இலங்கையில் ஆங்கில வல்லமையை வலுவூட்டுவதற்காக கேம்பிரிட்ஜ் பரீட்சை நிலையத்தை Amrak Ebek ஆரம்பித்துள்ளது

3

XXX டிசம்பர் 2024, கொழும்பு: Amrak Institute of Medical Sciences மற்றும் Ebek Language Laboratories Private Limited ஆகியவற்றுக்கிடையிலான ஒரு முன்னோடி கூட்டு முயற்சியான Amrak Ebek, தனது கேம்பிரிட்ஜ் பரீட்சை நிலையத்தை டேடன்ஸ் வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது. கல்வி மற்றும் தொழில்முறை மேன்மைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சர்வதேசரீதியில் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கி, இலங்கை எங்கிலும் ஆங்கில மொழி கல்வியை மேம்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கம்.     

கேம்பிரிட்ஜ் தெற்காசியா முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அருண் ராஜமணி, Amrak Institute of Medical Sciences நிறைவேற்றுப் பணிப்பாளர் ரங்க விமலசூரிய, Amrak Institute of Medical Sciences ஸ்தாபகர் ரக்ஷிதா துடாவே, டேடன்ஸ் வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அமிந்த துடாவே, Ebek Language Laboratories பிரதம தொழிற்பாட்டு அதிகாரி நெஸ்லின் ஜோன்சன், மற்றும் Ebek Language Laboratories முகாமைத்துவப் பணிப்பாளர் கோபாலகிறிஷ்ணா சிறீகாந்தன், Amrak மற்றும் Ebek தரப்பிலிருந்து மதிப்பிற்குரிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். கேம்பிரிட்ஜ் ஆங்கில சான்றிதழ் அங்கீகாரங்களுக்கான மையமாக இலங்கையை மாற்றி, YLE, KET, PET, மற்றும் Linguaskill போன்ற சர்வதேசரீதியாக சான்றளிக்கப்பட்ட ஆங்கில மதிப்பீடுகளுக்கான அணுகலை இந்நிலையம் வழங்கும்.           

பாடசாலைகள், கல்லூரிகள், அரச திணைக்களங்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களுக்கு தரமான ஆங்கில மொழித் தீர்வுகளை வழங்கி, வர்த்தகத்துறை திறன் தேவைப்பாடுகள் மற்றும் கல்விச் சாதனைகளுக்கு இடையில் காணப்படுகின்ற இடைவெளிக்குத் தீர்வு காண்பதே Amrak Ebek ன் இலக்காகும். Cambridge University Press & Assessment, Specialist Language Courses (ஐக்கிய இராச்சியம்), மற்றும் BookR Class (ஹங்கேரி) உள்ளிட்ட சர்வதேச முன்னோடிகளுடனான மூலோபாய ஒத்துழைப்பின் பக்கபலமும் இந்த முயற்சிக்கு உள்ளது.     

திரு. அருண் ராஜமணி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கேம்பிரிட்ஜ் ஆங்கில பரீட்சைகள் நீண்ட காலமாக உலகளவில் ஆங்கில தேர்ச்சிக்கான தர ஒப்பீட்டு நியமமாக காணப்படுகின்றன. இந்நிலையத்தை ஆரம்பித்துள்ளதன் மூலமாக, மாணவர்களுக்கும், தொழில் சார்ந்தவர்களுக்கும் அத்தகைய மதிப்புமிக்க சான்று அங்கீகாரங்களை அணுகும் வாய்ப்பினை தோற்றுவித்து, அதன் மூலமாக சர்வதேச அளவில் அவர்களுடைய தொழில்வாய்ப்புத் திறன் மேம்படுத்தப்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.        

தனது அடைவுமட்டத்தை கிராமப் புற பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தி, தொழில் சார்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மொழி நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தி, இன்னும் கூடுதலான அளவில் கல்வி நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்வது உள்ளிட்ட பலவும் Amrak Ebek ன் எதிர்காலத் திட்டங்களில் அடங்கியுள்ளன. அதிகளவானோருக்கு உலகத்தரம்வாய்ந்த ஆங்கில மதிப்பீடுகளுக்கான அணுகலை வழங்கி, தனிநபர்கள் தமது கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடையப்பெறுவதற்கு வலுவூட்டுவதே இந்நிலையத்தின் நோக்கம்.   

Amrak Institute of Medical Sciences மற்றும் Ebek Language Laboratories Private Limited ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியான Amrak Ebek, இலங்கையில் ஆங்கிலக் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் தரத்தின் மீதான கவனம் ஆகியவற்றினூடாக மாணவர்களும், தொழில் சார்ந்தவர்களும் போட்டி நிலவும் சர்வதேச அரங்கில் வெற்றி காண்பதற்கு தயாராக உள்ளதை உறுதிப்படுத்தி, திறன்கள் தொடர்பான இடைவெளியை Amrak Ebek போக்குகின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here