ஒப்பற்ற சேமிப்புக்கள், பிரத்தியேகமான சலுகைகள் மற்றும் நிகரற்ற சௌகரியம் ஆகியவற்றுடன் நுகர்வோர் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு இடமளித்து, வியப்பூட்டும் 12.12 மாபெரும் நத்தார் விற்பனையுடன் பண்டிகைக்காலத்தை சிறப்பிப்பதில் ஆண்டின் மிகவும் முக்கியமான தருணத்தை Daraz Sri Lanka அனைவருக்கும் வழங்குகின்றது. தள்ளுபடிகள், 80% வரையான விலைக்கழிவுகள் கொண்ட Flash Sales, பல்வகைப்பட்ட பிரிவுகளுக்கு இலவச விநியோக சேவை என Daraz கொள்வனவாளர்கள் ஆண்டை மிகுந்த உற்சாகத்துடனும், ஒப்பற்ற சலுகைகளுடன் நிறைவு செய்ய முடியும்.
டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18 வரை தமது அன்பிற்குரியவர்களுக்கு நேர்த்தியான நத்தார் பரிசுகள், பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியமான பொருட்களின் கையிருப்பை மேம்படுத்தல், மற்றும் இலவச விநியோகம் என பல சிறப்புக்களை நுகர்வோர் அனுபவிக்க முடியும். வியக்கவைக்கும் சலுகைகள் மற்றும் பொருட்களுடன், ரூபா 50 மில்லியன் மதிப்பு மிக்க பிரத்தியேக வவுச்சர்கள், ஏராளமான பொருட்களுக்கு இலவச விநியோகம் என, இந்த ஷொப்பிங் அனுபவம் தலைசிறந்ததாக அமையவுள்ளது. இதற்குப் புறம்பாக, Koko மூலமாக Buy Now Pay Later (BNPL) மற்றும் விநியோகத்தின் போது பணம் செலுத்துதல் (Cash on Delivery – COD) போன்ற நெகிழ்வுடனான கொடுப்பனவு வழிமுறைகள், பிரத்தியேகமான வங்கித் தள்ளுபடிகளுடன் மிகச் சிறந்த மதிப்பை வழங்குவதற்காக, பல்வேறு முன்னணி நிதி நிறுவனங்களுடன் Daraz ஒத்துழைத்துச் செயல்படுகின்றது.
இலத்திரனியல் சாதனங்கள், நவநாகரிகம், சுகாதாரம் மற்றும் அழகு பராமரிப்பு, தாய் மற்றும் சேய் நலம் அடங்கலாக, பல்வேறு பிரபலமான வகைகள் மத்தியில் கணிசமான சேமிப்புக்களை கொள்வனவாளர்கள் எதிர்பார்க்க முடியும். இந்த ஆண்டில் கிடைக்கும் பல்வகைப்பட்ட மற்றும் ஆழமான தள்ளுபடிகள், பண்டிகைக்கால மகிழ்ச்சி மற்றும் ஆண்டு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் என உண்மையில் திருப்தியளிக்கின்ற, தங்குதடையற்ற ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதில் Daraz ன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. Daraz ன் 12.12 விற்பனையானது சௌகரியம் மற்றும் தெரிவு ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமைந்துள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, பரிசுகள் மற்றும் ஏற்கனவே உள்ளவற்றுக்கு பதிலாக மேம்பட்டவற்றை மாற்றிக்கொள்ளுதல் என அனைவருக்கும் நேர்த்தியான வாய்ப்பினை வழங்குகின்றது. இதை விட, Daraz ன் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பயன்மிக்க Flash Sales மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மிகவும் கேள்விமிக்க பொருட்களுக்கு கிடைக்கின்ற பாரிய தள்ளுபடிகளுடன், ஈடுபாட்டை மேம்படுத்தும் அனுபவத்திற்கு உத்தரவாதமளிக்கின்றது.
நுகர்வோருக்கு மதிப்பை வழங்குவதற்கு அப்பால், 12.12 மாபெரும் நத்தார் விற்பனை உள்நாட்டு விற்பனையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் மீது விசேட கவனம் செலுத்தவுள்ளது. அனைத்து மட்டங்களையும் சார்ந்த வணிகங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தளத்தையும், ஆண்டிறுதி விற்பனையை முன்னெடுப்பதற்கு ஒப்பற்ற அணுகலையும் இந்த ஊக்குவிப்பு வழங்குவதுடன், புதிய வருமான வாய்ப்புக்களைத் தோற்றுவித்து, அவற்றின் பிரபலத்தை மேம்படுத்துகின்றது. Daraz உடன் இணைந்த சந்தைப்படுத்தல் முயற்சிகள் மற்றும் Daraz Marketing Solutions போன்ற நவீன ஊக்குவிப்புக் கருவிகள் ஆகியவற்றின் அனுகூலத்துடன், இவ்விடுமுறை காலத்தில் பெரும் எண்ணிக்கையான நுகர்வோரை உள்நாட்டு விற்பனையாளர்கள் எட்ட முடியும்.
Daraz Sri Lanka முகாமைத்துவப் பணிப்பாளர் எஹ்சான் சாயா அவர்கள் இப்பிரச்சாரத்தின் முக்கியத்துவம் மற்றும் Daraz ன் பரந்த நோக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “மற்றுமொரு ஆண்டின் நிறைவை நாம் எட்டியுள்ள தருணத்தில், மகத்தான சலுகைகள் மற்றும் பண்டிகைக்கால ஷொப்பிங் குதூகலத்தை வழங்கும் 12.12 மாபெரும் நத்தார் விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் நாம் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றோம். வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த விலைகள் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்கும் அதேசமயம், விற்பனையாளர்களும் தமது விற்பனை வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதற்கு வழிவகுத்து, இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கும் வாய்ப்பினை நாம் தோற்றுவித்துள்ளோம். மின்-வர்த்தகத்தை இலங்கை மக்களின் வாழ்வில் உள்ளார்ந்த அங்கமாக மாற்றுவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரம் பிரதிபலிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
Daraz அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்த 11.11. விற்பனைப் பிரச்சாரமானது, இலங்கையில் நுகர்வோர் தெரிவுகள் பரிமாண வளர்ச்சி கண்டு வருவதை தெளிவாக கட்டியம் கூறியுள்ளது. கொள்வனவாளர்கள் தமது சௌகரியம், பல்வகை தெரிவு மற்றும் மதிப்பிற்காக முன்பை விடவும் கூடுதலான எண்ணிக்கையில் இணைய வழி தளங்களை நாடி வருகின்றனர். உள்நாட்டு நுகர்வோர் தேவைகள் குறித்த Daraz ன் ஆழமான புரிந்துணர்வு மற்றும் மிகச் சிறந்த சிக்கன விலைகளில் உயர் தர பொருட்களை வழங்கும் ஆற்றல், இலவசமாக மற்றும் இலகுவான வழியில் பொருட்களை மீளவும் ஒப்படைப்பது அடங்கலாக தங்குதடையற்ற, சிரமங்களற்ற ஷொப்பிங் அனுபவம் ஆகியவற்றின் காரணமாக மேற்குறிப்பிட்ட மாற்றமானது மின்-வர்த்தக முறைமை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து வருகின்றது.
இந்த உத்வேகத்தின் அடிப்படையில், தற்போது Daraz 12.12 மாபெரும் நத்தார் விற்பனை பிரச்சாரமானது இலங்கையில் பண்டிகைக்கால ஷொப்பிங்கை உண்மையில் மாற்றியமைக்கும் அனுபவத்திற்கு உத்தரவாதமளிக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கையிருப்பில் பேண விரும்பினாலும் சரி, நேர்த்தியான பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினாலும் சரி, அல்லது ஆண்டிறுதி தள்ளுபடி சலுகைகளானாலும் வரி அனைவருக்கும் இது கிடைக்கப்பெறுவதை Daraz உறுதி செய்கின்றது!