MIOT International, சென்னை, இந்தியா- 1000 படுக்கைகளை கொண்ட பல்துறை மருத்துவமனை, கடுமையான முழங்கால் கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, Genicular Artery Embolization (GAE) எனப்படும் ஒரு அற்புதமான செயல்முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை கொண்ட ஊசித்துளை செயல்முறை முழங்கால் வீக்கத்தைக் குறைத்து வலி நிவாரணத்தை வழங்குகிறது.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, முழங்கால் மூட்டுகளின் படிப்படியான தேய்மானம் மற்றும் மூட்டு குருத்தெலும்பு முற்போக்கான இழப்புக்கு வழிவகுக்கிறது. இது முழங்கால் மூட்டில் உள்ள எலும்புகளுக்கு இடையில் இருக்கும் திசு மெத்தை, முழங்கால் கீழ்வாதம் என்று அழைக்கப்படுகிறது. முழங்கால் எலும்புகள் ஒன்றோடொன்று உராயப்படும்போது கடுமையான வலி, வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது, உட்காருதல், நிற்றல், வளைந்து படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் நடப்பது போன்ற அன்றாட செயல்பாடுகளை பாதிக்கிறது.
கீழ்வாதத்தின் ஆரம்ப அல்லது மிதமான நிலையில் உள்ள நோயாளிகள் மசகெண்ணை மற்றும் மருந்துகள் போன்ற வழக்கமான சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெற முனைகின்றனர்; இருப்பினும், இந்த சிகிச்சைகள் பாரிய பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதை அவர்கள் உணர்கிறார்கள் மற்றும் அவர்களின் சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.
Genicular Artery Embolization:
MIOT இன் ஊடுகதிரியக்கவியல் நிபுணர்களால் வழங்கப்படும், Genicular Artery Embolization (GAE) திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல், பொது மயக்க மருந்துகள் அற்ற மற்றும் சிகிச்சையின் பின் எவ்வித தழும்புகளும் காணப்படாத ஒரு முறையில் செய்யப்படுகிறது. இது நோயாளியை வழக்கமாக 2 நாட்களுக்குள் வைத்தியசாலையை விட்டு வெளியேற உதவுகிறது. முழங்கால் கீல்வாதத்தால் கடுமையான வலியை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது, விஷேடமாக இளம் வயது, ஏனைய comorbid நிலைமைகள் அல்லது அறுவை சிகிச்சைக்கு பயம் காரணமாக மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார் இல்லாதவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
Genicular Artery Embolization எவ்வாறு செய்யப்படுகிறது:
Genicular Artery Embolization போது, இடுப்புப் பகுதியை உணர்ச்சி அற்ற நிலைக்கு கொண்டுவர மயக்க மருந்து உட்செலுத்தப்படுகிறது. எங்கள் சர்வதேச கதிர்வீச்சு மருத்துவர்கள் 2mm கீறல் செய்து நோயாளியின் மேல் தொடையின் தமனியில் ஒரு சிறிய வடிகுழாயைச் உட்செலுத்துவார்கள். MIOT இன் அதிநவீன Biplane CathLab அமைப்பிலிருந்து X-கதிர்களைப் பயன்படுத்துவதன் மூலம் (இந்தியாவில் 1வது), வடிகுழாய் முழங்காலின் புறணிக்கு (Synovium) வழங்கும் தமனிகளுக்கு வழங்குகிறது. சிறிய துகள்கள் வடிகுழாய் வழியாக இந்த தமனிகளுக்குள் செலுத்தப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட நரம்பு இழைகளுக்கு இரத்த விநியோகத்தைத் தடுக்கிறது. இது கீழ்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.
MIOT International பற்றி:
1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட MIOT இன்டர்நேஷனல் 63 சிறப்பு பிரிவுகள் மற்றும் 250 முழுநேர மருத்துவர்களைக் கொண்டு 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகும். இது 14 ஏக்கர் வளாகத்தில் நோயாளிகளுக்கு அதிசிறந்த சேவையை வழங்குகிறது. MIOT இன்டர்நேஷனல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கை நோயாளிகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. இந்த மருத்துவமனையானது சமீபத்திய கண்டுபிடிப்புகள் மூலம் மிக உயர்ந்த சுகாதாரத் தரத்தை நிலைநிறுத்துகிறது. அதிசிறந்த திறமையான முழுநேர மருத்துவர்களின் குழுவை கொண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக, MIOT ஆனது சுகாதாரப் பாதுகாப்பில் தொடர்ந்து புதிய சாத்தியங்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் உலகின் பல “முதற்தடவை” உட்பட பல அற்புதமான நடைமுறைகளை ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும், இந்தியாவிலும் செய்து வருகிறது.
MIOT மருத்துவமனைகள் தகவல் மையம், இலங்கை:
இலங்கையில் உள்ள MIOT மருத்துவமனை தகவல் மையம், இலங்கை மக்களுக்கான உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் புள்ளியாக செயல்படுகிறது. MIOT இன் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளின் அர்ப்பணிப்புள்ள குழுவுடன், MIOT மருத்துவமனைகள் தகவல் மையம், முழுமையான நோயாளிகளின் கவனிப்பை வழங்குகிறது. MIOT India இல் சம்பந்தப்பட்ட நிபுணரை இணைத்தல், விமான நிலையத்திலிருந்து MIOT மருத்துவமனைக்கு நோயாளி பயணம், வெற்றிகரமான சிகிச்சைக்குப் பின் அவர்களது சொந்த இடத்திற்குத் திரும்பும் போதான செலவு, மொழி விளக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் சிகிச்சைத் திட்டத்தை வழங்குகிறது.
No. 30, Queen’s Road, Colombo – 00300, Sri Lanka.
தொலைபேசி எண்: +94 11 2550168,
மின்னஞ்சல்: [email protected]
www.miotinternational.com/mhic-srilanka