நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகளுக்கு ஆதரவளித்து வருகின்ற ஹட்ச், இலங்கையின் இயற்கை சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. உலக நிலைபேற்றியல் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் வெள்ளவத்தை கடற்கரையில் கரையோர சிரமதானம் – 2024 பணியை அண்மையில் முன்னெடுத்து இந்த அர்ப்பணிப்பை வெளிக்காண்பித்துள்ளது. 2024 ஒக்டோபர் 19 அன்று வெள்ளவத்தை கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட இப்பணியில் ஹட்ச் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பங்குபற்றியிருந்ததுடன், நிலைபேறான நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் சூழலைப் பாதுகாத்தல் தொடர்பில் நிறுவனத்தின் நீண்டகால நோக்கத்தையும் காண்பிக்கின்றது. சூழல் மீதான விழிப்புணர்வை முன்னெடுத்து, சமூகத்தின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் அதேசமயம், இலங்கை முகங்கொடுத்து வருகின்ற நிலைபேற்றியல் சார்ந்த முக்கியமான சவால்களுக்கு தீர்வு காணும் நோக்குடனான பரந்தளவிலான தொடர் முயற்சிகளின் அங்கமாக இது அமைந்துள்ளது.
உலக நிலைபேற்றியல் தினம் 2024 இன் கருப்பொருளான “Our Land, Our Future. We are #GenerationRestoration” என்பதன் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஹட்ச் கடற்கரை சிரமதானம் 2024 முயற்சியானது ஐநா நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்கு 15 – நிலத்தில் வாழ்க்கை மற்றும் சூழல் கட்டமைப்புக்களின் பாதுகாப்பு என்பதன் மீது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுடன் நேர்த்தியாக ஒன்றியுள்ளது. இலங்கையின் கரையோர சூழல்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தியவாறு, இச்சிரமதானப் பணியின் போது கரையோரத்திலிருந்து 250 கிலோவுக்கு மேற்பட்ட பிளாஸ்திக் மற்றும் ஏனைய கழிவுகளை ஹட்ச் ஊழியர்கள் அகற்றியுள்ளதுடன், இவை பொறுப்புணர்வுடன் மீள்சுழற்சி செய்யப்படும். பொறுப்புணர்வுமிக்க வர்த்தக நிறுவனம் என்ற வகையில் சூழலைப் பாதுகாப்பதில் ஹட்ச் நிறுவனத்தின் பரந்த நோக்கத்தை இச்செயற்திட்டம் மீளவும் வலியுறுத்துகின்றது.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “நிலைபேற்றியல் என்பது ஒரு முறை மாத்திரம் மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடு அல்ல, இது தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பாகும். கடற்கரையை சிரமதானம் செய்தல் போன்ற இத்தகைய முயற்சிகள் மூலமாக, கழிவுகளை அகற்றுவதுடன் மாத்திரம் நின்றுவிடாது, சூழலைப் பேணிப் பாதுகாப்பதில் விழிப்புணர்வைத் தோற்றுவித்து, ஏனையவர்களும் முற்கூட்டியே இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதே எமது நோக்கம். நாம் சேவைகளை வழங்குகின்ற சமூகங்கள் மத்தியில் நேர்மறையான மற்றும் நீடித்து நிலைக்கின்ற விளைவைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற பரந்த அர்ப்பணிப்பின் அங்கமாக எமது முயற்சிகள் அமைந்துள்ளன,” என்று குறிப்பிட்டார்.
கழிவுகளை அகற்றுவதால் ஏற்படுகின்ற உடனடி பலனுக்கு அப்பால், நீண்டகால சூழல் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் சூழல் பொறுப்புணர்வு மீது கவனம் செலுத்தியுள்ள ஹட்ச் நிறுவனத்தின் விரிவான நிலைபேற்றியல் மூலோபாயத்தின் முக்கியமானதொரு கூறாக இச்சிரமதானப் பணி காணப்படுகின்றது. சிரமதானப் பணிகளை முன்னெடுப்பது மாத்திரமன்றி, பாரியளவிலான மர நடுகை, சூழலின் சொந்த தாவர மீட்சி மற்றும் சமூக அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகள் மூலமாக இந்த இயற்கை வாழ்விடங்களை மீளுருவாக்கம் செய்வதிலும் ஹட்ச் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், இவை அனைத்தும் நெகிழ்தன்மை கொண்ட சூழல் கட்டமைப்புக்களை வளர்த்து, நிலைபேற்றியல் கொண்ட வாழ்வு சார்ந்த கலாச்சாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள்:
ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரசன்னத்துடன், தொலைதொடர்பாடல்கள் அடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது.
1997 ஆம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004ஆம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது.
சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றது.