Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள் 

15

இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka  தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய ஜனாதிபதி விருது விழாவில் சிறந்த சேவையினை வழங்கியமைக்காக விருது வழங்கப்பட்டதோடு அதன் ஸ்தாபகர் திரு ஸ்ரீமத் திலிண சாமர மதுனெத் குலவிட்டவுக்கு சிறந்த தலைமைத்துவ மற்றும் தொழில்முயற்சியாண்மை நோக்கை பாராட்டி 2024 ஆம் ஆண்டுக்கான உயர் ஆசிய தேசிய தொழில்முயற்சியாளர் விருது வழங்கப்பட்டது. கல்வித் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ள மேற்படி நிறுவனம் வெளிநாட்டு கல்விப் பிரிவின் கீழ் ஸ்வர்ணசிங்க தேசிய விருதையும், Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் உயர் சேவை விருதையும் வென்றுள்ளது. தொடக்கத்திலிருந்தே இலங்கை மாணவர்களுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காகவே மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் Datatech Lanka ஜப்பான் மொழி பாடசாலை, ஜப்பான் மொழிக் கல்வித் துறையிலும் கலாசார பரிமாற்றல் துறையிலும் நம்பகரமான வர்த்தகநாமாக தடம் பதித்துள்ளது. எந்தவொரு ஜப்பான் மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கும் Physical, Online இரு வழிகளிலும் கோட்பாட்டு மற்றும் செய்முறை உத்திகளை கையாண்டு மாணவர்களை தயார்படுத்தல், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஊடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் போன்றவை இந் நிறுவனம் வழங்கும் பிரதான சேவைகளாகும். ஜப்பான் நாட்டுக்கு செல்வதற்கு வீசா விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு தமது தகைமைகளுக்கேற்ப சரியான பாடநெறிகளை தெரிவு செய்வதற்கும் கல்வி மற்றும் தொழில்துறை வளர்சிக்குள்ள வாய்ப்புகள் ஊடாக வாழ்ககையை செம்மையாக கட்டியெழுப்புவதற்கும் தேவையான ஒவ்வொருவர் மீதும் தனிக் கவனம் செலுத்தும் வகையிலான வழிகாட்டுதல்களை வழங்குவதில் முன்னிற்கும் இந் நிறுவனம் தகைமையுடைய ஆலோசனைக் குழுவொன்றை கொண்ட கவர்ச்சிகரமான கற்றல் சூழலொன்றை உருவாக்கியுள்ளது. 1500 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் ஜப்பான் கனவை நனவாக்கியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு ஜப்பானுக்கு செல்வதற்கு உதவியுள்ள இலங்கையின் ஆகச் சிறந்த ஜப்பான் மொழி கல்லூரியாக புகழ் பெற்று விளங்கும் Datatech Lanka நிறுவனம் இதற்கு முன்னரும் பல்வேறு விருதுகளையும் தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here