Salesforce, இலங்கையில் செயற்கை நுண்ணறிவுடன் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடாத்தவுள்ளது

7

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (technology) வலுவூட்டலுடன் #1 CRM ஆன Salesforce, டிஜிட்டல் இலங்கை குறித்த நாட்டின் 2030 குறிக்கோளுடன் ஒன்றிக்கும் வகையில் இலங்கையில் வணிகங்களை டிஜிட்டல்ரீதியாக வளர்ச்சி மாற்றம் காணச் செய்வதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இன்று மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னியக்கமயமாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் Salesforce இன் நவீன புத்தாக்கத்தின் அனுகூலத்துடன், இலங்கையில் தொழில்துறைகள் மத்தியில் வணிகங்களுக்கு அவற்றின் வாடிக்கையாளர் அனுபவங்களில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள Salesforce ஆனது கணிசமான வணிக மதிப்பை வெளிக்கொண்டு வரவுள்ளது.          

செயற்கை நுண்ணறிவின் முன்னெடுக்கப்படும் அனுபவங்களின் புதிய யுகத்தில், தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் குறித்த எதிர்பார்ப்புக்கள் மாற்றம் கண்டு வருவதுடன், உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்து, செயல்திறனை முன்னெடுத்து, வாடிக்கையாளர்களுடனான இடைத்தொடர்பாடல்களையும், ஈடுபாடுகளையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான டிஜிட்டல் மூலோபாயங்களைத் தோற்றுவிப்பதற்காக Campus Direct, Cinnamon Hotels, Keells Super, Dilmah Tea, Third Space Global போன்ற இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் Salesforce இன் உதவியை நாடியுள்ளன. புத்தாக்கம், உள்ளடக்கம் மற்றும் நிலைபேணத்தக்க வளர்ச்சி ஆகியவற்றுக்காக டிஜிட்டல்ரீதியாக நாட்டிற்கு வலுவூட்ட வேண்டும் என்ற இலங்கையின் 2030 இலக்குடன் (2030 vision) ஒன்றியதாக, நாட்டின் வணிகத் துறையில் புத்தாக்கத்திற்கு உந்துசக்தியளித்து, செயற்கை நுண்ணறிவு, தரவு, மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் உறவுமுறை முகாமைத்துவ நடைமுறைகள் மீது கவனம் செலுத்தியுள்ள டிஜிட்டல் மூலோபாயங்களின் மதிப்பை Salesforce சுட்டிக்காட்டியுள்ளது.         

ஊழியர்கள் மற்றும் பணிக்குழாத்துடன் ஒன்றித்து பணிகளை முன்னெடுக்கக்கூடிய, தன்னாட்சி கொண்ட, தேவைக்கேற்றவாறு வடிவமைக்கக்கூடிய முகவர்கள் மற்றும் கருவிகள் வரிசையான Agentforce என்பதை Salesforce அண்மையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. எந்தவொரு நிறுவனமும் Agentforce இன் துணையுடன், குறைந்தளவான குறியீட்டு கருவிகளுடன் விரைவாகவும், இலகுவாகவும் தமது சொந்த முகவர்களை கட்டியெழுப்பி, தனிப்பயனாக்கம் செய்து மற்றும் விரிவுறுத்தவும் முடியும். Agentforce இன் வரையறையற்ற டிஜிட்டல் பணிக்குழாமான AI agents தரவினை பகுப்பாய்வு செய்து, வாடிக்கையாளர் சேவை விசாரணைகளுக்கு பதிலளித்தல், விற்பனை வாய்ப்புக்களை தரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை உச்சப்பயனாக்கம் செய்தல் போன்ற தேவைகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.                  

முகவர்களின் எல்லைகளை விரிவுபடுத்துகின்ற Salesforce தளம், முடிவற்ற ஆற்றலுக்கு இடமளித்து, ஒவ்வொரு வாடிக்கையாளருடனான இடைத்தொடர்பாடலிலும் எந்தவொரு பாத்திரம் அல்லது மார்க்கத்தின் மத்தியிலும் முன்னெதிர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, Customer 360 போன்ற வலிமைமிக்க ஆற்றல்களுடன், விற்பனை, சேவை, சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகம் போன்ற பயன்பாடுகளின் முழுமையான ஆற்றலின் அனுகூலத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். தொழில்துறையில் முன்னிலை வகிக்கின்ற ஒருங்கிணைப்பு, தன்னியக்கமயமாக்கம் மற்றும் API முகாமைத்துவத் தளமான MuleSoft ஆனது, 205 பில்லியன் ஒருங்கிணைப்புப் பாய்ச்சல் மாதாந்த செயல்பாடுகளையும், 331 பில்லியன் தன்னியக்கமயமாக்க பாய்ச்சல் மாதாந்த செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகின்றது. Salesforce உருவாக்குனர்கள் மற்றும் நிர்வகிப்பாளர்கள் தமது API களின் அனுகூலத்துடன், மூன்றாம் தரப்பு தரவைக் கொண்டு வருவதற்கு இடமளிப்பதால், Agentforce இன் ஆற்றல்களை மேம்படுத்த MuleSoft ஆல் முடியும். பணிப்பாய்ச்சலின் போது ஒவ்வொரு ஊழியருக்கும் முகவருக்குரிய திறன்களுக்கு Slack வலுவூட்டுவதுடன், ஊழியர்கள் முகங்கொடுக்கும் பயன்பாட்டு சந்தர்ப்பங்களின் போது Agentforce ஐ விரிவுறுத்துவதற்கான மிகச் சிறந்த இடமாகக் காணப்படுகின்றது. பயனர்கள் ஊழியர்கள் முகவர்களை கட்டமைத்து, தனிப்பயனாக்கம் செய்து கொள்ள முடிவதுடன், மிகவும் பொருத்தமான வழியில் சிறந்த பின்னணியை வகுத்து, Slack மூலமாக பணி ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற முகவர்களுடன் ஒருங்கிணைந்து பணிகளை முன்னெடுக்க முடியும்.                             

செய்தி குறித்த கருத்துக்கள்:

Salesforce India இன் தவிசாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அருந்ததி பட்டாச்சார்யா அவர்கள் கூறுகையில், “பொருளாதாரரீதியின் போட்டி அனுகூலம், வேலை வாய்ப்பை தோற்றுவித்தல், நிலைபேணத்தக்க அபிவிருத்தி மற்றும் மேம்பட்ட சேவை விநியோகம் ஆகியவற்றுக்கு உந்துசக்தியளிக்கின்ற வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தொழில்நுட்பத்தை கைக்கொள்வதில் இலங்கை போற்றத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை ($15 billion digital economy by 2030) எட்ட வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்குடன் ஒன்றியதாக, வலுவான செயற்கை நுண்ணறிவு மூலோபாயத்தின் துணையுடன் நாடெங்கிலும் வணிகங்களுக்கு மதிப்பைத் தோற்றுவிப்பதை நாம் முன்னெடுத்து வருகின்றோம். துடிதுடிப்பான, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு துணை போகின்ற, வளம் கொழிக்கும், உள்ளடக்கம் கொண்ட மற்றும் பசுமையான இலங்கை டிஜிட்டல் சூழல் தொகுதியை மேம்படுத்துவதற்கு நாம் ஆவலாக உள்ளோம். வளர்ச்சி மீதான இந்த அர்ப்பணிப்பானது, இன்னும் அதிக அளவில் இலங்கை வணிகங்களுடன் உறவுமுறைகளை வலுப்படுத்தி, டிஜிட்டல் யுகத்தில் வளம் பெறுவதற்கான வளங்களை வழங்கி வலுவூட்டுவதும் அடங்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.          

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவரும்/குழும பிரதம தகவல் அதிகாரியும், John Keells IT இன் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் சண்முகநாதன் அவர்கள் Salesforce சூழல் தொகுதியுடன் கைகோர்த்துள்ளமையின் முக்கிய வகிபாகத்தை சுட்டிக்காட்டி. கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் வளர்ச்சி மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் தொழில்துறைகள் மத்தியில் விசாலமான அளவில் காணப்படுவதுடன், மகத்தான அனுபவங்களையும், கணிசமான வணிக மதிப்பையும் வெளிக்கொண்டு வருகின்ற ஒரு வளரும் டிஜிட்டல் சூழல்தொகுதி காரணமாக தொடர்ந்தும் பரிமாண வளர்ச்சி கண்டு வருகின்றது. எமது மதிப்பு சூழல்தொகுதியின் மத்தியில் புத்தாக்கத்தை விரைவுபடுத்த இந்த கூட்டாண்மை எமக்கு இடமளிப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கான வெளிப்பாடுகளை வளப்படுத்தி, மகத்தான வகையில் முன்னெடுப்பதற்கு எமக்கு இடமளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.  

குழும தகவல் தொழில்நுட்ப பிரதம தொழிற்பாட்டு அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட உப தலைவருமான நாலக உமகிலிய அவர்கள் கருத்து வெளியிடுகையில், மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் முகாமைத்துவம் ஆகியவற்றில் வலுவான கவனத்துடன், JKH இல் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற, வாடிக்கையாளர் உறவுமுறை முகாமைத்துவம் (CRM), விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நம்பிக்கைத்திட்ட (Loyalty) தொழிற்பாடுகளை மாற்றியமைப்பதில் Salesforce உடனான எமது ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. JKH இன் குறிப்பிட்ட துணை நிறுவனங்கள் சிலவற்றில் CRM மற்றும் Loyalty தீர்வுகள் குறித்த வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், Salesforce இன் புத்தாக்கமான தொழில்நுட்ப தீர்வுகள், வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்தி, வணிக நடைமுறைகளை உச்சப்படுத்தி, மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் மத்தியில் கணிசமான செயல்திறன் பலாபலன்களை ஈட்ட எமக்கு வலுவூட்டும்,” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here