சிறந்த தேர்வு முடிவுகளை பெற்றுள்ள CSAS  புதுமையான முயற்சிகள் மூலம் ஊக்கமளிக்கிறது

68

கல்வித்துறையில் முன்னோடியான Colombo School of Arts and Sciences (CSAS) ஆனது முழுமையான கற்றல் மற்றும் சிறந்த சாதனைகளின் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது. இப்பள்ளியின் அதிபர் ஷலீகா ஜயலத்தின் வழிகாட்டுதலின் கீழ், CSAS ஆனது மாணவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படுவது மட்டுமல்லாது , மிகச்சிறந்த தேர்வு முடிவுகளை பெறும் புதுமையான அணுகுமுறைகளையும் முன்னோடியாகச் செயல்படுத்தியுள்ளது.

மாணவர்கள் அறிவைப் பெறுபவர்கள் மட்டுமல்ல, அவர்களின் சொந்த கல்விப் பயணங்களில் தீவிரமாகப் பங்கேற்பவர்களாகவும் இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே CSAS இயங்குகின்றது. இந்த தத்துவத்தின் வெற்றியானது சமீபத்தில் ஜூன் 2023 Cambridge Assessment International Education (CAIE) தேர்வுகளில் CSAS மாணவர்கள் அடைந்த சிறந்த முடிவுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவரும், CSAS இன் உள்ளடக்கிய மற்றும் பலப்படுத்தும் கற்றல் சூழலின் வெற்றிக்கு சான்றளிக்கின்றனர். அதன் அடிப்படையில், IGCSE முதல் GCEAS மற்றும் GCEA வரை, பெரும்பாலான மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சியடைந்துள்ளனர். IGCSE பிரிவில், மாணவர்கள் A* முதல் C வரையிலான தரங்களைப் பெற்றுள்ளனர். அவர்களுள் 78% ஆனோர் A* மற்றும் A தரங்களைப்பெற்று சித்தியடைந்துள்ளனர்.  அத்தோடு, தரம் 11 GCEAS இல் பெறப்பட்ட பெறுபேறுகள் பாராட்டுக்குரியவை. 100% மாணவர்கள் A* மற்றும் B ஆகிய தரங்களுக்கான மதிப்பெண்களைப் பெற்றதோடு, 34% மாணவர்கள் சிறந்த தரங்களைப் பெற்றுள்ளனர். தரம் 12 பிரிவில், அனைத்து க.பொ.த. பரீட்சார்த்திகளும் 40% க்கு மேல் புள்ளிகளைப் பெற்று, 77% ஆனோர் A* முதல் C வரையிலான தரங்களை பெற்றுள்ளனர். 

இது தொடர்பாக CSAS இன் அதிபர் ஷலீகா ஜயலத் விளக்கமளிக்கையில், “ஒரு சாதகமான கற்றல் சூழலை வழங்குவதற்கும் தனிப்பட்ட முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இந்த சிறந்த பெறுபேறுகளில் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் பல இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அத்தோடு,  திறமைக்கு அப்பால், ஒவ்வொரு மாணவரும் சிறந்து விளங்க பலப்படுத்தப்பட வேண்டும்.

CSAS இன் மாற்றுருவாக்கும் முயற்சிகளில் ஒன்றான அதன் துவக்க முகாம் (Boot Camp) பரந்தளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வார்த்தை இராணுவம் சார் அமைப்புக்களுடன் தொடர்புபடுத்தப்படலாம். ஆனால் இந்த முயற்சிக்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. மாறாக, இம்முரமானது விருப்பத்தின் அடிப்படையில் பங்குபெறக்கூடிய வகையில் செயல்படுத்தப்படுகின்றதோடு மாதிரித் தேர்வுகள் மற்றும் பிரதான தேர்வுகளுக்கு இடையே ஒரு பாலமாகவும் செயல்படுகின்றது. பரீட்சார்த்திகளின் செயல்திறன் அதிகரிப்பு சராசரியாக 10% ஐ அடைவதன் மூலம் முடிவுகள் தொடர்ந்தும் சிறப்பாக அமைகின்றது. அத்தோடு, மாணவர்களின் முன்னேற்றம் 50% ஐ எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில் பங்கேற்பதற்கான நோக்கம், கல்வி மதிப்பெண்களை அதிகரிப்பது மட்டும் அல்ல. இது சுய முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் சிறந்து விளங்குவதற்கான முயற்சியையும் உள்ளடக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த முகாமின் பங்கேற்பாளர்கள் தொடர்ந்து உயர் A மற்றும் A* தர பெறுபேறுகளை அடைகின்றமையால், இம்முயற்சியானது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

CSAS இயங்கும் தத்துவமானது கல்வியாளர்களுக்கு அப்பாற்பட்டது. பெறுபேறுகள் மற்றும் தரங்கள் முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் அதே வேளையில், மாணவர்களின் பலப்படுத்தப்பட்ட மனநிலையை வளர்ப்பதற்கும் இந்த நிறுவனம் ஒரே அளவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. சுயாதீன கற்றல், விமர்சன சிந்தனை மற்றும் ஒரு வலுவான பணி நெறிமுறை ஆகியவை இந்த தத்துவத்தின் ஒருங்கிணைந்த கூறுகளாகும். இந்த மனநிலைக்கு இணங்க, எமது துவக்க முகாம், வெற்றி சார்ந்த நடத்தைகளையும் தெளிவான கவனத்தையும் ஊக்குவிக்க முயல்கிறது, மாணவர்கள் தேர்வுகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து சவால்களுக்கும் தயாராக இருப்பதை இது உறுதி செய்கிறது.

அதிபர் ஜயலத்  மேலும் விளக்கமளிக்கையில், “எமது அணுகுமுறையானது, வெறும் பெறுபேறுகளை மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், வாழ்க்கைக்கான அறிவைத் தழுவிக்கொள்ளும், சுயமாகச் செயல்படும் மாணவர்களை வளர்க்கிறது. எமது துவக்க முகாம் இந்த தத்துவத்தை உள்ளடக்குகின்றதோடு, கல்வியை மீறிய வெற்றி சார் மனநிலையை வளர்க்க முயற்சிகளை மேற்கொள்கின்றது. நாங்கள் வகுப்புக்களை பரிந்துரைக்க மாட்டோம். சுதந்திரமான கற்றலை நம்புகிறோம். நாங்கள் எமது மாணவர்களை சுயமாக சிந்திக்கவும், அவர்கள் வெற்றிபெற உதவும் வகையில் வலுவான பணி நெறிமுறையை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி அளிக்கிறோம்.”

இம்முகாமில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் குழு கட்டமைப்பில் நாம் காட்டும் முக்கியத்துவம் ஆகும். தனிப்பட்ட சிறப்பை ஊக்குவிப்பதை விட இந்த முயற்சியானது ஒத்துழைப்பையும் தோழமையையும் வளர்க்கிறது. இம்முகாமின் பங்கேற்பாளர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெற்றதால் காணப்பட்ட ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஆதரவு IGCSE முடிவுகள் இந்த அணுகுமுறைக்கு சாட்சியாக இருந்தன.

CSAS ஆனது கல்விசார் சாதனைகள் மட்டுமன்றி, பன்முகதிறன்களைக் கொண்ட நபர்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. அதன் முழுமையான தத்துவம் மற்றும் ஆரம்ப முகாம்  போன்ற புதுமையான முயற்சிகள் மூலம், CSAS தனது மாணவர்களை சுபீட்சமான எதிர்கால சாத்தியக்கூறுகளை நோக்கி வழிநடத்துகிறது.

இறுதியாக, அதிபர் ஜயலத் கருத்து தெரிவிக்கும்போது, “CSAS என்பது கல்வியாளர்களைப்பற்றியது மட்டும் அல்ல; அது மாணவர்கள் செழித்து, ஒத்துழைத்து, சிறந்து விளங்கும் சூழலை வளர்ப்பதோடு, நாளைய பொறுப்புள்ள மற்றும் புதுமையான குடிமக்களாக உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here