VIMAN Street Cricket Cup (VIMAN வீதி கிரிக்கெட் கிண்ணம்) போட்டியை வழிநடத்துவதற்காக John Keells Properties நிறுவனம் சமரி அத்தபத்து அவர்களுடன் கைகோர்த்துள்ளது

4

2025 ஜனவரி 21 அன்று சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டு நிகழ்வில் VIMAN Street Cricket Cup (VIMAN வீதி கிரிக்கெட் கிண்ணம்) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதியில் மிகச் சிறந்த வாழ்விடமாக அமையவுள்ள தனது VIMAN நிர்மாணத் திட்டத்தின் கீழ் John Keells Properties நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும், மாற்றத்திற்கு வித்திடும் இம்முயற்சி, இலங்கையில் அடிமட்டத்தில் மகளிர் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்றது.  இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், விளையாட்டில் அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் திகழும் சமரி அத்தப்பத்து அவர்கள் இந்த உந்துசக்தியளிக்கும் முயற்சியில் தனது தலைமைத்துவத்தையும், பேரார்வத்தையும் சேர்ப்பிக்கும் வகையில், VIMAN மற்றும் John Keells Properties ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த சுற்றுப்போட்டியானது 2025 பெப்ரவரி 2 அன்று இடம்பெறவுள்ளது. இலங்கையிலுள்ள 8 பாடசாலைகளைச் சேர்ந்த பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைகள், 16 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளின் கீழ் போட்டியிடவுள்ளனர். திறமைசாலிகளை இனங்கண்டு, அவர்களை வளர்ப்பதன் மீதான அர்ப்பணிப்பை இம்முயற்சி வெளிக்காண்பிக்கும் அதேசமயம், விளையாட்டுக்களில் பெண்களுக்கு உள்ள வாய்ப்புக்களையும், அது குறித்த விழிப்புணர்வையும் தோற்றுவிக்கின்றது.  

கடந்த ஆண்டில் மகளிர் ஆசியக் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்த இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து அவர்களின் தனித்துவமான துடுப்பாட்டப் பாணிகளை காண்பிக்கும் வகையில் அவற்றைக் கொண்டதாக இப்போட்டியின் உத்தியோகபூர்வ இலச்சினை இந்த அறிமுக நிகழ்வில் வெளியிடப்பட்டது.  இச்சுற்றுப்போட்டியின் குறிக்கோளான, உள்ளடக்கம், திறமைசாலிகள் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை இந்த இலச்சினை குறித்து நிற்கின்றது. 

John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி நதீம் ஷம்ஸ் அவர்கள் இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்: 

“VIMAN Street Cricket Cup (VIMAN வீதி கிரிக்கெட் கிண்ணம்) நிகழ்வை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நட்சத்திரமான சமரி அத்தபத்து அவர்களுடன் கைகோர்ப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. அடிமட்டத்தில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதை ஆரம்பித்து, நாடெங்கிலும் இளம் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வலுவூட்டுவதில் ஒரு முக்கியமான படியை இம்முயற்சி பிரதிநிதித்துவம் செய்கின்றது. எமது தேசத்தில் அதன் மக்கள் மீது முதலிட்டு, வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைக் கட்டியெழுப்பி, தேசத்தின் எதிர்காலத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதில் John Keells Properties ஆழமான அர்ப்பணிப்புடன் உள்ளது. விளையாட்டு மீது சமரி கொண்டுள்ள பேரார்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன இம்முயற்சியை வழிநடத்திச் செல்வதற்கு மிகவும் பொருத்தமான கூட்டாளராக அவரை மாற்றியுள்ளது. அவருடன் இணைந்து, அடுத்த தலைமுறை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உந்துசக்தியளித்து, அவர்கள் தம்முடையை திறமைகளை முழுமையாக வெளிக்காண்பிப்பதற்கு உதவி, இலங்கையில் விளையாட்டுக்களுக்கு வலுவான எதிர்காலமொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.

இம்முயற்சி குறித்து இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியான சமரி அத்தபத்து அவர்கள் பெருமையுடன் கருத்து தெரிவிக்கையில்:

“இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி என்ற வகையில், எமது நாட்டில் அடுத்த தலைமுறை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வலுவூட்டி, வளர்ப்பதில் எனக்குள்ள ஆழமான பொறுப்பை உணர்கின்றேன். விளையாட்டில் பேரார்வம் கொண்ட இளம் பெண் திறமைசாலிகளை இனங்கண்டு, அவர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு மிளிர்ந்து, திறன்பெற்று மற்றும் வளர்ச்சி காண்பதற்கு உதவுவதற்கு மிகவும் சிறந்த வழிமுறையாக இது அமையும் என நான் உறுதியாக நம்புகின்றேன். மறைந்து கிடக்கும் திறமைசாலிகளை வெளிக்கொண்டு வந்து, சர்வதேச அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கனவுகளைத் தூண்டுவதற்கு இளம் வீராங்கனைகள் தமது திறமைகளை காண்பிப்பதற்கான மேடையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மிகவும் முன்மாதிரியான ஒரு முயற்சியான VIMAN Street Cricket Cup (VIMAN வீதி கிரிக்கெட் கிண்ணம்) நிகழ்வை ஆரம்பிப்பதற்கு John Keells Properties உடன் கூட்டுச் சேர்வதையிட்டு நான் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றேன். நாம் ஒன்றிணைந்து, மகளிர் கிரிக்கெட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

விளையாட்டுக்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றினூடாக, இலங்கையில் இளையோரை, குறிப்பாக இளம் பெண்களுக்கு வலுவூட்டுவதில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை VIMAN Street Cricket Cup (VIMAN வீதி கிரிக்கெட் கிண்ணம்) பிரதிபலிக்கின்றது. 

VIMAN Street Cricket Cup (VIMAN வீதி கிரிக்கெட் கிண்ணம்) தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0706 068 068 மூலமாக John Keells Properties ஐத் தொடர்பு கொள்ளவும்.

VIMAN by John Keells Properties தொடர்பான விபரங்கள்  

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில், 65% பச்சைப்பசேல் பின்னணி, திறந்தவெளி வசதிகளுடன், மிகவும் கவனமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட VIMAN ஆனது புறநகர நவீன வாழ்வுக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது. குடும்பங்கள் வாழ்வில் செழிப்பதற்கான அமைதியான சூழலில் துடிதுடிப்பான ஜா-எல நகரத்தின் மத்தியில், கவனமாக திட்டமிடப்பட்ட 15 க்கும் மேற்பட்ட வசதிகளுடன் 418 அடுக்குமனைகளைக் கொண்டதாக VIMAN அமைந்துள்ளது. மிகவும் முக்கியமான வசதிகள் கொண்ட இடத்தில் அமைந்துள்ள VIMAN, கொழும்பு துறைமுக அணுகல் நெடுஞ்சாலை வழியே, ஜா-எல மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையில் 30 நிமிடத்தில் பிரயாணம் செய்வதையும் உறுதி செய்கின்றது. 

“Creating New Worlds”  (புதிய உலகங்களைத் தோற்றுவித்தல்) என்ற John Keells Properties நிறுவனத்தின் நோக்குடன், சமூகம், நிலைபேற்றியல் மற்றும் நவீன வாழ்வு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் மாற்றத்திற்கு வித்திடுகின்ற செயற்திட்டங்களை முன்னின்று நிர்மாணித்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here