இந்தியாவின் புதுடெல்லி மாநகரில் இந்திய வர்த்தக சம்மேளனம் அண்மையில் ஏற்பாடு செய்த, 2வது ICC Emerging Asia Banking Conclave and Awards 2024 நிகழ்வில் இரு அங்கீகாரங்களைப் பெற்று DFCC வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் வங்கித்துறையில் மகத்துவத்திற்கான அங்கீகாரத்திற்கு மிகவும் மதிப்புமிக்க நிகழ்வாக இது அமைந்துள்ளதுடன், “Best Performance of Growth” (மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறன் வளர்ச்சி) மற்றும் “Best Performance of Profitability” (மிகச் சிறந்த இலாபத்திறன்) ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட DFCC வங்கி, தொழிற்துறையில் தலைமைத்துவ ஸ்தானத்தை நோக்கிய தனது பயணத்தில் முக்கியமான சாதனை மைல்கல்லொன்றை நிலைநாட்டியுள்ளது.
DFCC வங்கியின் வலுவான நிதியியல் மூலோபாயம், தொழிற்பாட்டு மகத்துவம் மற்றும் தன்னுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு மகத்தான மதிப்பை வழங்குவதில் காண்பிக்கும் ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான பலனாக இந்த இரட்டை அங்கீகாரங்கள் அமைந்துள்ளன. மிகவும் போட்டிமிக்க மற்றும் சவாலான பொருளாதார சூழலில், கணிசமான வளர்ச்சி மற்றும் இலாபத்திறன் ஆகியவற்றை ஒரு நேரத்தில் அடையப்பெறுவது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதொரு முயற்சி. பாதகமான சூழலுக்கு மத்தியிலும் தளைத்தோங்குவதில் வங்கியின் ஆற்றலை இவ்விருதுகள் வெளிக்காண்பிப்பதுடன், அதன் தலைமைத்துவ அணியின் நெகிழ்திறன் மற்றும் மூலோபாய சாமர்த்தியம் ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகின்றது. DFCC வங்கியின் வெற்றியானது பெறுபேற்றுத்திறன் புள்ளி விபரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுவது மாத்திரமன்றி, தொழிற்துறையில் தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டி, அதன் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வரும் ஆற்றலையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது என்பதை இது காண்பிக்கின்றது.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “பெருமதிப்புமிக்க இவ்விருதுகளை பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த கௌரவமளிப்பதுடன், நிலைபேறு கொண்ட வளர்ச்சி மற்றும் இலாபத்திறன் ஆகியவற்றில் மூலோபாயரீதியான எமது கவனத்தை இது பிரதிபலிக்கின்றது. இந்த அங்கீகாரம் எமது அணியின் கடின உழைப்பிற்கான பரிசாக அமைந்துள்ளதுடன், சவால்மிக்க சந்தை நிலைமைகள் மத்தியில் எமது வெற்றியை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயற்படுவதற்கும் ஊக்குவிக்கின்றது. தலைசிறந்த மதிப்பு மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் ஆகியவற்றை நாம் முன்னெடுக்கும் நிலையில், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினர் மீதான எமது அர்ப்பணிப்பையும் இது மீள உறுதிப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.
ICC Emerging Asia Banking Conclave and Awards நிகழ்வானது, ஆசிய பிராந்தியத்தில் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறையில் மகத்துவத்திற்கு அங்கீகாரமளித்து, கௌரவப்படுத்தும் நோக்குடன் இந்திய வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற மிகவும் மதிப்பிற்குரிய ஒரு செயற்திட்டமாகும். மகத்தான பெறுபேற்றுத்திறன், புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்துடன், வளர்ச்சி, இலாபத்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டுகின்ற நிறுவனங்களை இவ்விருதுகள் போற்றிக் கொண்டாடுகின்றன. தொழிற்துறை தலைவர்கள் தமது சாதனைகளை வெளிக்காண்பிப்பதற்கான தளத்தை இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்குவதுடன், வங்கித்துறை சமூகத்தின் மத்தியில் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் மகத்துவத்திற்கான உணர்வையும் வளர்க்கின்றது.
DFCC வங்கி தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு, புத்தாக்கங்களை வெளிக்கொண்டு வருகின்ற நிலையில், வங்கி மற்றும் தொழிற்துறையின் ஏனைய செயற்பாட்டாளர்களுக்கு நீண்ட கால வெற்றியை அடையப்பெறுவதில் நெகிழ்திறன், தகவமைப்பு மற்றும் வலுவான வாடிக்கையாளர் மைய அணுகுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதாக இவ்விருதுகள் காணப்படுகின்றன.