உலகளாவிய ரீதியாக போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு நிறுவனங்களில் APSEZ, கடந்த
ஆண்டு முதல் 15 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்த நிலையில் இருந்து முதல் 10 இடங்களுக்குள்
முன்னேறியுள்ளது.
APSEZ அதன் துறையில் 97ஆவது சதவீதத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
APSEZ அதன் தொழில்துறையில் உலகளாவிய முதல் 10 நிறுவனங்களில் உள்ள ஒரே இந்திய நிறுவனமாகும்.
சுற்றுச்சூழல் பரிமாணத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது.
Ahmedabad, 8 January 2025: 2024ஆம் ஆண்டுக்கான S&P உலகளாவிய பெருநிறுவன நிலைத்தன்மை மதிப்பீட்டு
தரவரிசையில் (CSA), அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) 100இற்கு 68
மதிப்பெண்களுடன், உலகளாவிய ரீதியாக முதல் 10 போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு
நிறுவனங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட மூன்று புள்ளிகளால் முன்னேற்றம்
கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2023ஆம் ஆண்டில் 96ஆவது சதவீதமாக இருந்த APSEZ, தற்போது இந்தத் துறையில்
97*ஆவது சதவீதத்திற்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, APSEZ சுற்றுச்சூழல் பரிமாணத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் அறிக்கையிடல், பொருட் தரம், விநியோகச் சங்கிலி முகாமைத்துவம், தகவல்
பாதுகாப்பு/இணையப் பாதுகாப்பு மற்றும் அமைப்பு இருப்பு மற்றும் வாடிக்கையாளர் உறவுகள் உள்ளிட்ட சமூக, ஆளுகை
மற்றும் பொருளாதார பரிமாணங்களில் பல அளவுகோல்களில் இது அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
“பொறுப்பான வணிக நடைமுறைகள் புதுமை மற்றும் நீண்டகால வெற்றிக்கு வழிகோலும் என்று நாங்கள் உறுதியாக
நம்புகிறோம். சமீபத்திய அங்கீகாரம், நிலைத்தன்மை மற்றும் பெருநிறுவனப் பொறுப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டை
மட்டுமே பிரதிபலிக்கிறது. அனைத்து செயற்பாடுகளிலும் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதில் எங்கள் குழுவின்
அர்ப்பணிப்பு, இந்த சாதனைக்கு முக்கிய காரணி ஆகும். 2040ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சியத்தை அடைவதற்கான எங்கள்
இலக்கை அடைய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று APSEZஇன் முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக
அதிகாரி அஸ்வானி குப்தா கூறினார்.
பிராந்திய உட்கட்டமைப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில், இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின்
மேற்கு சர்வதேச முனையத்தில் (CWIT) நடைபெறும் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி மூலம் APSEZ விரிவடைந்து வருகிறது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடனான மூலோபாய கூட்டு முயற்சி,
இலங்கையின் மிகப்பெரிய கொள்கலன் முனையமாக மாற உள்ளது.உள் திரட்டல்கள் மூலம் நிதியளிக்கப்படும் CWIT
திட்டம், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயற்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி, 2040ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய உமிழ்வை அடைவதற்கான உறுதிப்பாட்டை பேணும் அதே
வேளை, நிலையான, உலகத் தரம் வாய்ந்த துறைமுக உட்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் உலகின் மிகப்பெரிய
துறைமுகங்கள் மற்றும் logistics தளமாக மாறுவதற்கான பரந்த இலக்கை அடைதல் என்ற APSEZஇன் தொலைநோக்குப்
பார்வையுடன் ஒத்துப்போகிறது.
*டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புத் துறையில் உள்ள 318
நிறுவனங்களில் 60%ஆனவை CSA 2024க்கு மதிப்பிடப்பட்டுள்ளன.
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் தொடர்பாக
உலகளவில் பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் ஒரு பகுதியான, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு
பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), ஒரு துறைமுக நிறுவனத்திலிருந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து
பயன்பாடாக உருவெடுத்து, அதன் துறைமுக வாயிலிலிருந்து வாடிக்கையாளர் வாயிலுக்கு முழுமையான தீர்வுகளை
வழங்குகிறது. மேற்கு கடற்கரையில் 7 மூலோபாய ரீதியாக அமைந்துள்ள துறைமுகங்கள் மற்றும் முனையங்கள்
(காண்ட்லாவிலுள்ள முந்த்ரா, டுனா டெக்ரா மற்றும் பெர்த் 13, குஜராத்தில் தஹேஜ் மற்றும் ஹசிரா, கோவாவில்
மோர்முகாவோ, மகாராஷ்டிராவில் டிகி மற்றும் கேரளாவில் விழிஞ்சம்) மற்றும் கிழக்கு கடற்கரையில் 8 துறைமுகங்கள்
மற்றும் முனையங்கள் (மேற்கு வங்கத்தில் ஹால்டியா, ஒடிசாவில் தம்ரா மற்றும் கோபால்பூர், ஆந்திராவில் கங்காவரம்
மற்றும் கிருஷ்ணபட்டணம், தமிழ்நாட்டில் காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் மற்றும் புதுச்சேரியில் காரைக்கால்)
ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக மேம்படுத்துனர் மற்றும் செயற்பாட்டாளராக நாட்டின்
மொத்த துறைமுக அளவுகளில் 27%ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால் கடலோரப் பகுதிகள் மற்றும்
உள்நாட்டிலிருந்து அதிக அளவு சரக்குகளைக் கையாளும் திறன்களை வழங்குகிறது. இந்நிறுவனம் இலங்கையின்
கொழும்பில் ஒரு சரக்கு மாற்றும் (transshipment) துறைமுகத்தையும் உருவாக்கி வருகிறது. மேலும் இஸ்ரேலில் உள்ள
ஹைஃபா துறைமுகத்தையும் தான்சானியாவின் டார் எஸ் சலாம் துறைமுகத்தில் கொள்கலன் முனையம் 2ஐயும் இயக்கி
வருகிறது. துறைமுக வசதிகள், ஒருங்கிணைந்த logistics திறன்கள், பல்வகை logistics பூங்காக்கள், Grade A
பண்டகசாலைகள் மற்றும் தொழில்துறை பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய துறைமுகங்கள் முதல்
logistics தளம், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படவுள்ள மாற்றத்திலிருந்து இந்தியா பயனடையும் வகையில்
அதற்கு சாதக நிலையை உருவாக்குகிறது. அடுத்த தசாப்தத்தில் உலகின் மிகப்பெரிய துறைமுகங்கள் மற்றும் logistics
தளமாக மாறுவதே நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை ஆகும். மேலதிக தகவலுக்கு, www.adaniports.comஐப்
பார்வையிடவும்.