7 ஸ்டார் கோதுமை மா உற்பத்தியாளரான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் உள்நாட்டு தொழில்துறை திறமைகள் மற்றும் படைப்பாற்றல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் சமையல் சம்பியன்ஷிப் 2024 போட்டியில் பாண் மற்றும் பேஸ்டி ஆகியவற்றுக்கான பிரிவுக்கான அனுசரணையாளராக இணைந்துள்ளது. இலங்கையின் சிறந்த சுவையுணவுக் கலைஞர்களைக் காட்சிப்படுத்தும் பெருமைக்குரிய போட்டி 2024 ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 02ஆம் திகதி வரை கண்டியில் நடத்தப்பட்டது.
கண்டி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், கலாசார முக்கோண ஹோட்டல் உரிமையாளர் சங்கம், நுவரெலியா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமையல் சம்பியன்ஷிப் 2024 நிகழ்வு இலங்கையின் விருந்தோம்பல் துறையின் அடையாளத்திற்கான நிகழ்வாக அமைந்துள்ளது.
சமையல் துறையின் சிறப்பு, திறன் மற்றும் சமையல்கலை நிபுணர்கள், சமையலாளர்கள், பேஸ்டி சமையல் நிபுணர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களை ஊக்குவிப்பதற்கான தளத்தை வழங்குவதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். பாண் மற்றும் பேஸ்டி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
கண்டி, கலாசார முக்கோணம் மற்றும் நுவரெலியா பகுதிகளிலிருந்து ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் (HORECA) போன்றவற்றிலிருந்து 300ற்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டனர். தொழில்துறையின் நிபுணர்கள் தமக்கான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், தமது துறையில் உள்ள நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
சிறந்த தரமான மற்றும் புத்துணர்வான தயாரிப்புக்களை ஊக்குவிப்பதில் செரண்டிப் கோதுமை மா ஆலை கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இணங்க இந்த அனுசரணை வழங்கப்பட்டது. நாட்டின் விருந்தோம்மல் துறையின் தரத்தை உயர்த்தும் அதேநேரம், செரண்டிப் கோதுமை மா ஆலையின் உலகத் தரம்வாய்ந்த கோதுமைத் தயாரிப்புக்களைக் காட்சிப்படுத்தி, அதன் மதிப்புக்களை மீண்டும் வலியுறுத்தும் வகையில் சமையல் சம்பியன்ஷிப் 2024 அமைந்திருந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முன்னணி பல்வகை குடும்ப வணிக நிறுவனமான டுபாய் அல் குரைர் இன்வெஸ்மன்ட் நிறுவனத்திற்கு உரித்தான துணை நிறுவனமான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் சமையல் சம்பியன்ஷிப் 2024 போட்டியில் பாண் மற்றும் பேஸ்டி ஆகியவற்றுக்கான பிரிவுக்கான அனுசரணையாளராக இந்தப் பயணத்தில் இணைந்து சமையலின் சிறப்பைக் கொண்டாடியது.