சேவைத் தீர்வுகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் இந்த மதிப்புமிக்க விருதுகளை வென்றது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த விருதுகள் எமது பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் எப்போதும் எமக்கு ஆதரவாக இருக்கும் எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றன. வங்கிச்சேவையில் டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான எமது முயற்சிகளையும் அவை பிரதிபலிக்கின்றன. இந்தத் துறைகளில் எமது முயற்சிகளைத் தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற ஊக்கத்தினால், எமது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார். 

FITIS டிஜிட்டல் மகத்துவ விருதுகள்

வங்கியின் கலப்பு மொபைல் வங்கிச்சேவை செயலியான DFCC Virtual Wallet ஆனது, இலங்கை தகவல் தொழில்நுட்பத் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Information Technology Industry Sri Lanka – FITIS) ஏற்பாடு செய்த 2வது டிஜிட்டல் மகத்துவ விருதுகளில் இணைக்கப்பட்ட தயாரிப்பு மற்றும் சேவைப் பிரிவின் கீழ் விசேட விருதைப் பெற்றது. DFCC Virtual Wallet ஆனது 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வங்கித் துறையில் அனைத்தையும் புரட்டிப்போடும் வகையில் மாற்றத்திற்கான உந்துசக்தியாக இருந்து வருகிறது. இச்செயலி அதன் தொழில்நுட்ப அம்சங்களையும், செயல்பாடுகளையும் மேம்படுத்தி, வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்ப அம்சங்களைச் சேர்த்து வருகிறது.

DFCC Virtual Wallet ஆனது, CEFTS வழியாக மற்ற வங்கிகளுக்கு நிதிப் பரிமாற்றம், CEFTS வழியாக பிற வங்கி கடன் அட்டைகளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துதல் மற்றும் கடனட்டை உச்ச வரம்புகள், கிடைக்கப்பெறும் மீதி, கொடுப்பனவு செய்ய வேண்டிய திகதி, குறைந்தபட்ச கொடுப்பனவுத் தொகை, சம்பாதித்த பண மீளளிப்பு வெகுமதி மற்றும் கணக்குக்கூற்று உள்ளிட்ட DFCC கடனட்டைகளை நிர்வகித்தல் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் கடைசியாக மேற்கொண்ட 10 பரிவர்த்தனைகள், நிலையான வைப்பு மீதிகள், காலங்கள், வட்டி வீதங்கள், முதிர்வு திகதிகள், கடன் நிலுவைகள், செலுத்த வேண்டிய தொகைகள் மற்றும் அடுத்த தவணையை செலுத்தும் திகதி ஆகியவற்றுடன் அனைத்து DFCC வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளின் மீதிகளையும் சரிபார்க்கலாம். எந்தவொரு DFCC வங்கிக் கணக்கிற்கும் நிதி பரிமாற்றம், நிதி ஆதாரங்களை நிர்வகித்தல், பணம் அனுப்புதல் மற்றும் கோருதல் மற்றும் விருப்பத்திற்கேற்றவாறான பரிவர்த்தனைகள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட கட்டணப் பட்டியலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துதல் ஆகியவற்றை இச்செயலி அனுமதிக்கிறது.

Effie சிறப்புத் தகுதி விருது

DFCC வங்கி அதன் DFCC Aloka மகளிர் வங்கிச்சேவை முன்மொழிவின் அறிமுக விளம்பர பிரச்சாரத்திற்காக புதிய தயாரிப்பு மற்றும் சேவைப் பிரிவில் மதிப்புமிக்க Effie சிறப்புத் தகுதி விருதையும் பெற்றது. Effie சிறப்புத் தகுதி விருது, வெற்றியைத் தூண்டும் மற்றும் சந்தைப்படுத்தல் செயல்திறனின் இயக்கிகள் தொடர்பான சிந்தனைமிக்க உரையாடலை ஊக்குவிக்கின்ற, பயனுள்ள சந்தைப்படுத்தல் மூலோபாயங்களை உருவாக்குவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. பெண்களை மையமாகக் கொண்ட வங்கியின் புதிய வங்கிச் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நிலைநிறுத்துவதற்கும் அறிமுகத்திற்கு முந்தைய, அறிமுகத்தின் போதான மற்றும் அறிமுகத்திற்கு பிந்தைய விளம்பர பிரச்சாரங்கள் உட்பட 360 பாகை சந்தைப்படுத்தல் அணுகுமுறையுடன் இந்த விளம்பர பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்து வெளியிட்ட DFCC வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியல் செயல்பாடுகளின் துணைத் தலைவரான நில்மினி குணரத்ன அவர்கள், “ஈர்க்கக்கூடிய, புத்தாக்கமான மற்றும் பயனுள்ள வங்கிச்சேவைத் தீர்வுகளை எமக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இத்தகைய மதிப்புமிக்க மேடையில் அங்கீகாரம் பெற்றுள்ளதையிட்டு நாம் மிகவும் கௌரவம் அடைந்துள்ளோம். இந்த அங்கீகாரங்கள் வங்கிச்சேவையில் உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான எமது முயற்சிகளை எடுத்துக்காட்டுவதுடன், மேலும் இந்த பகுதிகளில் எமது முயற்சிகளைத் தொடர நாங்கள் தொடர்ந்தும் உறுதி பூண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

LankaPay Technnovation விருதுகள் 2023

LankaPay Technnovation Awards 2023 நிகழ்வில், C பிரிவில் “Bank of the Year for Financial Inclusivity” மற்றும் “Excellence in Customer Convenience” ஆகிய சிறப்புத் தகுதி விருதுகளை நிதியியல் உள்ளடக்கம் மற்றும் வாடிக்கையாளர் சௌகரியம் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் வங்கி மேற்கொண்டு வருகின்ற மிகச் சிறந்த முயற்சிகளுக்கான அங்கீகாரமாக அது பெற்றுள்ளது. இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்க உதவும் புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் DFCC வங்கியின் ஓயாத கவனத்திற்கான அங்கீகாரமாக இந்த மதிப்பு மிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here