DFCC வங்கி, டிக்கோயாவில் பண வைப்பு வசதி கொண்ட MySpace ATM ஐ திறந்து வைத்துள்ளது 

17

கிராமப்புற சமூகங்கள் மத்தியில் டிஜிட்டல் சுய வங்கிச்சேவைகளை விஸ்தரித்து, நிதியில் ரீதியாக அனைவரையும் அரவணைக்கும் தனது ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் வகையில் மற்றுமொரு தனித்துவமான முயற்சியாக, டிக்கோயாவில் தனது அதிநவீன ‘MySpace’ டிஜிட்டல் சுய வங்கிச்சேவை மையத்தை DFCC வங்கி திறந்து வைத்துள்ளது. டிக்கோயாவில் அமைந்துள்ள இப்புதிய DFCC MySpace மையமானது, இப்பிரதேசம் இது வரை அனுபவித்திராத வகையிலான சௌகரியத்தை வழங்கும் வகையில், 24 மணி நேரமும் பண வைப்புக்களுக்கும், பணத்தை மீளப்பெறுவதற்கும் இடமளிக்கின்ற தனித்துவமான அதிநவீன ATM/CDM இயந்திரங்களைக் கொண்டுள்ளது. டிக்கோயாவில் ATM/CDM சேவைகளை வழங்கும் ஒரேயொரு வங்கி என்ற வகையில், இதற்கு முன்னர் தமது அன்றாட வங்கித் தேவைகளுக்கான குறைந்தபட்சம் ஹட்டன் நகருக்கு கணிசமான தூரம் பிரயாணிக்க வேண்டிய சிரமங்களுக்கு முகங்கொடுத்த கிராமப்புற சமூகங்களுக்கு தற்போது DFCC வங்கி இவ்வசதியை ஏற்படுத்தியுள்ளது.        

டிக்கோயாவில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள DFCC MySpace மையமானது, VISA, JCB, மற்றும் LankaPay வலையமைப்பு அட்டைகள் அடங்கலாக, பல்வகைப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கி அட்டைகளை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையிலுள்ள எந்தவொரு வங்கியினதும் அட்டைகளை உபயோகிப்பதற்கு இடமளிக்கின்றது. பணத்தை வைப்புச் செய்தல் மற்றும் மீளப்பெறல் ஆகியவற்றுக்குப் புறம்பாக, கணக்கிலுள்ள மீதியை அறிந்து கொள்ளுதல், DFCC கடனட்டைகளுக்கான கொடுப்பனவுகள், இலங்கை மின்சார சபை, LECO, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் டயலொக், எயார்டெல் மற்றும் ஹட்ச் உள்ளிட்ட தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்கள் போன்ற சேவைகளுக்கான பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வகைப்பட்ட ஏனைய வங்கிச்சேவைகளையும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும். இச்சேவைகள் அனைத்தும் பிரதேசவாசிகள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்துவதுடன், அவர்கள் தற்போது தமது அன்றாட பண வசூல் மற்றும் வங்கித் தேவைகளை சிரமங்களின்றி நிர்வகிக்க முடியும்.           

DFCC வங்கியின் பிரதம டிஜிட்டல் அதிகாரியான ஒமார் சாஹிப் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “டிக்கோயாவில் வசிக்கும் சமூகத்திற்கு டிஜிட்டல் சுய வங்கிச்சேவைகளுக்கு சௌகரியத்துடனான அணுகலை வழங்கியுள்ள முதலாவது வங்கியாக மாறியுள்ளமை எமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. மக்களுக்கு அன்றாட வங்கிச்சேவைகளை வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள வழிவகுத்து, அவர்களுடைய செலவுகளையும், நேரத்தையும் மீதப்படுத்த இம்முயற்சி அவர்களுக்கு உதவுகின்றது. டிஜிட்டல் புத்தாக்கத்தினூடாக அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சி மீதான எமது அர்ப்பணிப்பை நாம் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்ற நிலையில், இந்த முயற்சி ஏற்படுத்தவல்ல நல்விளைவு குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.    

குறிப்பாக பின்தங்கிய கிராமப்புற பிரதேசங்கள் அடங்கலாக, இலங்கை எங்கிலும் டிஜிட்டல் வங்கிச்சேவைகளை கைக்கொள்வதை ஊக்குவிப்பதில் DFCC வங்கியின் விரிவான மூலோபாயத்தில் இந்த மையம் மிகவும் முக்கியமானது. இலங்கை மக்கள் அனைவருக்கும் நிதியியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கி, நிதியியல் ரீதியாக அரவணைக்கும் நோக்குடன், வங்கி முன்னெடுத்து வருகின்ற நிதியியல் சேவைகள் தொடர்பான அணுகுமுறைக்கு இப்புதிய மையம் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இதற்கு அப்பால், டிக்கோயாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய DFCC MySpace மையமானது இப்பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து, பிரதேசத்தில் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நம்பிக்கையூட்டுகின்றது.

நிதியியல் சேவைகளுக்கான அணுகல் பாரம்பரியமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகள் காணப்பட்ட பிராந்தியமொன்றில், கிராமப்புற சமூகங்களுக்கும் நவீன வங்கிச்சேவை தீர்வுகளுக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளியைப் போக்குவதற்கு தீர்மானம்மிக்க அடியொன்றை DFCC வங்கி முன்னெடுத்து வைத்துள்ளது. டிக்கோயாவில் பணத்தை வைப்புச் செய்யும் வசதியுடன் கூடிய சுய சேவை ATM தீர்வை வழங்கும் ஒரேயொரு வங்கி என்ற ரீதியில், நிதியியல் சேவைகள் துறையில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை DFCC வங்கி மேலும் வலுப்படுத்துவதுடன், டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்தினூடாக இலங்கை மக்களுக்கு வலுவூட்டுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here