Beach Kho Kho விளையாட்டை இலங்கையில்அறிமுகப்படுத்துவதற்கு அனுசரணை வழங்கும்Ceylon Sapphire Mining

6

Beach Kho Kho விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு Ceylon Sapphire Mining நிறுவனம்
அனுசரணை வழங்குகிறது. மேற்படி விளையாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் வைபவம் கடந்த
வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இலங்கை Beach
Kho Kho சம்மேளனத்தின் செயலாளரும் புகழ்மிகு விளையாட்டு ஆலோசகருமான அத்துல விஜேநாயக்க
Kho Kho மற்றும் Beach Kho Kho விளையாட்டுகளை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு பெரும்
பங்காற்றியுள்ளனர். Ceylon Sapphire Mining தலைவர் திரு சஞ்சீவ பிரியந்த பொன்சேக்கா இலங்கை Beach
Kho Kho சம்மேளனத்தின் தலைவராகவும் இலங்கை Beach Kho சம்மேளனத்தின் உப தலைவராகவும்
பணயாற்றுகின்றார். Kho Kho சம்மேளனத்தின் உப தலைவர்களான லெப்ரீனன்ட் கமான்டர் சந்திரலால்
நாணாயக்கார மற்றும் தயானந்த நவரத்னவும் பொருளாளர் புத்திக ரணராஜா, Ceylon Sapphire Mining
பணிப்பாளர் மேஜர் அருண குமார ஆகியோரும் மேற்படி விளையாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றி
வருகின்றனர்.

சூழல் நேய செயன்முறைகளை பயன்படுத்தி மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வரும் Ceylon Sapphire Mining நிறுவனத்துடன் இணைந்ததான Ceylon Facet தனியார் நிறுவனம்
இலங்கையிலும் நியுசிலாந்து, சீனா தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கிடைக்கும் மாணிக்கக் கற்களை
மெருகூட்டி பட்டைத்தீட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் 30
ஆண்டுகளாக மாணிக்கக் கற்களை ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகள்
உள்ளடங்கலாக 125 இற்கும் மேற்பட்டோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தற்பொழுது Kho
Kho அணி Kho Kho உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தயாராகி வருகிறது. இம்மாதம் 13 தொடக்கம்
19 ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெறும் மேற்படி போட்டித் தொடரில் 24
நாடுகளைச் சேர்ந்த 21 ஆண்கள் அணிகளும் 20 பெண்கள் அணிகளும் பங்கேற்கின்றன. பிரதீக் வேக்கர்,
ஆதித்ய கன்புளே, பிரியங்கா இங்கில் போன்ற அதி திறமை வாய்ந்த வீளையாட்டு வீர வீராங்கனைகள்
கலந்து கொண்ட காட்சிப் போட்டிகள் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை
ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆரம்பமான Kho Kho விளையாட்டுக்கு 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட
வரலாறு உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here