Amazon College & Campus நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு

8

Amazon College & Campus நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சிறப்பு அதிதிகள் பலரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் மதிப்புக்குரிய கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மாலைத்தீவு குடியரசின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜப்பான், டுபாய் மற்றும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான ஹுசேன் ஷரீப் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை மேலும் சிறப்பித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர, களனி பல்கலைக்கத்தின் பேராசிரியர் எஸ்.ஜே.யோகராஜா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும், மாலைத்தீவு, டுபாய், கட்டார் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். மேற்படி 16 ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா Amazon College & Campus நிறுவனத்தின் பணிப்பாளர் திரு இல்ஹாம் மரிக்கார் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.2024 ஆம் ஆண்டின் சிறந்த விரிவுரையாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ஷப்ரா லரீப் தெரிவு செய்யப்பட்டு விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மாலைத்தீவின் உயர் கல்வி நிறுவனமொன்றுடன் கூட்டிணைதல், நிறுவனத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாணவர்களுக்குள்ள வாய்ப்புகளை விரிவுபடுத்தல், ABE-UK அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகளை அறிமுகப்படுத்தல், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளை அளித்து சர்வதேச தர நியமங்களுக்கேற்ற பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் Amazon நிறுவனத்தின் உயர் தரத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. Amazon College & Campus (www.amazoncollege.lk) உளவியல் மற்றும் ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, வர்த்தக முகாமைத்துவம், AMI மற்றும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி, ஆங்கிலம், அரசறிவியல், கல்வியியல், சமூகவியல் போன்ற பாடத்துறைகளில் டிப்ளோமா, உயர் தேசிய டிப்ளோமா (HND), பட்டப்படிப்பு பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளதோடு O/L மற்றும் A/L பூர்த்தி செய்துள்ள பிள்ளைகளுக்கு தமது விருப்பத்துக்கேற்ற உயர் கல்வி பாதையை தெரிவு செய்வதற்கும் வாய்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here