சூழல்நேய மற்றும் சிக்கனமான எரிசக்தித் தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் DFCC வங்கி மற்றும் Hayleys Solar இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டாண்மை 

12

Hayleys Fentons Limited நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அங்கமும், இலங்கையில் சூரிய மின்வலுத் தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமுமான Hayleys Solar உடன், மூலோபாயரீதியான புதிய கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளமை குறித்து DFCC வங்கி அறிவித்துள்ளது. சூரிய மின்வலு போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான முதலீடுகள், மின்சாரத்திற்கான செலவுகளை குறைக்க உதவி, சூழல்நேய எரிசக்தியை நோக்கிய தேசிய மாற்றத்திற்கு பங்களிக்கின்றன. ஆகவே நாடெங்கிலும் நிலைபேணத்தக்க எரிசக்தித் தீர்வுகளுக்காள கேள்வி அதிகரித்துச் செல்கின்ற ஒரு தருணத்தில், காலத்தின் தேவைக்கான ஒரு தீர்வாக இந்த ஒத்துழைப்பு மாறியுள்ளது. அந்த வகையில், சூரிய மின்வலு உற்பத்தித் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய விருகின்ற தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு இது கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்பினை அதிகரிப்பதற்காக, DFCC சூரிய மின்னுற்பத்தி கடன்களை வழங்குவதற்காக Hayleys Solar உடன் இணைந்து வங்கி செயல்படவுள்ளது. 

Hayleys Solar வாடிக்கையாளர்களுக்கு DFCC வங்கி வழங்குகின்ற சூரிய மின்னுற்பத்தி கடன் திட்டங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு மாறாத வகையில், 11.50% என்ற கவர்ச்சியான வட்டி வீதத்துடன், வாடிக்கையாளர்களுக்கு ஸ்திரமான மற்றும் சிக்கனமான நிதித் தீர்வை வழங்குகின்றன. Hayleys Solar இடமிருந்து தலைசிறந்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பெற்றுப் பயனடையும் அதேசமயம், தமது சூரிய மின்னுற்பத்தி கட்டமைப்பை மிகவும் சிக்கனமானதாக ஆக்கிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கும் வகையில், 10 ஆண்டுகள் வரை கடன் தவணைக்காலத்தை நீட்டித்துகொள்ளும் தெரிவையும் இத்திட்டம் அவர்களுக்கு வழங்கி, இதன் பயனை மேம்படுத்தியுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிபுணத்துவம் மற்றும் மகத்துவத்திற்கான நன்மதிப்புடன், இலங்கை மக்கள் மத்தியில் அதிகரித்துச் செல்கின்ற எரிசக்தித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட, உயர் திறன் கொண்ட சூரிய மின்வலுத் தீர்வுகளை Hayleys Solar வழங்கி வருகின்றது.

DFCC வங்கியின் தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கமான நிதித் தீர்வுகள் மூலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பாவனைக்கு மாறிக்கொள்வதற்கு ஆதரவளிக்கும் எமது நோக்கத்துடன் Hayleys Fentons உடனான கூட்டாண்மை ஒன்றியுள்ளது. DFCC சூரிய மின்னுற்பத்திக் கடன்கள் மூலமாக, தனிநபர்களும், வணிகங்களும் நிலைபேணத்தக்க எரிசக்திக்கு மாறி, பாரம்பரியமாக மின்சாரத்தைப் பெறுகின்ற வழிமுறைகளில் தங்கியிருப்பதைக் குறைத்து, எதிர்காலத்தில் ஸ்திரமான மற்றும் நம்பகமான எரிசக்தி மூலத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு, சிக்கனமான கடன் வசதிகளை நாம் வழங்குகின்றோம்.  

Hayleys Fentons Limited முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக அவர்கள் DFCC வங்கியுடனான இக்கூட்டாண்மையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் சூரிய மின்வலுவுக்கு மாறிக் கொள்வதற்கு உதவுவதில் அதன் வகிபாகத்தை வெளிப்படுத்தினார். ‘கடன் அல்லாத ஒரு கடன்’ என்ற அதன் பரந்த முயற்சியின் ஒரு அங்கமாக, சிக்கனமான, அவர்களது தற்போதைய மின்சாரக் கட்டணத்தை விடவும் குறைவான மாதாந்த வங்கி தவணைக் கொடுப்பனவுகளுடன், சூரிய மின்வலுவுக்கு மாறிக்கொள்வதற்கு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. இச்சேமிப்புக்கள் உடனடியாகவே எரிசக்திக்கான செலவுகளைக் குறைத்து, குடும்பங்கள் தமது எதிர்காலத்தின் மீது மீள்முதலீடு செய்ய இடமளிக்கும் அதேசமயம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு இலவசமாக மின்சாரத்தைப் பெற்று அனுபவிக்கவும் முடியும் என Hayleys Solar பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் பெரேரா அவர்கள் தனது கருத்தினை தெரிவித்தார். 

எரிசக்திக்கான செலவுகள் தொடர்ந்தும் அதிகரித்து, தனது மின்சார உட்கட்டமைப்பில் அதிகரித்து வரும் கேள்விக்கு இலங்கை முகங்கொடுத்துள்ள நிலையில், DFCC சூரிய மின்னுற்பத்திக் கடன்கள் முன்னோக்கு சிந்தனைமிக்க, சூழல்நேய தீர்வை வழங்குகின்றன. சூரிய மின்வலு உற்பத்தித் தொழில்நுட்பத்தில் Hayleys Solar கொண்டுள்ள ஒப்பற்ற நிபுணத்துவம் மற்றும் DFCC வங்கியின் நெகிழ்தன்மை கொண்ட மற்றும் சிக்கனமாக கடன் தெரிவுகள் ஆகியவற்றின் கூட்டுடன், இலங்கை மக்களின் எரிசக்தித் தேவைகளை சூழல் நேயமான மற்றும் இன்னும் கூடுதலான அளவில் நிலைபேணத்தக்க வழியில் பூர்த்தி செய்வதற்கான தங்குதடையின்றிய, விரிவான அணுகுமுறையை வழங்க முடியும். 

DFCC சூரிய மின்னுற்பத்திக் கடன்கள் குறித்த கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள தயவு செய்து அழையுங்கள், 0112350000.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here