சதாஹரித வனவியல் விருதுகள் 2023-2024 நிகழ்வானது, 2025 ஜனவரி 24 மாலைப்பொழுதில், அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் நிகழ்வு மண்டபத்தில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த இந்த நிகழ்வு, மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் இடம்பெற்றதுடன், சதாஹரித நிறுவனத்தில் விற்பனையில் மிகச் சிறந்த சாதனைகளை நிலைநாட்டியவர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கும் வகையில், சதாஹரித குழுமத்தின் தலைவர் திரு சதீஸ் நவரத்ன, பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், சிரேஷ்ட முகாமைத்துவ அணியினர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்துள்ளதுடன், கடந்த காலங்களில் வெற்றியீட்டியவர்களும், ஏனைய முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வணிக வளர்ச்சிக்கு உதவி, நிறுவனத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்ல கடினமாக உழைத்துள்ள சதாஹரித நிறுவனத்தின் மிகச் சிறந்த விற்பனை ஆளணியினர் இந்த நிகழ்வில் மேடையை அலங்கரித்தனர். அவர்கள் நிலைநாட்டியுள்ள மகத்தான பெறுபேறுகள் அவர்களுடைய தலைசிறந்த ஆற்றல், திறன்கள், இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் மகத்துவத்தின் மீதான பேரார்வம் ஆகியவற்றைக் காண்பிப்பதுடன், ஏனையோருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது. வழங்கப்பட்ட ஒவ்வொரு விருதும், நிலைபேற்றியல் கொண்ட வணிக வனவியல் முகாமைத்துவம் மற்றும் பசுமை முதலீடுகளில் இலங்கையில் 1வது ஸ்தானத்திலுள்ள நிறுவனமான சதாஹரித குழுமத்தின் நிறுவன கலாச்சாரத்தை வரையறுக்கும் புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவ உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளன.
இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து, சதாஹரித நிறுவனங்கள் குழுமத்தின் தலைவர் திரு. சதீஸ் நவரத்ன அவர்கள் விளக்குகையில், “பசுமை முதலீடுகள் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட வனவியல் முகாமைத்துவம் ஆகியவற்றில் இலங்கையில் முன்னோடி என்ற வகையில், எமது கூட்டு வளர்ச்சிக்கு உந்துசக்தியளித்துள்ள அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை இவ்விருதுகள் ஒவ்வொன்றும் பிரதிபலிப்பதுடன், இது தனிநபர் ஒருவரின் வெற்றியைக் குறிப்பவை அல்ல. விருதுகளை வென்றுள்ள அனைவரும் விற்பனைப் பெறுபேறுகளை மேம்படுத்தி, எதிர்காலத்திற்கு தெளிவான பாதையை அமைத்து, எமது பயணத்தை சிறப்பாக திட்டமிடுவதற்கு உதவியுள்ளனர். இவர்களுடைய சாதனைகள் அனைத்தும், புதியவற்றை ஆராய்வதற்கு எமக்கு ஊக்கமளிப்பதுடன், எமது எல்லைகளை விரிவுபடுத்தும் சமயத்தில், இதே உத்வேகத்தைக் கட்டியெழுப்பி தொடர்ந்தும் பயணிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
2002ல் ஸ்தாபிக்கப்பட்ட சதாஹரித குழுமம் தொழிற்துறையின் தராதரங்களுக்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக உழைத்துள்ளது. தொடர்ச்சியான புத்தாக்கத்தினூடாக, பசுமை முதலீடுகள் துறையில் அது 1வது ஸ்தானத்தை எட்டியுள்ளதுடன், இலங்கையில் மிகச் சிறந்த நிலைபேற்றியல் சார்ந்த வனவியல் முதலீட்டு நிபுணத்துவ நிறுவனம் என்ற அங்கீகாரத்தையும் சம்பாதித்துள்ளது. நிறுவனத்தின் மிகச் சிறந்த வணிக கட்டமைப்பானது, இது வரையில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களை நாட்டி, அறுவடை பிரதிபலனாக முதலீட்டாளர்களுக்கு ரூபா 1.7 பில்லியன் தொகையை பகிர்ந்தளிப்பதற்கு வழிவகுத்துள்ளது.
நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தி மற்றும் பொறுப்புணர்வுள்ள வணிகம் ஆகியவற்றின் மீதான உணர்வை சதாஹரித வனவியல் விருதுகள் வெளிப்படுத்துவதுடன், நிறுவனம் தனது நோக்கங்களை அடையப்பெறுவதற்கு உதவியுள்ள விற்பனை ஆளணியினருக்கு உரிய அங்கீகாரமளிப்பதற்கான மேடையையும் அமைத்துள்ளது. வனவியல் துறையில் முன்னோடி என்ற அதன் நன்மதிப்பை இலங்கைக்கு வெளியிலும் எடுத்துச் செல்லும் வகையில் மேலும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ள அதன் மூலோபாய திட்டங்கள் அடங்கலாக, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கும் சதாஹரிதவின் அணுகுமுறையையும் இந்நிகழ்வு காண்பித்துள்ளது.
வலுவான பிரதிபலன்களை வழங்குவதில் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ள சதாஹரித, இலங்கையில் பசுமை முதலீடுகள் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த வணிக வனவியல் முகாமைத்துவத்தில் நம்பிக்கைக்குரிய கூட்டாளர் என்ற ஸ்தானத்தை ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் வல்லப்பட்டையை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சர்வதேச அளவில் தனது பெயரைப் பொறித்துள்ள இக்குழுமம், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு “Sior Verde” என்ற தனது முக்கிய வாசனைத்திரவிய வர்த்தகநாமத்தை சந்தைப்படுத்தி வருகின்றது. சதாஹரித நிறுவனத்தின் தனியுரிமம் பெற்ற தொழில்நுட்பமானது வணிகரீதியாக வளர்க்கப்படுகின்ற வல்லப்பட்டை மரங்களுக்கு நம்பகமான மற்றும் திறன் மிக்க வழியில் நோய்த்தடுப்பை ஏற்படுத்துவதற்கு மலேசியாவில் பயன்படுத்தப்படுவதுடன், காடழிவைத் தடுக்க உதவி, உலகில் மிகவும் மதிப்புடைய மற்றும் ஆடம்பர வாசனைத்திரவிய சேர்க்கைப்பொருளை நிலைபேற்றியல் மிக்க வழியிலும், நெறிமுறைக்கு உட்பட்ட வகையிலும் வழங்கி வருகின்றது.