1992ல் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் Maliban Kiri, இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் நம்பிக்கைக்குரிய பெயராக விளங்குவதுடன், 30 ஆண்டு காலப் பயணத்தின் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அதன் புத்தம் புதிய பொதிகளின் வடிவமைப்பை அண்மையில் வெளியிட்டது. நவீனகால நுகர்வோரின் விருப்பங்களுடன் வர்த்தகக் குறியீட்டின் செழுமைமிக்க பாரம்பரியத்தை இணைக்கும் சமகால வடிவமைப்பை காட்சிப்படுத்தி, இம் முக்கிய நிகழ்வைக் கொண்டாடும் நோக்கில் மீள் அறிமுக நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த மூலோபாய நடவடிக்கை Maliban Kiri>யின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் சந்தை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதையும் பரந்த வாடிக்கையாளர் தளமொன்றில் அதன் தேவையை விரிவுபடுத்துவதையும் நோக்காகக் கொண்டது.
‘தாயைப் போன்ற நம்பிக்கை’ என்ற குறிச்சொல்லுக்குச் சமமான Maliban Kiri>தமது பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததையே வழங்குவதை நோக்காகக் கொண்ட அர்ப்பணிப்புள்ள இலங்கையின் தாய்மாரின் நம்பிக்கையை வென்ற, குணநலனுடன் கூடிய போசாக்கின் சின்னமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது. வர்த்தகக் குறியீட்டின் புதிய பொதியமைப்பு அதன் நீடித்த நம்பிக்கையைப் பெற்ற அடிப்படை விழுமியங்களுக்கு உண்மையாக இருப்பதுடன் புத்தாக்கத்திற்கான அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
Maliban Kiri> யின் இக் குறிப்பிடத்தக்க மைல் கல் தொடர்பில் Maliban குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திரு. ரவி ஜயவர்தன அவர்கள் ‘இந்த மீள் அறிமுகமானது, புதிய தோற்றம் என்பதற்கு அப்பால், தாய்மாரால் நம்பிக்கையை வெல்லக் கூடிய தயாரிப்புகளைத் தயக்கமின்றி வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்கின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக Maliban Kiri> குணநலனின் சின்னமாகக் காணப்பட்டதுடன், ஒரு கோப்பை ஆரோக்கியமான தேநீருடன் ஒரு நாளை ஆரம்பிக்கும் இலங்கையின் வழக்கத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. தலைமுறைகள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு, எமது படைப்புகள்; தொடர்ச்சியாக அதியுயர் தரத்துடனும் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகளையும் பிரதிபலிக்கும் என்பதை உறுதிப்படுத்தி, இன்று நாம் உற்சாகத்துடன் ஒரு அடியை முன்னெடுத்து வைக்கிறோம்.’ எனக் கருத்துத் தெரிவித்தார்.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீண்டும் சந்தையை நோக்கித் திரும்பியுள்ளதால் இலங்கையின் உள்நாட்டு பால்மாவின் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருவதாக அண்மைக்கால தொழிற்துறை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. Maliban Kiriயின் புத்தாக்க முயற்சி, இந்த சாதகமான நகர்வைத் தொடர்ந்தும் வலுப்பெறச் செய்வதுடன் அது அதிகரித்து வரும் நம்பகத் தன்மை வாய்ந்த பாலுற்பத்திகளின் கேள்வியைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாது, சந்தையில் இவ் ஊக்கமளிக்கின்ற மாற்றத்திற்கு ஆதரவளிப்பதிலும் பங்களிப்பதிலும் குறிப்பிடத்தக்க ஒரு படிமுறையை முன்னெடுத்துள்ளது.
நியுசிலாந்து பிரதிநிதியான Open Country Dairy நிறுவனத்தின் பிரதான வர்த்தக அதிகாரியான திரு. அன்ட்ரூ மக் கட்ச்சன் அவர்கள் பங்குரிமை வகிப்பதில் பெருமிதம் அடைவதாகக் குறிப்பிட்டு, கருத்துத் தெரிவிக்கையில், Maliban Kiri நியுசிலாந்தில் நாம் மதிப்பளிக்கின்ற அதே கிடைத்தற்கரிய பெறுமதிகள், நம்பிக்கை மற்றும் குணநலன்களை உள்ளடக்கியுள்ளது. பாலுற்பத்தித் தரநிலைகளில் தொடர்ச்சியாக முன்னணி வகிக்கும் ஒரு வர்த்தகக் குறியீடு மைல் கல்லொன்றை சந்திக்கும் போது அதன் பங்குதாரர்களாக இருப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.’ எனக் குறிப்பிட்டார்.
மலிபன் குழுமம் பல தலைமுறைகளுக்கு நற்குணங்களை ஊக்குவிப்பதில் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அதன் முக்கிய மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. Maliban Kiriயின் மீள் வர்த்தகக் குறியீட்டின் மூலம் இந்த மைல் கல் அடையப்பட்டுள்ளது. இது எப்போதும் மாறிவரும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவற்றை மேம்படுத்துவதிலுமான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகின்றது. நுகர்வோர் சேவையில் கவனம் செலுத்துவதைத் தாண்டிச் சென்று மலிபன் பசுவதையிலிருந்து மீள்வதற்காக வர்த்தகக் குறியீட்டில் ஜீவகாருண்யம் மற்றும் தலைமைத்துவத்தை குறிக்கும் Maliban Kiri பசு உயிர் காப்போம்’ போன்ற கருத்திட்ட முன்முயற்சிகள் வாயிலாக உள்நாட்டு பண்ணையாளர்களை வலுப்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணி, ISO 9001, ISO 22000, FSSC 22000, GMP, HACCP, மற்றும் SLS உள்ளிட்ட கௌரவமான தரச்சான்றுகளைப் பெற்றுள்ளதுடன், அது வர்த்தகக் குறியீடுகளின் தரத்தின் மீதான அவர்களின் சளைக்காத அர்ப்பணிப்பை எடுத்தியம்புகின்றது. இந்த சாதனைகள் மலிபன் நிறுவனத்தின் நிலைத்திருக்கும் பாரம்பரியத்தை கொண்டாடுவது மட்டுன்றி, இலங்கையின் ஆற்றல் மிக்க பாலுற்பத்தித் துறையின் எதிர்கால வாய்ப்புகளையும் வசப்படுத்திக் கொள்வதற்கான தயார் நிலையையும் குறித்து நிற்கின்றன.