ஹட்ச் நிறுவனம், “Meet the Tech Titans” என்ற தலைப்பில் ஆர்வமூட்டும் புதிய podcast தொடரொன்றை ஆரம்பிக்கவுள்ளது. தேசத்தின் டிஜிட்டல் மாற்றத்தை வடிவமைத்து, மிகவும் பிரபலமான தொழில்நுட்பத் துறை தலைவர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் பயணங்கள் மற்றும் ஆழமான அறிவை வெளிக்காண்பிக்கும் வகையில் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வலுவான கவனம் செலுத்தியுள்ளதுடன், வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்குடனும் இந்த podcast தொடர் ஒன்றியுள்ளது.
டிஜிட்டல் புத்தாக்கத்தின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக பல்வேறு துறைகளிலிருந்து சிந்தனைச்சிற்பிகளை இத்தொடர் ஒரே மேடையில் ஒன்றிணைக்கவுள்ளது. MiHCM பிரதம நிறைவேற்று அதிகாரி ஹர்ஷ புரசிங்க அவர்கள் உலகளாவிய தொழிலாளர் உற்பத்தித்திறனுக்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதில் தன்னியக்கமயமாக்கம், பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அனுகூலத்துடன், டிஜிட்டல் தீர்வுகள் மூலமாக மனித வளத்தில் புரட்சிக்கு வித்திட்ட MiHCM இன் மாற்றத்திற்கான பயணம் குறித்த ஆழமான விடயங்களைப் பகிர்ந்து கொள்வார். புத்தாக்கங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை முன்னெடுப்பதில் சிறந்த தலைவரான அஹமட் இர்ஃபான் அவர்கள், Futureworks, MAS Innovation, மற்றும் IQ ஆகிய நிறுவனங்கள் எவ்வாறு இன்னமும் எட்டப்படாத சந்தைகளில் புத்தாக்கங்களை முன்னெடுத்து, நிலைபேணத்தக்க மற்றும் நற்பயனை விளைவிக்கின்ற தீர்வுகளைத் தோற்றுவிப்பதில் AI, AR/VR, மற்றும் smart textiles போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளிணைக்கின்றன என்பதைக் காண்பிக்கும் வகையில் தனது அறிவைப் பகிர்ந்து கொள்வார்.
Bhasha பிரதம நிறைவேற்று அதிகாரி தனிக பெரேரா அவர்கள் நிதித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வழி கொடுப்பனவுகள் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் குறித்த சவால்களை வலியுறுத்தி, Helakuru மற்றும் PayHere போன்ற உள்நாட்டு தொழில்நுட்பத் தீர்வுகளின் வெற்றி குறித்து கலந்துரையாடுவார். நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் பிரதம டிஜிட்டல் அதிகாரி ரந்தில் பொதேஜு அவர்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தீர்வு கண்டு, விருத்தியடைந்து வரும் வருகின்ற டிஜிட்டல் வங்கிச்சேவைத் துறை குறித்தும், இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை வடிவமைப்பதில் வங்கித்துறையின் விசாலமான வகிபாகம் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
இணையப் பாதுகாப்பு மறுசீரமைப்பாளரும், தனியுரிமை குறித்த சட்ட அறிஞருமான அசேல வைத்யலங்கார அவர்கள் செயற்கை நுண்ணறிவு ஆட்சி நிர்வாகம், நெறிமுறை கொண்ட தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்வதுடன், இணையப்பாதுகாப்பில் புவிசார் அரசியல் சவால்கள் குறித்து வழிகாட்டுவார்.
WSO2 ஸ்தாபகர் சஞ்சீவ வீரவரண அவர்கள் தொழில்துறைகள் மத்தியில் டிஜிட்டல் மாற்றத்தில் திறந்த நிரல் (open-source) தொழில்நுட்பங்களின் மாற்றத்திற்கான விளைவு குறித்து ஆராய்வதுடன், நிறுவன தொழில்நுட்பம் குறித்த தூரநோக்குடனான கண்ணோட்டத்தையும் பகிர்ந்து கொள்வார். மென்பொருள் மற்றும் தொலைதொடர்பாடல்கள் தொடர்பான அனுபவசாலியும், MilleniumIT நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷெவான் குணதிலக அவர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதில் cloud தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியமான வகிபாகம் குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்வார்.
தொடர் நிகழ்வின் நிறைவாக, ஹட்ச் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதில் தொலைதொடர்பு தொழிற்பாட்டாளர்களின் முக்கிய வகிபாகம் குறித்து கலந்துரையாடுவார். இலங்கையில் புத்தாக்கத்திற்கு இடமளித்து, டிஜிட்டல் தொழில்நுட்ப ஏற்புத்தன்மையை ஹட்ச் எவ்வாறு ஊக்குவிக்கின்றது தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்ளும் அதேசமயம், இந்த podcast தொடர் போன்ற நிகழ்வுகள் மூலமாக சிந்தனை வெளிப்பாட்டு தலைமைத்துவத்தில் நிறுவனம் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளது என்பது குறித்தும் வெளிக்காண்பிப்பார்.
இந்த முயற்சி குறித்து ஹம்தி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்துறை தலைவர்களுடன் கைகோர்ப்பதன் மூலமாக, புத்தாக்கம் கொண்ட கலாச்சாரமொன்றுக்கு உந்துசக்தியளித்து, புதிய வணிக முயற்சிகளை வளர்க்க உதவுகின்ற அறிவைப் பரப்புவதே எமது நோக்கம். வலுவான இணைப்புத்திறன் தீர்வுகளுடன் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு வலுவூட்டி, வளம்மிக்க டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான இலங்கையின் பயணத்தை விரைவுபடுத்தும் சிந்தனை வெளிப்பாட்டு தலைமைத்துவத்தை வளர்ப்பதே எமது இலக்காக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் 95% க்கும் மேலான வலையமைப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள ஹட்ச், நம்பகமான மற்றும் விரைவாக இணைப்புத்திறனை வழங்கி, இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு இடமளிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படுகின்ற மாற்றங்கள் மூலமாக, விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு உதவி, மக்களின் வாழ்வுகளை வளப்படுத்துவதில் இந்த சிந்தனை வெளிப்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய நிறுவனங்கள் மற்றும் ஹட்ச் நிறுவனம் ஆகியவற்றின் விடாமுயற்சியை இந்த podcast தொடர் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது.
இலங்கையில் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் வணிகம் குறித்த பிரத்தியேகமான நுண்ணறிவை பெற விரும்புவோருக்கு இந்த podcast தொடர் ஹட்ச் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், PodHub இலும் 2024 டிசம்பர் 12 முதல் பார்வையிடக்கூடியதாக இருக்கும். இளம் தொழில் வல்லுனர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தீர்மானங்களை வகுப்பவர்கள் போன்ற தரப்பினருக்கு உந்துசக்தியளித்து, தமது வணிகங்களுக்கும், தொழில் துறைகளுக்கும் புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை உள்வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.