இலங்கையின் முன்னணி மொபைல் வலையமைப்புக்களில் ஒன்றான ஹட்ச், அண்மையில் இடம்பெற்ற SLIM Digis 2024 நிகழ்வில், 1 தங்க விருது, 4 வெள்ளி விருதுகள் மற்றும் 1 வெண்கல விருது உள்ளிட்ட 6 மகத்தான விருதுகளை வென்று, அதன் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மகத்துவத்தை மீண்டும் ஒரு தடவை மிகவும் தனித்துவமாக நிலைநாட்டியுள்ளது. இந்த ஆண்டு SLIM Digis நிகழ்வில் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள ஒரேயொரு தொலைதொடர்பாடல் சேவை நிறுவனமாக மாறியுள்ள ஹட்ச், டிஜிட்டல் ஈடுபாட்டில் தனது முற்போக்கான அணுகுமுறை மற்றும் உயர்ந்த மட்டத்தில் போட்டி நிலவும் சந்தையில் புத்தாக்கத்தின் மீது தனது அர்ப்பணிப்பு ஆகியவற்றை சிறப்பாக வெளிகாண்பித்துள்ளது. Best Performance Marketing Campaign பிரிவில் இம்முறை வென்றுள்ள தங்க விருதானது SLIM Digis நிகழ்வில் இது வரை ஹட்ச் நிறுவனம் வென்றுள்ள முதலாவது தங்க விருதாக மாறியுள்ளதுடன், மகத்தான பெறுபேறுகளை முன்னெடுப்பதில் இந்நிறுவனத்தின் தளராத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
தங்க விருதுக்குப் புறம்பாக, நிகழ்நேரத்தில் நுகர்வோரை உள்வாங்கி, ஈடுபாடுகளைப் பேணும் வர்த்தகநாமத்தின் ஆற்றலைக் காண்பிக்கும் வகையில் Best Use of Agile/Moment Marketing, தனது விளம்பர ஊக்குவிப்புக்களில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களின் இணைப்பை தங்குதடையின்றிப் பயன்படுத்தும் ஹட்ச் நிறுவனத்தைப் போற்றும் வகையில் Best Digital/Social Platform Integration, அதன் 9 Apps மற்றும் Bill Shock விளம்பர பிரச்சாரங்களுக்கு, Best Digital Marketing Campaigns in Telecom (இரு வெள்ளி விருதுகள்) ஆகியவற்றுக்காக ஹட்ச் நிறுவனம் வெள்ளி விருதுகளை வென்றுள்ளது. பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களுடன் ஈடுபாட்டு இணைப்பில் இருப்பதற்காக செல்வாக்கு செலுத்துகின்றவர்களின் உள்ளடக்கங்களை சிறந்த முறையில் பயன்படுத்தும் ஹட்ச் நிறுவனத்தின் திறனை அங்கீகரிக்கும் வகையில் Best Use of Creator/Influencer Content என்ற வகைக்கான வெண்கல விருதும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இச்சாதனைகள் குறித்து ஹட்ச் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “டிஜிட்டல் மகத்துவத்தில் எமது ஓயாத அர்ப்பணிப்பு மற்றும் எல்லைகளைத் தாண்டி சிறப்பாக முன்செல்வதில் எமது விடாமுயற்சி ஆகியவற்றை இவ்விருதுகள் பிரதிபலிக்கின்றன. டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடு குறித்த எமது புத்தாக்கத்துடனான அணுகுமுறைக்கான வலுவான அங்கீகாரமாகவும் இந்த விருதுகள் அமைந்துள்ளதுடன், SLIM Digis 2024 நிகழ்வில் கிடைத்துள்ள அங்கீகாரம் எமக்குக் கிடைத்துள்ள கௌரவமாகும். இலங்கையின் முன்னணி மொபைல் வலையமைப்புக்களில் ஒன்று என்ற வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்ற அனுபவம் மற்றும் எமது தொடர்பாடல்களின் வினைதிறன் ஆகியவற்றை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கு நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
பிரசித்தி பெற்ற SLIM Digis விருதுகள், உலகளாவிய டிஜிட்டல் துறையில் இப்பிராந்தியத்தில் விரிவடைந்து வருகின்ற ஆதிக்கத்திற்கு உந்துசக்தியளிக்கின்ற புத்தாக்கம் மற்றும் திறமையைக் காண்பிக்கும் இலங்கையிலுள்ள மிகச் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. வணிகம், சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் துறைகளில் புகழ்பூத்த தொழில் வல்லுனர்களின் நடுவப்பணியுடன் இவ்விருதுகள் தீர்மானிக்கப்படுவதுடன், உலகளாவிய தரஒப்பீட்டு நியமங்களுக்கு ஈடாக, சர்வதேச தராதரங்களை இவ்விருதுகள் பேணி வருகின்றன.
ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள்
ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரசன்னத்துடன், தொலைதொடர்பாடல்கள் அடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது.
1997 ஆம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004ஆம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது.
சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றது.