BIMT Campus நிறுவனம் இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து அளிக்கும் புதிய கற்கை பாடநெறித் திட்டமான முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது. தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ நிலைகளின் பதவிகளை வகிப்போரிடமுள்ள ஆற்றல்கள் மற்றும் உற்பத்திதிறனை படிப்படியாக மேம்படுத்துவதே இத் திட்டத்தின் இலக்கு ஆகும். இதன் மூலம் அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரத்துடன் தொடர்புடையதாக தமது பணிகள் தொடர்பான பரந்துபட்ட அறிவு பங்கேற்போருக்கு கிடைப்பதோடு வர்த்தகம், நிதி, கைத்தொழில் மற்றும் வணிகம் ஆகிய துறைகளின் நலன் கருதி அவர்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படும். இத் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த திரு செயின் முனீர் (சர்வதேச பிரிவின் தலைமை நிர்வாகி/ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதிநிதி) கருத்து தெரிவிக்கையில், இத் திட்டம் தொடங்குவது பெரும் திருப்புமுனை எனவும் அதன் மூலம் BIMT Campus இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைக்குமெனவும் குறிப்பிட்டார். “BIMT Campus நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இக் கூட்டிணைவின் மூலம் நடைமுறைச் சாத்திய அறிவை கொண்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பை கற்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அனுபவமிக்க விரிவுரையாளர்கள், நவீன வகுப்பறைகள் மற்றும் உள்ளிருப்புப் பயிற்சிகள் போன்ற சகல விடயங்களும் திருப்தியளிக்கின்றன,” என அவர் மேலும் தெரிவித்தார். BIMT Campus இன் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு பர்ஷாத் ஜமால் கருத்து தெரிவிக்கையில், தமது வெற்றிக்கு பின்னாலுள்ள முக்கிய காரணிகள் இதன் தரமும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுமே என்றார். “நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது சிறிய மற்றும் மத்தியளவிலான தொழில் முயற்சிகளே ஆகும். எமது நாட்டுக்கு இன்னும் பல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை மேலான முகாமைத்துவ பழக்கங்களை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். இது இன்னுமொரு கூட்டிணைவு மாத்திரமல்ல. இது எமது நிறுவனத்தினதும் மாணவர்களினதும் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட தனித்துவமானதொரு நடவடிக்கை. இதன் மூலம் பூகோள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆற்றல் மிக்க தலைவர்களாக தம்மை உயர்த்திக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை பட்டய முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கம்யா பெரேரா, மெலிபன் பிஸ்கட் கம்பனி குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரவி ஜயவர்தன மற்றும் ஸ்விஸ்டெக் அலுமினியம் மற்றும் லங்கா ஸ்விஸ்டெக் அலுமினியம் கம்பனிகளின் பணிப்பாளர்/தலைமை நிறைவேற்று அதிகாரி கலாநிதி தரிந்து அத்தபத்து உள்ளிட்ட சிலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். புகழ்மிக்க சர்வதேச நிறுவனமொன்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட BIMT Campus நிறுவனம் முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கேற்புடைய பல்வேறு கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அத் துறைகள் தொடர்பில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு நியாயமான கட்டணங்களில் கல்வி வாயப்புகளை வழங்குவதே BIMT Campus இன் அடிப்படை நோக்கமாகும்.
Popular
பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவ இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட ‘DIMO Care Camp’ வெற்றிகரமாக நிறைவு
பெரும் போகத்திற்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் DIMO நிறுவனம் இலவசமாக இரண்டாவது தடவையாக முன்னெடுத்திருந்த 'DIMO Care Camp' உழவு இயந்திர சேவை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதோடு,...
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் வேல்டிங் தொழிலாளர்களுக்கும் விஷேட செயலமர்வுகளை நடாத்திய மெல்வா நிறுவனம்
இலங்கையின் உருக்கு கம்பி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் அனுராதபுர மாட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு (Technical Officers) கட்டுமானக் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்றை அனுராதபுரம் மெங்கோ ஹோட்டலில் கடந்த நொவம்பர்...
பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு
பழம்பெரும் அறிஞரும் கலாசாரவாதியுமான பேராசிரியர் குணபால பியசேன மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மலலசேகர அறக்கட்டளை “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait” (பேராசிரியர் குணபால மலலசேகர: ஒரு புகைப்பட...
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் விவசாய இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் DIMO பரிசு மழை அறிமுகம்
விவசாய இயந்திரமயமாக்கல் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான மற்றுமொரு படியாக, Mahindra உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு இலவச மடிகணனிகள், டெப் கணனிகள், மின்சார சைக்கிள்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை...
பங்களாதேஷில் எழுந்துள்ள நெருக்கடிக்கு மத்தியிலும் 67% வரிக்குப் பின்னரான இலாபத்தை JAT நிறுவனம் பதிவாக்கியுள்ளது
வரிக்குப் பின்னரான இலாபம் கடந்த ஆண்டில் ரூபா 306 மில்லியனாக காணப்பட்ட நிலையில், அது ரூபா 512 மில்லியன் என்ற பாரிய அதிகரிப்பை பதிவாக்கியுள்ளது
இலங்கை வருமானம் 8% ஆல் அதிகரித்து ரூபா 3,287...