ஹேமாஸ் மருத்துவமனையின் Mediclinic தற்போது MyClinic என மீள்நாமமிடப்பட்டுள்ளது

10

வெள்ளவத்தை பிரதேசத்தில் நன்கறியப்பட்ட மருத்துவ சேவைகள் மையமும், ஆரம்ப மருத்துவ சிகிச்சை சேவை மையமுமான Mediclinic (மெடிகிளினிக்), ஹேமாஸ் மருத்துவமனையில் கூட்டாண்மையின் கீழ் இயங்கி வருவதுடன், MyClinic By Hemas Hospitals என மீள்நாமமிட்டுள்ளது. தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட, நோயாளரை மையமாகக் கொண்ட கவனிப்பை வழங்குவதில் ஹேமாஸ் மருத்துவமனையின் அர்ப்பணிப்பிற்கு அமைவாக இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது. புதிய நாமத்தின் கீழ் நோயாளர்களும், அவர்களுடைய உறவுகளும் இந்த மையம் பெயர்போன அதே வகையான ஒப்பற்ற தராதரங்களுடனான கவனிப்பையும், சேவையையும் தொடர்ந்தும் பெற்று அனுபவிக்க முடியும். ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் மெடிகிளினிக் ஆகியவற்றுக்கிடையிலான புரட்சிகரமான கூட்டாண்மையின் பலனாக மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு சேவைகளை தற்போது அனுபவிக்க முடியும். வெள்ளவத்தையில் உங்களுடைய சூழலில் அமைந்துள்ள மருத்துவ சிகிச்சை மையம், பெருமளவு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள ஹேமாஸ் மருத்துவமனையின் கவனிப்பை தற்போது உங்களுக்கு வழங்கும்.      

நீட்டிக்கப்பட்ட நேரத்துடனான வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு சேவைகள் (மு.ப 7 மணி முதல் பி.ப 7 மணி வரை) மற்றும் முழுமையான மருந்து வகைகளையும் கொண்ட பார்மசி, பகல்நேரத்தில் நீட்டிக்கப்பட்ட வைத்திய நிபுணர் சேவைகள், காயங்களுக்கான விசேட சிகிச்சை மையங்கள், முழுமையான மருத்துவ சோதனை ஆய்வுகள், நவீன ஆய்வுகூட சேவைகள், ஈசிஜி (ECG) வசதிகள், மற்றும் விசேட கண் மற்றும் பல் சிகிச்சை வசதி அடங்கலாக, ஒரே கூரையின் கீழ் பல்வேறுபட்ட அன்றாட மருத்துவப் பராமரிப்பு தேவைகளை ஹேமாஸ் மருத்துவமனையின் MyClinic வழங்குகின்றது. தொழில்துறையின் வழக்கங்களுக்கும் மேலாக, இந்த மையத்தில் 2 மணி நேரத்தினுள் ஆய்வுகூட சோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதுடன், வீடுகளுக்கே வந்து மாதிரிகளை சேகரிக்கும் வசதிகளும் உள்ளன. ஆகவே முன்னரை விடவும், தற்போது MyClinic மூலமாக உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகூட சோதனைகளை உங்களுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.          

இலக்கம் 36A, காலி வீதி, கொழும்பு 06 என்ற முகவரியில் அமைந்துள்ள ஹேமாஸ் மருத்துவமனையின் MyClinic சிகிச்சை மையத்திற்கு வருகை தந்து, தனிப்பட்ட கவனிப்புடனான, மற்றும் கருணைமிக்க பராமரிப்புடனான முழுமையான மருத்துவ சேவைகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் பெற்று அனுபவியுங்கள். கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள அல்லது வீட்டிலிருந்துகொண்டே சேவைகளைக் கோரிப் பெற்றுக்கொள்ள, 011 2 593959 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here