ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவன மூடல் மூலம் அதானி குழுமம் நியாயப்படுத்தப்பட்டது

7

– முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் அறிகுறியாக பங்குகளில் உயர்வு –

18th January 2025: அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய குறுகிய விற்பனை நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதன் செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து, ஜனவரி 16, 2025 அன்று ஆரம்ப வர்த்தகத்தில் தங்கள் பங்கு விலைகளில் 7% வரையான குறிப்பிடத்தக்க உயர்வை அதானி குழும நிறுவனங்கள் கண்டன. 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதானி குழுமத்தை இலக்கு வைத்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து பாரிய சந்தை தளம்பலை எதிர்கொண்ட கூட்டு நிறுவனத்திற்கு இந்த செய்தி ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும்.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் நேட் ஆண்டர்சன், தமது வலைத்தளத்தில் நிறுவனத்தின் மூடல் பற்றிய அறிக்கையில் கூறும்போது, “நான் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துவிட்டேன். நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் திட்டங்களின் நிறைவுக்கு பின்னர் இந்த மூடல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.” எனத் தெரிவித்தார்.

குறுகிய விற்பனையின் கீழ், முதலீட்டாளர் பங்கின் விலை காலப்போக்கில் குறையும் என எதிர்பார்த்து தற்போதைய நிலைகளில் பங்கை கடன் வாங்கி, அதன் விலை குறையும் போது அதைச் சமன் செய்து, வித்தியாசத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ‘குறுகிய நிலையை’ உருவாக்குகிறார்.

ஆண்டர்சனின் அறிக்கை, நிதிச் சந்தைகளில் நிறுவனம் தனது காலத்தை நிறைவு செய்யும் நிலையில் வெளியாகியுள்ளது. இக்காலப்பகுதியில் அதானி குழுமத்தை தவிர, மின்சார வாகன உற்பத்தியாளர் நிகோலா கோர்ப், ப்ளொக் இன்க். (டுவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியால் விளம்பரப்படுத்தப்பட்டது) மற்றும் ஐகான் என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்பான அதன் அறிக்கைகளுக்கு நிறுவனம் பிரபல்யம் பெற்றிருந்தது.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளிலும் சந்தை வெளிப்பாடு உடனடியாகவும் நேர்மறையாகவும் இருந்தது. அதானி கிரீன் எனர்ஜி கிட்டத்தட்ட 6% அதிகரிப்புடன் முன்னிலை வகித்த அதே நேரத்தில் அதானி துறைமுகங்கள் மற்றும் அதானி பவர் உள்ளிட்ட பிற குழும நிறுவனங்கள் தலா 4%இற்கும் மேலாக அதிகரித்தன. அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், ACC, அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் NDTV ஆகியவையும் 3-4% வரை இலாபம் ஈட்டின.

குழுமம் ‘பெருநிறுவன வரலாற்றில் மிகப்பெரிய மோசடியை’ மேற்கொண்டதாகவும் பங்கு கையாளுதலில் ஈடுபட்டதாகவும் ஜனவரி 2023இல் குற்றம் சாட்டிய ஹிண்டன்பர்க்கின் அறிக்கையின் பின்னர் ஏற்பட்ட இந்த மாற்றம், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை குறிக்கிறது. இந்த அறிக்கை அதானி குழுமப் பங்குகளில் பாரிய விற்பனையை தூண்டியது. அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்ததுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தகுந்த ஆதாரத்தை கண்டுபிடிக்க தவறியதால், குழுமம் அதன் பெரும்பாலான சந்தை இழப்புகளை மீட்டெடுத்தது.

அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி, ஜுகேஷிந்தர் ‘ரொபி’ சிங், சமூக ஊடகத் தளமான Xஇல் ஒரு புதிரான பதிவின் மூலம் இந்தச் செய்திக்கு பதிலளித்தமை சர்ச்சை முழுவதும் குழுவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

ஹிண்டன்பர்க் அறிக்கைகளால் இலக்காக்கப்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்ட அல்லது குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை அபராதங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அதானி குழுமம் இந்திய ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களால் நியாயப்படுத்தப்பட்டதுடன் நிதி ரீதியாக வலுவாக வெளிப்பட்டமையை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here